Table of Contents

சேமிப்பு கணக்கு வட்டி vs. சிட் ஃபண்ட் வருமானம்: எது சிறந்த முதலீடு?

savings vs chit best returns

இன்ஸ்டாகிராம்ல உங்க நண்பர்கள் யாராவது புது கார் வாங்கிட்டாங்க, வெளிநாட்டுக்கு டூர் போறாங்க, புது வீடு கட்டிட்டாங்கன்னு போஸ்ட் பார்க்கும்போது “இவங்களுக்கெல்லாம் பணம் எங்கிறது வருது? நாமும் சம்பாரிக்க ஆரம்பிச்சதிலருந்து ஒரு ரூபாய் கூட வீணாக்காம சேமிக்கிறோமே! ஆனா, நம்ம பணம் வேகமா வளரலயே; அப்படியே கிணத்துல போட்ட கல்லு மாதிரி இருக்கே”-னு நெனைச்சதுண்டா? எங்கே தவறு நடக்குதுனு தெரியலையா?

நீங்க உழைப்பதிலும், சேமிப்பதிலும் எந்த தவறும் இல்ல. நீங்க சேமிக்குற விதத்தில்தான் பிரச்சனை இருக்கலாம். பணத்தை எப்படி புத்திசாலித்தனமா பெருக்கறதுனு தெரிஞ்சுக்க, முதல்ல உங்கள நீங்களே கேக்க வேண்டிய கேள்வி: “நம்ம கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்த லாபகரமா பெருக்கணும்னா, எங்க சேமிக்கணும்?” 

பொதுவா சேமிக்கிறதுன்னாலே நமக்கு ஞாபகம் வர்றது சேவிங்ஸ்  அக்கவுண்ட்தான். ஏன்னா நம்ம பணம் பாதுகாப்பாவும் இருக்கும், வட்டியும் வரும், ஒரு தேவைக்கு வேணும்னா நம்ம பணத்தை எடுத்துக்கலாம். ஆனா நீங்க யோசிக்க வேண்டியது என்னனா “உங்களுக்கு இதுல எவ்வளவு லாபம் கிடைக்கும்?” “இப்போ விக்கிற விலைவாசியில வங்கிக் கணக்கில் மட்டும் பணத்தை வைத்து இருந்தால், உங்க பணம் வளருமா?” இதுக்கு பதில் உங்களுக்கே நல்லா தெரியும் — “நிச்சயமாக  இல்லை!”   

அப்போ உங்க பணம் பாதுகாப்பாகவும் இருக்கணும் அதே நேரத்துல நல்ல லாபமும் தரணும் என்று விரும்புகிறீர்களா? உங்கள் பணத்தை வெறுமனே சேமித்து வைப்பதை விட, வேகமாக வளரச் செய்ய வேறு வழிகள் இருக்கிறதா? ஆம், இருக்கிறது – சிட் ஃபண்ட்ஸ்! சிட் ஃபண்ட்ஸ் உங்கள் சேமிப்பைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், விரைவாகப் பெருக்கவும் உதவுகிறது. அதிக வருமானம் மற்றும் தேவைப்படும்போது எளிதாகப் பணம் எடுக்கும் வசதி எனப் பல நன்மைகளை சிட் ஃபண்ட்ஸ் வழங்குகிறது.

சரி இப்போ கேள்வி என்னன்னா சேவிங்ஸ் அக்கவுண்டா இல்ல சிட் ஃபண்ட்ஸா, எது புத்திசாலித்தனமான சேமிப்புக்கான வழி? சேமிப்புக்கும், நிதி வளர்ச்சிக்கும் எது சிறந்த தேர்வு? வாங்க, ரெண்டையும் கம்பேர் பண்ணி உங்க நிதி இலக்குக்கு எது பெஸ்ட்னு பாக்கலாம்.

சேவிங்ஸ் அக்கவுண்ட் – அடிப்படை விஷயங்கள்

சேவிங்ஸ் அக்கௌன்ட் என்பது உங்கள் பணத்தை சேமிப்பதற்கும், வட்டி மூலம் சிறிது கூடுதலாக சம்பாதிப்பதற்கும், தேவைப்படும் போதெல்லாம் உங்கள் பணத்தை எடுத்துக்கொள்வதற்கும் உகந்த ஒரு பாதுகாப்பான வழியாகும். முறையாகச் சேமிக்க உதவுவதற்காக வங்கிகள் இந்த வழிகளை வழங்குகின்றன.

