Table of Contents

RD கால்குலேட்டர்: சிறிய சேமிப்பில் பெரிய லாபம் பெறுவது எப்படி?

RD blog banner tamil

நல்லா சேமிக்கணும், நம்ம சேமிப்பு பன்மடங்கா வளரணும்னு எல்லாருக்கும் ஆசை இருக்கும். ஆனால் எப்படி சேமிக்கணும்? எதில் முதலீடு பண்ணணும்? அந்தப் பணம் எப்படி வளரும்னு தெரியாம கொஞ்சம் குழப்பமா இருக்கா? உங்கள் சேமிப்பை எளிமைப்படுத்தி, உங்கள் பணம் எவ்வளவு வளரும் என்பதை சரியாகப் பார்க்க விரும்புகிறீர்களா? கவலைப்படாதீங்க. எல்லாத்துக்கும் ஒரு சுலபமான தீர்வு இருக்கு – RD கால்குலேட்டர்.

RD கால்குலேட்டர் உங்க நிதி எதிர்காலத்த சூப்பரா திட்டமிட உதவும். உங்க மாதாந்திர கான்ட்ரிபியூஷன் (contribution) காலப்போக்குல எவ்வளவு வளரும்னு இதுல ஈஸியா தெரிஞ்சுக்கலாம். எந்த டென்ஷனும் இல்லாம உங்க சேமிப்பு எவ்வளவு வளரும்னு தெரிஞ்சுக்கலாம்.

RD கால்குலேட்டர் யூஸ் பண்ணி உங்க முதலீட்ட மேம்படுத்த ரெடியா? வாங்க, RD கால்குலேட்டர எப்படி பயன்படுத்தலாம்னு டீடைலா பாக்கலாம்.

RD கால்குலேட்டர்னா என்ன? இது உங்க நிதித் திட்டமிடலுக்கு எப்படி உதவும்?

இந்த RD கால்குலேட்டர் உங்க ரெக்கரிங் டெபாசிட்ல (Recurring Deposit – RD) இருந்து எவ்வளவு லாபம் கிடைக்கும்னு ஈஸியா கண்டுபிடிக்க உதவும். நீங்க மாச மாசம் எவ்வளவு போடுறீங்க, வட்டி விகிதம் என்ன, எத்தனை வருஷத்துக்குப் போடுறீங்க, இது எல்லாத்தையும் வெச்சு சேமிப்பு காலம் முடியும் போது எவ்வளவு தொகை கிடைக்கும்னு உடனே சொல்லும். கஷ்டப்பட்டு கணக்கு போட்டு குழம்பாம, சரியான முடிவெடுக்கவும், உங்க சேமிப்ப பெருக்கவும் RD கால்குலேட்டர் உதவும்.

ஏன் RD கால்குலேட்டர் பயன்படுத்தவேண்டும்

துல்லியமான நிதித் திட்டமிடல்:

RD கால்குலேட்டர் உங்கள் சேமிப்புகள் வருங்காலத்துல எவ்வளவு அதிகரிக்கும் என்பதை துல்லியமாகக் கணிக்க உதவுகிறது. இதனால, நம்மளோட நிதி இலக்குகளை தெளிவா நிர்ணயிச்சுக்கலாம்.  எவ்வளவு சேமிக்கணும், எப்போ இலக்கை அடையலாம்னு கணிக்கிறது ரொம்ப சுலபமாகும்.

சுலபமா பயன்படுத்தலாம்:

RD கால்குலேட்டர் யூஸ் பண்றது ரொம்ப ரொம்ப ஈஸி. மாச மாசம் எவ்வளவு பணம் போடுறீங்க, வட்டி விகிதம் எவ்வளவு, எத்தனை வருஷத்துக்கு பணம் போடுறீங்க — இந்த மூணு விஷயத்த சொன்னா போதும். மத்த எல்லாத்தையும் RD கால்குலேட்டர் பாத்துக்கும். நிதி நிர்வாகம் பத்தி எதுவும் தெரியலைன்னாலும் பரவாயில்லை RD கால்குலேட்டர் தானாகவே உங்கள் முதலீட்டுக் கணக்குகளைச் செய்யும்.  எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடியதாகவும், அனைவருக்கும் ஏற்றதாகவும் இது உள்ளது.

