Table of Contents

எதில் முதலீடு செய்வது? வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் ஏற்ற முதலீட்டு வழிகள்!

best investment for every phase of life

முதலீடு என்பது நீண்ட காலத்திற்கான ஒரு சேமிப்பு பயணம். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நமது பணத் தேவைகளும் முதலீட்டு திட்டங்களும் மாறிக்கொண்டே இருக்கும். அவசரநிதி உருவாக்குதல் முதல் குழந்தையின் கல்விக்காக சேமிப்பது வரை, அனைவருக்கும் ஒவ்வொரு இலக்கும் இருக்கும். அதனால், எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்யத் தொடங்குகிறோமோ, அவ்வளவு சீக்கிரம் நமது நிதி இலக்குகளை நாம் அடையலாம். 

இன்றைய காலத்தில் முதலீடு செய்ய பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் எந்த  முதலீட்டு வழியை தேர்வு செய்வது என்ற குழப்பம் உங்கள் அனைவருக்கும் இருக்கும். முதலீடு செய்வதில் வெற்றி பெற நீங்கள் பெரிய பொருளாதார நிபுணராக இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் நிதி இலக்குகளையும்  பொருளாதார நிலையையும் புரிந்து கொண்டு அதற்கேற்ற முதலீட்டு உத்திகளை தேர்வு செய்தாலே போதும். 

இந்த வலைப்பதிவு, நீங்கள் முதல் சம்பளம் வாங்கியது முதல் உங்கள் ஓய்வுக்காலத்தை வளமாக்கும் வரை, ஒவ்வொரு காலகட்டத்திலும் பின்பற்ற வேண்டிய சிறந்த முதலீட்டு வழிகளை உங்களுக்கு வழிகாட்டும்.

சரியான முதலீட்டு திட்டங்களை எப்படி தேர்வு செய்வது?

இப்போ இருக்குற பொருளாதாரச் சூழலில், மார்க்கெட் எப்ப, எப்படி மாறும்னு சொல்லவே முடியாது. அதனால, நிலையான வருமானம் தரும் முதலீடுகளைத் தேர்வு செய்வது ரொம்ப முக்கியம். ஷேர் மார்க்கெட், ம்யூச்சுவல் ஃபண்ட்ஸ், ரியல் எஸ்டேட்னு நிறைய முதலீட்டு வழிகள் இருந்தாலும், இன்னும் எளிமையா, சிக்கலில்லாம முதலீடு செய்யணும்னுதான் எல்லாரும் நினைக்கிறாங்க.

சிட் ஃபண்ட்ஸ்ன்னு ஒரு லாபகரமான முதலீட்டு வழி இருக்கு. ஆனால், முதலீடு செய்வதை பற்றி யோசிக்கும் போது, பலருக்கும் இது முதலில் நினைவில் வருவதில்லை. “என்னது சீட்டு போடறதா? அது என் பாட்டி காலத்தில இருந்த முதலீட்டு வழியாச்சே? சின்ன சின்னதா சீட்டு போட்டு எப்படி வீடு காருன்னு வாங்குறது, பிள்ளைங்களை படிக்கவைக்கிறது, பொண்ணுக்கு கல்யாணாத்த பண்றது” ன்னு நினைச்சீங்கன்னா ஒரு நிமிடம் பொறுங்கள்! உங்கள மாதிரிதான் நிறைய பேர் சீட்டுன்னா பழைய காலத்து முதலீடு, ரிஸ்க் அதிகம்ன்னு நினைக்கிறாங்க. ஆனால், நல்லா யோசிச்சு பார்த்தா, இதுவும் நல்ல லாபம் தரக்கூடிய ஒரு முதலீடுதாங்கறது புரியும். நிறைய முதலீட்டு வழிகள் இருந்தாலும், சிட் ஃபண்ட்ஸ்ல பாதுகாப்பும், வளர்ச்சியும், பன்மடங்கு லாபமும் இருக்குன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.

சிட் ஃபண்ட்களின் முக்கியத்துவம்

சிட் ஃபண்ட்ஸ்ன்னா என்னன்னு பல பேருக்கு தெளிவா தெரியாது. “நிறைய ரிஸ்க் இருக்கும், ஈஸியா ஏமாத்திடுவாங்க அதனால, இது ஒரு ஆபத்தான முதலீடு” அப்படினு பலரும் நினைத்து தவிர்த்துவிடுகிறார்கள். ஆனால் உண்மையில், இதுல நிறைய லாபகரமான விஷயங்கள் இருக்கு. நீங்க உங்க வாழ்க்கையில தேடிட்டு இருந்த ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பு இதுவா கூட இருக்கலாம். சிட் ஃபண்ட்களின் நன்மைகள், கிடைக்கக்கூடிய லாபம், மற்றும் ஏன் இது உங்கள் முதலீட்டு திட்டத்தில் ஒரு முக்கியமான பகுதியாக இருக்க வேண்டும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சிட் ஃபண்ட் என்றால் என்ன?