சேவிங்ஸ் அக்கவுண்ட்கள் ஏன் பிரபலமா இருக்கு?

சேவிங்ஸ் அக்கவுண்டின் மிகப்பெரிய அட்வான்டேஜ் என்னவென்றால், அதிலிருந்து பணத்தை எளிதாக எடுத்துக்கொள்ளலாம். இதனால் பலரும் இதை தேர்வு செய்கிறார்கள். மேலும், இதில் இன்னும் சில நன்மைகளும் இருக்கு:

1. எளிதாக பணம் பெறலாம்:

அவசரமான நேரத்தில் பணம் தேவைப்படுதுன்னா, உங்கள் சேமிப்பு வங்கியில் முடங்கி கிடக்காது. நீங்கள் ATM-லயோ, ஆன்லைன் பேங்கிங் மூலமாகவோ, அல்லது வங்கிக்கே நேரில் சென்றோ, உங்கள் பணத்தை எளிதாக எடுத்துக்கொள்ளலாம்.

2. பாதுகாப்பு:

DICGC மூலமாக உங்கள் டெபாசிட் பணம் ₹5 லட்சம் வரை காப்பீடு செய்யப்படும். அதனால நீங்க எந்த வங்கியில உங்க பணத்தை டெபாசிட் செய்தாலும், உங்க பணம் பாதுகாப்பாக இருக்கும்.

3. சேமிப்பு வளரும்:

சேவிங்ஸ் அக்கௌன்ட்ல சேமிக்கும் பணத்திற்கு கிடைக்கும் வட்டி பொதுவாக குறைவாகத்தான் இருக்கும். பல வங்கிகள் ஆண்டுக்கு 3-4% வரைதான் வட்டி வழங்குகின்றன. ஆனாலும், உங்கள் பணம் தொடர்ந்து வளரும்.

சேவிங்ஸ் அக்கவுண்ட்ல உள்ள சில குறைகள்

1. குறைந்த வட்டி:

வங்கிகள் வழங்கும் வட்டி வீதம் சராசரியாக 3-4% தான். ஆனால் பணவீக்கம் (inflation) சராசரியா 6% இருக்கும்போது, உங்கள் பணத்தின் மதிப்பு குறையத்தான் செய்யும்.

2. வளர்ச்சி இருக்காது:

சேமிப்பு கணக்குகள் அவசரத் தேவைகள் மற்றும் குறுகிய கால நிதி இலக்குகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் நீண்ட கால நிதி இலக்குகளை அடைய பொருத்தமாக இருக்காது.

3. கட்டுப்பாடுகள் உண்டு:

பல வங்கிக் கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு தேவை. உங்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கவில்லை என்றால், கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். எனவே, உங்கள் வங்கி கணக்கின் விதிமுறைகளை சரிபார்த்து, குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க வேண்டி இருக்கும்.

4. பராமரிப்பு கட்டணங்கள்:

வங்கிகளில், கணக்கை பராமரித்தல் மற்றும் சேவைகளை வழங்குதல் போன்ற காரணங்களுக்காக பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படும். 

5. வரி விதிக்கப்படும்:

வங்கிகளில் கிடைக்கும் வட்டி வருமானம் உங்களோட மொத்த வருமானத்துடன் சேர்க்கப்பட்டு அதற்கேற்றாற்போல் வரி விதிக்கப்படும்.

6. செலவழிக்கும் எண்ணத்தை தூண்டும்:

நீங்கள் நினைக்கும்பொழுதெல்லம் பணம் எடுக்கலாம் என்பதால் சேமிப்பதை விட செலவழிக்கும் வாய்ப்பு அதிகம்.

7. சேமிக்க ஊக்கமளிக்காது:

வங்கிகள் குறைந்த வட்டி வழங்குவதாலும், அதிக வருமானம் கிடைக்காததாலும், சேமிக்கும் ஆர்வம் தோன்றாது.

8. பணவீக்கத்திலிருந்து பாதுகாப்பு இல்லை:

பணவீக்கம் அதிகரிக்கும்போது உங்களோட சேமிப்பின் மதிப்பு குறையும்.