சிட் ஃபண்டுகள், சிட் திட்டங்கள், சீட்டு அல்லது சீட்டு திட்டங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இது ஒரு நிதி ஏற்பாடு ஆகும். இதில் ஒரு குழுவாக பல நபர்கள் ஒன்றாக சேர்ந்து, நீண்ட அல்லது குறுகிய கால முதலீட்டு நோக்கத்துடன் மாசமாசம் ஒரு நிர்ணயிக்கப்பட்ட தொகையை முறையாக செலுத்துகிறார்கள். பின்னர், ஒருவர் பின் ஒருவராக, திரட்டப்பட்ட பணத்தின் மொத்த தொகையை பெறுகிறார்கள். இது ஒவ்வொருவருக்கும் நன்மை பயக்கும், ஒழுக்கமான சேமிப்பை ஊக்குவிக்கும், மேலும் முதலீட்டில் பிலெக்ஸிபிலிட்டியை தரும்.

சிட் ஃபண்ட்கள் ஏன் ஒரு முக்கிய முதலீட்டு யுத்தியாக இருக்கின்றன?

சிட் ஃபண்ட்ஸ்ல யார் வேணும்னாலும் சேரலாம். முதலீடு பத்தி அதிகம் தெரியாதவங்க, குறைவான வருமானம் இருக்கிறவங்க, ஷேர் மார்க்கெட், மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மாதிரி நிறைய விஷயங்களை பத்தி தெரியாதவங்க — இப்படி யார் வேணும்னாலும் சேரலாம். சிட் ஃபண்ட்ஸ்ல சேரத்துக்கு நிறைய டாக்குமெண்ட்ஸோ, கிரெடிட் ஸ்கோரோ தேவையில்லை. அதனால யார் வேணும்னாலும் சேரலாம்.

சீட்டுல மாசம் மாசம் பணம் போடுறதுனால, சேமிக்கிற பழக்கம் வரும். உங்களுக்கு பிடிச்ச சீட்டு திட்டத்துல சேர்ந்துக்கலாம். போனஸ், டிவிடெண்ட்ஸ்னு நிறைய லாபம் கிடைக்கும். அதனால, நீங்க போடுற பணத்தை விட அதிகமான தொகை கிடைக்கும். உங்களுக்கு எதாவது அவசர தேவை இருந்தா நீங்க முழுதாக சீட்டு கட்டி முடிக்கும் முன்னரே ஏலம் கோரி எடுத்துக்கலாம். 

உதாரணத்திற்கு, ஒரு சிறு தொழில் முனைவர்க்கு புதுசா மிஷின் வாங்க ₹50,000 தேவைப்படுதுன்னு வைங்க. பேங்க்ல கடன் கேட்டா தயங்குவாங்க. ஆனா, ஒரு ஐம்பாதாயிருவா சீட்டு திட்டத்துல சேந்தாருனு வச்சுக்கோங்க ஏலம் கேட்டு சீக்கிரமே ஐம்பாதாயிரத்த எடுத்துடலாம்.

இப்போது முதலீட்டு பயணத்தில் முன்னேற, ஒவ்வொரு கட்டத்திலும் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களைப் பார்ப்போம். இது உங்கள் நிதி இலக்குகளை அடைய உதவும்.

இளம் வயதில் சேமிப்புக்கு சிட் ஃபண்ட்ஸ்: ஸ்மார்ட்டான தேர்வு!

இளம் வயசுல நமக்கு எத்தனையோ கனவுகள்! ஆனா வாழ்க்கைன்னா விளையாட்டு மாதிரி, எப்ப, என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது. அதனால, சீக்கிரமே சேமிச்சு வைக்கிறதுதான் புத்திசாலித்தனம். உண்மையை சொல்லணும்னா, இளம் வயசுல சேமிக்கிறது ரொம்ப கஷ்டம். சின்ன வயசுல நெறய செலவு பண்ற மனப்பான்மை இருக்கும். பொதுவா அப்போ அவ்வளவா பெரிய நிதி இலக்குகள் இருக்காது. ஏன்னா அவ்வளவா பொருப்புகள் இருக்காது. 

ஆனா சீட்டுல சேர்ந்தா, மாசமாசம் பணம் கட்டணும். அதனால நீங்கள்  கண்டிப்பா சேமிப்பீர்கள். நீண்ட கால முதலீட்டு இலக்குகளை யோசிக்கிறதுக்கு முன்னாடி, திடீர் செலவுகளுக்கு பணம் எடுத்து வைக்கிறது நல்லது. அவசர தேவைக்கு பணம் இருந்தா, அப்புறம் நீண்ட கால இலக்குகளை பத்தி கவலைப்படாமல் சேமிக்கலாம். 

ஆனால் கொஞ்சமா ஆரம்பிச்சாலும், தவறாம சேமிக்க தொடங்குங்க. இது உங்கள் முதலீட்டுக்கு நல்ல அடித்தளமா இருக்கும்.

நடுத்தர வயது சேமிப்புக்கு சீட்டு: உங்கள் கனவுகளை நனவாக்கும் வழி!

இப்போது நீங்கள் 30-களில் இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.  வாழ்க்கை சூப்பரா போயிட்டிருக்கும். ஆனா, எதிர்காலத்தை பத்தியும் யோசிக்கணும்ல? சொந்தமா வீடு வாங்கணும், குழந்தைங்க படிப்புக்கு சேமிக்கணும், ஏதாவதொரு அவசர தேவை வரலாம், அதுக்கு பணம் வேணும் — இப்படி நிறைய, பெரிய நிதி இலக்குகள் இருக்கும்.

இந்த நேரத்துல, நல்ல லாபம் தரக்கூடிய முதலீடுகளைப் பத்தி நீங்கள் யோசிக்கலாம். சிட் ஃபண்ட்ஸ் அதுக்கு ஒரு நல்ல சாய்ஸா இருக்கும். இதுல, உங்க முதலீடு வளர்ச்சியும் பெரும், பாதுகாப்பும் இருக்கும். உங்க நீண்ட கால இலக்குகளை அடையவும், குறுகிய கால தேவைகளை பூர்த்தி செய்யவும் ஏற்றது. அதாவது நீங்க உங்க நீண்ட கால தேவைகளுக்கு சேமித்துக்கொண்டே இருக்கலாம், அதே நேரத்துல ஏதாவது ஒரு அவசர தேவை வந்தா ஏலத்துல பணத்தை எடுத்துக்கலாம். 

உதாரணத்துக்கு நீங்க ஒரு ஐந்து வருடத்தில் நிலம் வாங்கணும்னோ இல்ல ஒரு வீடு கட்டணும்னோ நினைக்கறீங்கன்னு வைங்க. ஐந்து வருட முதிர்வு காலத்துடன் கூடிய ஒரு சிட் ஃபண்ட் திட்டம் உங்களுக்கு தேவையான ஒரு மொத்த தொகையை வழங்க முடியும்.

அதிக வருமான காலத்தில் முதலீடு எப்படி செய்யலாம்?

இப்போ உங்களுக்கு நடுத்தற வயசு, ஒரு 40-வயசுன்னு, வைத்துக்கொள்வோம். உங்களது வருமானம் அதிகமாக இருக்கும். இந்த வயசுல முதலீடு பண்ணும்பொழுது கொஞ்சம் கவனமா இருக்கணும். ரிஸ்க்கும் பாக்கணும், லாபமும் பாக்கணும், எதிர்காலத்துக்கு பணமும் சேமிக்கணும். தெளிவான நிதி இலக்குகளை வெச்சுக்கிட்டா, உங்க எதிர்காலத்துக்காக சூப்பரா முதலீடு பண்ணலாம். 

சம்பளம் அதிகமாகும்போது, சேமிக்கிற தொகையையும் அதிகப்படுத்துங்க. உங்க நீண்ட கால முதலீட்டு இலக்குகளுக்கு ஏத்த மாதிரி, மாசமாசம் கொஞ்சம் பணத்தை முதலீடு செய்ய மறக்காதீங்க.  நல்ல யோசிச்சு முதலீடு செய்தால், எதிர்கால நிதி நிலைமை மேம்படும்.

ஓய்வு காலம் நெருங்கும்போது எப்படி முதலீடு பண்ணுவது!

50-களிலும், அதற்குப்பின் ஓய்வு காலம் நெருங்கும் போதும் முதலீட்டு வழிமுறைகளை மாற்ற வேண்டும். முக்கியமாக முதலீட்டை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதுடன், வருமானம் தொடர்ந்து வரும் வகையில் அமைத்துக்கொள்ள வேண்டும்.