அதனால், நீண்ட கால நிதி தேவைக்களுக்கான சேமிப்பிற்கும் அதிக வருமானத்தை ஈட்டுவதற்கும் நீங்கள் சிட் ஃபண்ட்ஸ் மாதிரி வேற நிதி வாய்ப்புகளைத்தான் தேடணும். 

savings account drawbacks

சிட் ஃபண்ட்ஸ்: சூப்பர் சேமிப்பு!

சிட் ஃபண்ட்ஸ்ல சேர்றது ரொம்ப சுலபம்.  இதுல பலவிதமான திட்டங்கள் இருக்கு. மாசமாசம் கட்ட வேண்டிய தொகையை முடிவு பண்ணி உங்க நிதி வசதிக்கு ஏத்த மாதிரி ஒரு திட்டத்தை நீங்க தேர்ந்தெடுத்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு சேமிக்கலாம். உங்க பணம் பத்திரமாவும் இருக்கும், அதே சமயம் நிறைய லாபமும் கிடைக்கும். அதுமட்டுமில்லாம, உங்களுக்கு திடீர்னு பணம் தேவைப்பட்டா மொத்தமாகவும் எடுத்துக்கலாம்.

சிட் ஃபண்ட்ஸை ஏன் தேர்ந்தெடுக்கணும்?

1. சேமிக்கவும் கடன் பெறவும்:

உங்களுக்கு உடனடி பணத் தேவையில்லை என்றால், நீங்கள் செலுத்தும் மாதாந்திர தொகை சேமிப்பாக தொடரும். ஆனால், உங்களுக்கு பணம் அவசரமாக தேவைப்படும்பொழுது, உங்களது சீட்டு மதிப்பிற்கான முழு தொகையையும் ஏலம் கோரி பெற்றுக்கொள்ளலாம்.

2. அதிக வருமானம்:

வங்கி சேமிப்பு கணக்குகளின் குறைவான வட்டி வீதத்தைக் காட்டிலும், சிட் ஃபண்ட்ஸில் உறுப்பினர்களுக்கு லாப பகிர்வாக (dividends) அதிக வருமானம் கிடைக்கும். இது சிறப்பான நிதி வளர்ச்சிக்கு உதவும்.

3. ஃப்ளெக்ஸிபிளா பணம் கிடைக்கும்:

உங்களுக்கு அவசர தேவைக்காகவோ அல்லது எதிர்பாராத செலவுகளுக்காகவோ பணம் தேவைப்படும்பொழுது வங்கிக் கடன் மாதிரி அதிகமான ஆவணங்கள் இல்லாமல் எளிதாக உங்கள் பணத்தைப் பெறலாம்.

சேமிப்பு கணக்கு வட்டி vs. சிட் ஃபண்ட் வருமானம்: எது பெஸ்ட்?

வாங்க, சேவிங்ஸ் அக்கவுண்ட்ல கிடைக்கிற வட்டியையும் (வருஷத்துக்கு 2-4% தான்) சிட் ஃபண்ட்ஸ்ல கிடைக்கிற வருமானத்தையும் (12% ரிட்டர்ன்ஸ்) ஒப்பிட்டுப் பார்த்து, எது சிறந்தது என்பதை முடிவு செய்யலாம்.

காட்சி 1: சேவிங்ஸ் அக்கவுண்ட் முதலீடு

நீங்க மாசமாசம் ₹10,000ன்னு பத்து மாசத்துக்கு ஒரு சேவிங்ஸ் அக்கவுண்ட்ல போடுறீங்கன்னு வச்சுக்கோங்க. அதற்கு வட்டி வருஷத்துக்கு 4%-னா, பத்து மாசம் கழிச்சு உங்க அக்கவுண்ட்ல மொத்தமா ₹1,01,513.41 இருக்கும். இதுல ₹1,00,000 உங்க முதலீடு, ₹1,513.41 வட்டியா கிடைச்சது. அப்போ உங்களுடைய நிகர லாபம் ₹1,513.41.
  • மாத தவணை: ₹10,000

  • கால அவகாசம்: 10 மாதங்கள்

  • 10 மாதங்களுக்கு பிறகு கிடைக்கும் தொகை: ₹1,01,513.41

  • கிடைத்த வட்டி: ₹1,01,513.41 – ₹1,00,000 = ₹1,513.41

காட்சி 2: சிட் ஃபண்ட்ஸ் முதலீடு

நீங்கள் 10 உறுப்பினர்கள் உள்ள ஒரு நிரந்தர டிவிடெண்ட் சிட் ஃபண்ட் திட்டத்தில் ₹1,00,000 மதிப்புள்ள திட்டத்தில் சேருகிறீங்கன்னு வச்சுக்கோங்க. இது ஒரு நிரந்தர டிவிடெண்ட் சிட் ஆக இருப்பதால், ஒவ்வொரு உறுப்பினருக்கும் உறுதிசெய்யப்பட்ட டிவிடெண்ட்கள் கிடைக்கும்l. எனவே நீங்கள் மாதத்தவனையாக  ₹10,000-ஐ விட குறைவான தொகையைதான் செலுத்த வேண்டிருக்கும். இதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு என்பதைப் பார்ப்போம்:
  • மொத்த சீட்டு மதிப்பு: ₹1,00,000

  • உங்கள் மொத்த பங்களிப்பு தொகை: ₹89,050
  • 10 மாதங்களுக்கு பிறகு கிடைக்கும் தொகை: ₹95,000

  • கிடைத்த லாபம்: ₹6,000

சிட் ஃபண்ட்ஸ் vs. சேவிங்ஸ் அக்கவுண்ட்: லாப ஒப்பீட்டு பகுப்பாய்வு

1. பெறும் லாபம்:

  • பேங்க் அக்கவுண்ட்ல குறைந்த வட்டி கிடைக்குறதுனால லாபமும் குறைவாத்தான் கிடைக்கும். 
  • சிட் ஃபண்ட்ஸ்ல ஃபிக்ஸ்டு டிவிடெண்ட்ஸ் கிடைப்பதால் நீங்கள் மாசமாசம் செலுத்த வேண்டிய தொகை கம்மியாகுது. அதனால இதில் ₹6,000 லாபமா கிடைக்குது. சேவிங்ஸ் அக்கவுண்ட்டின் குறைந்த வட்டி வருமானத்துடன் ஒப்பிடும் போது சிட் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வதால்  நீங்கள் அதிக லாபம் பெறலாம் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளமுடிகிறது.

2. பெறும் முறை:

  • சேவிங்ஸ் அக்கவுண்ட்ல கூட்டு வட்டி மூலமா வருமானம் வரதுனால  உங்களோட முதலீட்டோட கால அளவு அதிகரிக்க அதிகரிக்கத்தான் வருமானமும் வளரும். ஆகவே இது குறுகிய காலத்திற்கு ஒப்பீட்டளவில் லாபகரமானதாக இருக்காது.
  • சிட் ஃபண்ட்ஸ்ல, குறிப்பா ஃபிக்ஸ்டு டிவிடெண்ட் மாடல் சிட் ஃபண்ட்ஸ்ல, உங்களுக்கு மாசமாசம் டிவிடெண்ட்ஸ் கிடைக்கும். அதனால அதிக வருமானம் கிடைக்கும்.

3. முதலீட்டின் பயன்:

  • சேவிங்ஸ் அக்கவுண்ட்ல ₹1,00,000 போட்டா ₹1,513.41 தான் லாபம் கிடைக்குது.
  • ஆனா சிட் ஃபண்ட்ஸ்ல ₹89,050 கட்டினா ₹95,000 கிடைக்குது. அதாவது உங்களுக்கு ₹6,000 லாபமாக கிடைக்குது.  

சிட் ஃபண்ட்ஸ் vs. சேமிப்பு கணக்கு: எது பெஸ்ட்?

சிட் ஃபண்ட்ஸ்ல சேவிங்ஸ் அக்கவுண்ட்ட விட வேற நிறைய அட்வான்டேஜஸ் இருக்கு! என்னென்னன்னு பாக்கலாமா?

1. அதிக லாபம்:

சிட் ஃபண்ட்ஸ்ல உங்க பணத்த போட்டா, கொஞ்ச நாள்லேயே நல்ல ரிட்டர்ன்ஸ் (12% வரை) கிடைக்கும். உடனடியா லாபம் பாக்கனும்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு நல்ல சாய்ஸ்.