ஓய்வு காலம் நெருங்கும்போது, உங்கள் முதலீடுகளை நீண்டகால திட்டங்களிலிருந்து குறுகிய கால திட்டங்களாக  மெல்ல மாற்ற வேண்டும். இதனால், தேவையானபோது பணத்தை எளிதாகப் பெறலாம், அதே நேரத்தில் சீரான வருமானம் கிடைக்கும்.

ரிட்டையர்மென்ட் காலத்தில் சிட் ஃபண்ட்ஸ்: ஒரு ஸ்மார்ட்டானா முதலீடு

இப்போது நீங்கள் 60 வயதில் இருக்கீங்க, அதாவது உங்கள் ரிட்டையர்மென்ட் வாழ்க்கையை சந்தோஷமா அனுபவிக்கிற நேரம்.  ஆனால், சேமிச்ச பணம் தீர்ந்து போகக் கூடாதுல்ல? உங்கள் பொன்னான நாட்களை மகிழ்ச்சியுடனும் கழிக்கணும் அதே சமயம் ஓய்வு காலத்திலும் பணம் நீடித்திருக்கும்படி கவனிக்க வேண்டும். அதனால, செலவு பண்ணும் போது கொஞ்சம் கவனமா இருங்க. அப்போதான் ரிட்டையர்மென்ட் காலத்தில சந்தோஷமா இருக்க முடியும்.

இப்போ பொதுவா உங்களுக்கு பெரிதாக வேலை வருமானம்னு இருக்காது. அதனால, அதுக்கு ஏத்த மாதிரி முதலீட்டு திட்டங்களை மாத்திக்கோங்க. சிட் ஃபண்ட்கள் மிக சரியான தேர்வாக இருக்கும்.  ஏன்னாஉங்களால எவ்ளோ பணத்தை முதலீடு பண்ண முடியுமோ அதுக்கேத்த மாதிரி ஒரு திட்டத்தை தேர்தெடுத்துக்கொள்ளலாம்.  சேமிக்கவும் முடியும், தேவைப்பட்டா பணத்தையும் எடுத்துக்கலாம்.

சிட் ஃபண்ட்ஸ்: ஒவ்வொரு வாழ்க்கை கட்டத்திற்குமான முதலீட்டு உத்திகள்

உங்க வயசு என்னவாக இருந்தாலும், முதலீட்டு இலக்கு எதுவாக இருந்தாலும், சிட் ஃபண்ட்ஸ்ல உங்களுக்காக ஒரு முதலீட்டு திட்டம் கண்டிப்பா இருக்கும். சிட் ஃபண்ட்ஸ்ல மாசமாசம் பணம் கட்டறதுனால, ஒழுங்கா சேமிக்க முடியும். எவ்வளவு பணம் போடணும், எவ்வளவு பணம் கிடைக்கும்னு முன்னாடியே தெரியும். ரிஸ்க்கும் குறைவுதான். சேமிக்கவும் கடன் வாங்கவும் இதுல வாய்ப்புகள் இருக்கு. மேலும், சிட் ஃபண்ட்களில் சேர்வதற்கு அடமானம் தேவையில்ல. எனவே, சிட் ஃபண்ட்கள் உங்கள் முதலீட்டு பயணத்தில் ஒரு பயனுள்ள வழியாக  இருக்கலாம்.

ஆனால், சிட் ஃபண்ட்ஸ்ல சேரும்போது சில விஷயங்களை கவனமா பார்க்கணும். நம்பகமான நிறுவனத்துல சேர்றது, சீட்டு எவ்வளவு காலம் நடக்கும்னு தெரிஞ்சிக்கிறது, வட்டி விகிதம் என்னன்னு பாக்குறது — இதெல்லாம் ரொம்ப முக்கியம். இதெல்லாம் தெரிஞ்சுகிட்டு, புத்திசாலித்தனமா முடிவு எடுத்தா, சிட் ஃபண்ட்ஸ் உங்க எதிர்காலத்துக்கு ஒரு சூப்பரான முதலீடா இருக்கும்.

சிட் ஃபண்டுகள் பற்றி ஏதேனும் கேள்விகள் உள்ளதா அல்லது உங்கள் சொந்த முதலீட்டு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா?

கீழே கமெண்ட் பண்ணுங்க, இல்லன்னா எங்களை தொடர்பு கொள்ளுங்க.

Share your views in the comments section!

Your email address will not be published. Required fields are marked *

Powered by Kopuram Chits Private Limited

Fill the Form

We are happy to assist you!