2. உறுதியான வருமானம்:

சேவிங்ஸ் அக்கவுண்ட்டில் பொதுவாக 3-4% வரைதான் வட்டி கிடைக்கும். விலைவாசி உயர்வு அதிகமாக இருந்தால், உங்கள் சேமிப்பு கணக்கில் இருக்கும் பணத்தின் மதிப்பு குறையலாம். ஆனால் சிட் ஃபண்ட்ஸ்ல அனைத்து உறுப்பினர்களுக்கும் உறுதியளிக்கப்பட்ட டிவிடெண்ட் தொகை கிடைப்பதால் உங்கள் முதலீட்டிற்கு அதிக லாபம் கிடைக்கும்.

3. கடன் வாங்கறது ஈஸி

உங்களுக்கு அவசர தேவைக்காக பணம் தேவைப்படுதுனு வைங்க, வங்கிக் கணக்குகளில் பணம் எடுக்க நினைசீங்கன்னா ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல எடுக்க அங்க சில விதிமுறைகள் இருக்கும். சில நேரங்களில் அபராதமும் விதிக்கப்படலாம். ஆனால் சிட் ஃபண்டுகளில் அந்த மாதிரி எந்த விதிமுறைகளோ அபராதமோ இல்லை.

4. ஒருங்கிணைந்த சேமிப்பு:

சிட் ஃபண்ட்ஸ்ல நீங்க சேமிக்கிற பணம் மத்தவங்களுக்கும் அவங்களோட நிதி தேவைகளை பூர்த்தி செய்ய உதவும். இது ஒரு கூட்டு முயற்சி மாதிரி, ஒருவருக்கொருவர் உதவும் சேமிப்பு முறையாக இருக்கும். அதே நேரத்தில் உங்களுக்கும் உறுதியா வருவாய் கிடைக்கும்.

5. தேவைக்கேற்ப திட்டங்கள்:

வங்கிக் கணக்குகள்ள பொதுவாக நிச்சயிக்கப்பட்ட வட்டி விகிதம் மட்டும்தான் கிடைக்கும். ஒரு திட்டத்துலருந்து இன்னொரு திட்டத்திற்கு மாற்றிக்கொள்ள முடியாது. ஆனா சிட் ஃபண்ட்ஸ்ல உங்க தேவைக்கேற்ப சீட்டு திட்டங்களை தேர்வு செய்யலாம். அதனால சிட் ஃபண்ட்ஸ் உங்க நிதி இலக்குகளுக்கு நல்லா பொருந்தும்.

சிட் ஃபண்ட்ஸால் யாருக்கு அதிக பயன்?

சிட் ஃபண்டுகள் வெறும் சேமிப்புத் திட்டம் மட்டுமல்ல; புத்திசாலித்தனமாக நிதி கையாள விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த வழி. சிட் ஃபண்டுகள் யாருக்கெல்லாம் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்:

1. சிறிய வியாபாரிகளுக்கு:

சிறிய வியாபாரிகளுக்கு தொழில் விரிவாக்கத்திற்காக பணம் தேவைப்படும்போது எளிதாகப் பெறலாம்.

2. உத்தரவாதமான சேமிப்பை விரும்புபவர்கள்:

சிட் ஃபண்டுகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முதிர்ச்சியடையும் திட்டங்களைக் கொண்டுள்ளன. அதனால் குறுகிய அல்லது நீண்ட காலத்தில் நிறைவேற்ற வேண்டிய இலக்குகளான வீடு புதுப்பித்தல், கல்விச் செலவுகள், அல்லது திருமணச் செலவுகள் போன்ற நிதி இலக்குகளுக்காக சேமிக்க சிட் ஃபண்டுகள் ஒரு நல்ல வழி.

3. சேமிக்கும் பழக்கம்:

நாம் மாதமாதம் தொடர்ந்து சேமிப்பது ஒரு கடினமான செயல். ஆனால் சிட் ஃபண்ட் திட்டங்களில் சேர்ந்து விட்டால் நீங்கள் கண்டிப்பாக உங்களது தவணையை மாதாமாதம் பணம் செலுத்த வேண்டும். இது ஒரு ஒழுக்கமான சேமிப்புப் பழக்கத்தை உருவாக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் ஒரு நிலையான சேமிப்பு திட்டத்தைப் பின்பற்றவும் வழிவகுக்கும்.

4. அவசர காலத் தேவைகளுக்குப் பணம் தேவைப்படுபவர்கள்:

சிட் ஃபண்ட் திட்டங்களில் அவசரத் தேவைக்காக நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் ஏலம் கூறி பணம் எடுக்கலாம். ஆனால், சில வங்கித்திட்டங்களில் முதிர்ச்சிக்கு முன்னரே பணம் எடுக்க சில நிபந்தனைகள் மற்றும் அபாரதம் விதிக்கப்படலாம்.

5. கூடுதல் வருமானம் விரும்புபவர்கள்:

சிட் ஃபண்டுகளில் சேமிக்கும்போது கிடைக்கும் லாபத் தொகையானது  வங்கிக் கணக்குகளில் சேமிக்கும்பொழுது கிடைக்கும் வட்டியை விட   அதிகமாக இருக்கும். மேலும், சிட் ஃபண்டுகளில் முதிர்ச்சிக்கு முன்னரே ஏல முறையில் பங்கேற்று பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

6. முதலீடு செய்வதில் ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்கள்:

முதலீடு செய்யத் தொடங்கும் நபர்களுக்குச் சிட் ஃபண்டுகள் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இது சிறிய தொகையில் முதலீடு செய்து பெரிய அளவில் லாபம் பெற உதவுகிறது.

7. கடன் இல்லாத வாழ்க்கை வாழ விரும்புபவர்கள்:

நீங்கள் உங்கள் செலவுகளைத் திட்டமிட்டு சீட்டு திட்டங்களில் முதலீடு செய்தால் அதிலிருந்து பெறும் பரிசுத் தொகையைக் கொண்டு உங்கள் உங்களது செலவுகளை சுலபமாக சமாளிக்க முடியும்.

சேமிப்புக் கணக்கில் மட்டும் முதலீடு செய்தால் போதுமா?

உண்மையை சொல்லப்போனால், சேவிங்ஸ் அக்கவுண்ட்கள் பணப்புழக்கத்திற்கு சிறந்தவை. ஆனால் அவற்றின் வளர்ச்சி திறன் மிகவும் குறைவு, ஏனெனில் வட்டி விகிதம் ரொம்ப கம்மி. பெரும்பாலும் பணவீக்கத்தைக் கூட மிஞ்ச முடியாது. ஆனால் சிட் ஃபண்டுகளில் சேமித்தால் நம்ம பணம் நல்லா வளர்றது வாய்ப்புக்கு இருக்கு.
savings account vs chit fund comparison

சிட் ஃபண்டுகள்: சந்தேகங்களும், உண்மைகளும்!

சிட் ஃபண்டுகள் பற்றி நிறைய பேருக்கு சில தவறான கருத்துகள் இருக்கும். வாங்க, எல்லாத்தையும் தெளிவா அலசி ஆராய்ந்துப் பார்த்து ஒழுங்குபடுத்தப்பட்ட சிட் ஃபண்ட்ஸ் எப்படி ஒரு நம்பகமான சேமிப்பு வழியா இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்.

1. தவறான கருத்து: சிட் ஃபண்ட்ஸ் பாதுகாப்பானது இல்ல!

உண்மை:

இது நிறைய பேர் சொல்றதுதான். ஆனா உண்மை என்னன்னா, ஒழுங்குபடுத்தப்பட்ட சிட்ஃபண்ட் நிறுவனங்கள் எல்லாம் 1982-ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட சீட்டு நிதிச் சட்டம் வகுத்துள்ள கடுமையான வழிகாட்டுதல்களின் கீழ் செயல்படுகின்றன. அனைத்து சிட்ஃபண்ட் நிறுவனங்களும் இந்த சட்டதிட்டங்களை கண்டிப்பாக கடைபிடித்தேயாகவேண்டும். இது வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. சேமிப்பு கணக்குல வட்டி ஏறி இறங்கும். அதனால ரிட்டர்ன்ஸ் எப்படி இருக்கும்னு சொல்ல முடியாது. ஆனா சிட் ஃபண்ட்ஸ்ல ஒரு கட்டமைப்பு இருக்கு. உங்க பணம் அரசாங்கத்தோட கண்காணிப்புல பத்திரமா இருக்கும்.

2. தவறான கருத்து: சேவிங்ஸ் அக்கவுண்ட்களை விட சிட் ஃபண்ட்ஸ்ல ரிஸ்க் அதிகம்!

உண்மை:

சேவிங்ஸ் அக்கவுண்ட்கள்ள பணம் பத்திரமா இருக்கும்ங்கிறது உண்மைதான். ஆனால் அதுல வட்டி ரொம்ப கம்மி. வருஷத்துக்கு வெறும் 3-4% தான் கிடைக்கும். அதனால உங்களது முதலீடு பெருசா வளராது. ஆனால் சட்டப்படி நிர்வகிக்கப்படும் சிட் ஃபண்ட்ஸ்ல ரிஸ்க் அனேகமாக இருக்காதென்பதோடு டிவிடெண்ட் மூலமாக அதிக ரிட்டர்ன்ஸும் கிடைக்க வாய்ப்பு இருக்கு.

3. தவறான நம்பிக்கை: சிட் ஃபண்டில் வெளிப்படைத்தன்மை இருக்காது?

உண்மை:

வெளிப்படைத்தன்மைதான் சிட் ஃபண்ட்களின் முதுகெலும்பு. சட்டப்படி நிர்வகிக்கப்படும் சிட் ஃபண்ட் நிறுவனங்கள் பொதுவான விதிமுறைகள், ஏல முறைகள், மற்றும் கிடைக்கும் வருவாயை முதலான அனைத்து விவரங்களையும்  ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் சீட்டு திட்டங்களில் சேரும் முன்பே விளக்குகின்றன.

why chit funds best choice

சிட் ஃபண்ட்ஸ்ல சேருவதற்கான டிப்ஸ்

1. நல்லா விசாரிச்சு நம்பகமான சிட் ஃபண்ட்ஸ் கம்பெனியா பார்த்து செலக்ட் பண்ணுங்க.

2. சிட் ஃபண்ட்ஸ் திட்டங்களோட ரூல்ஸ், டீடைல்ஸ் எல்லாத்தையும் நல்லா தெரிஞ்சுக்கோங்க.

3. சீட்டு திட்டங்கள் எப்படி வேலை செய்கின்றன, அவை உங்களுக்கு எவ்வாறு பயனளிக்கின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

4. முதலில் சிறிய தொகையுடன் தொடங்குங்கள்.

சிட் ஃபண்ட்ஸ்: புத்திசாலித்தனமாக சேமிக்க ஒரு சிறந்த வழி!

உங்க பணத்தை சேவிங்ஸ் அக்கவுண்ட்ல போட்டா கம்மியான வட்டிதான் கிடைக்கும். ஆனால் சிட் ஃபண்ட்ஸ்ல  போட்டா அதிக வருமானம் கிடைக்கும். அதுமட்டுமில்லாம, உங்களுக்கு எப்ப பணம் தேவையோ அப்போ மொத்தமா எடுத்துக்கலாம். அதுவும் எந்த பெனால்ட்டியும் இல்லாம. சிட் ஃபண்ட்ஸ்ல சேர்றதுனால இன்னும் நிறைய பெனிஃபிட்ஸும் இருக்கு. பேங்க்ல கிடைக்கிறத விட சிட் ஃபண்ட்ஸ்ல அதிக லாபம் கிடைக்கும். உங்க பணம் சீக்கிரமா வளரும். மாசமாசம் குறிப்பிட்ட தொகைய சிட் ஃபண்ட்ஸ்ல போடறதுனால உங்களுக்கு ஒரு சேமிப்பு பழக்கம் உருவாகும். உங்க தேவைக்கும், வசதிக்கும் ஏத்த மாதிரியான திட்டங்கள தேர்ந்தெடுத்துக்கலாம். 

இன்னும் என்ன யோசிக்கிறீங்க? சிட் ஃபண்ட்ஸ்ல சேமிச்சு உங்க பணத்த புத்திசாலித்தனமா வளர்த்துக்கோங்க!

Share your views in the comments section!

Your email address will not be published. Required fields are marked *

Fill the Form

We are happy to assist you!

Powered by Kopuram Chits Private Limited