உடனே ரிசல்ட்:

கணக்கு போட்டு மண்டைய பிச்சுக்க வேண்டிய அவசியமே இல்ல. விவரத்தை உள்ளிட்ட அடுத்த நிமிஷமே ரிசல்ட் கண்ணு முன்னாடி வந்துரும். உங்களுடைய சேமிப்போட மெச்சூரிட்டி தொகை எவ்வளவு, மொத்த வட்டி எவ்வளவுன்னு உடனே தெரிஞ்சுக்கலாம். சீக்கிரமா ரிசல்ட் கிடைக்கிறதுனால, நம்ம சேமிப்பு திட்டத்த பத்தி உடனே ஒரு முடிவுக்கு வரலாம். எந்த  முதலீட்டுத் திட்டத்தை தேர்வு செய்தால் லாபம்னு ஈஸியா கண்டுபிடிக்கலாம்.

ஒப்பீடு செஞ்சு பாருங்க:

பல்வேறு முதலீட்டுத்திட்டங்கள ஒப்பீடு பண்ணுவதற்கு RD கால்குலேட்டர் ரொம்ப உதவியா இருக்கும். ஒவ்வொரு திட்டத்துலயும் வட்டி விகிதம் எவ்வளவுன்னு ஈஸியா ஒப்பிட்டு பார்த்து உங்களுடைய நிதி இலக்குகளுக்கு ஏற்றபடி சிறந்த முதலீட்டு திட்டத்தைத் தேர்வு செய்ய முடியும்.

புத்திசாலித்தனமான முதலீட்டு திட்டமிடல்:

சுற்றுலா போகணும், புது கார் வாங்கணும், இல்ல அவசர தேவைகளுக்கு பணம் சேமிக்கணும் இப்படி எந்த இலக்குகளுக்காக நீங்கள் சேமிக்க நினைத்தாலும், RD கால்குலேட்டர் உங்களுடைய மாதாந்திர சேமிப்புத் திட்டத்தை சரியாக திட்டமிட உதவும். மாசம் எவ்வளவு சேமிச்சா உங்க இலக்கை அடையலாம்னு தெளிவா சொல்லும்.  இதனால உங்க நிதித் திட்டமிடல் இன்னும் சூப்பராகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

ரிஸ்க் இல்லாம வருமானம்:

RD-கால்குலேட்டர் மூலம் உங்கள் முதலீட்டின் முடிவில் கிடைக்கும் தொகையை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். அதனால, ரிஸ்க் அதிகமா இருக்குற முதலீடுகளை விட பாதுகாப்பான, உத்தரவாதமிக்க வருவாய் அளிக்கக்கூடிய முதலீடுகளை தேர்வு செய்யவதற்கு உதவும். 

சூப்பரா பட்ஜெட் போடலாம்:

RD கால்குலேட்டர் மூலம் உங்கள் மாதாந்திர சேமிப்பு, வட்டி விகிதம், மற்றும் எதிர்பார்க்கப்படும் வருமானம் எல்லாத்தையும் பற்றி தெளிவா தெரிஞ்சுக்கலாம். அதனால் மாதாந்திர பட்ஜெட் போடுறது ரொம்ப ஈஸியாகிடும். எவ்வளவு சேமிக்கிறோம்னு தெரிஞ்சா, அதுக்கு ஏத்த மாதிரி செலவு பண்ணலாம்.

RD calculator usage

RD கால்குலேட்டரை எப்படிப் பயன்படுத்துவது?

RD கால்குலேட்டர் மூலம் உங்கள் சேமிப்பை மேம்படுத்த விரும்புகிறீர்களா? அதனைப் பயன்படுத்துவது எப்படி என்று தெரியவில்லையா? இந்த படிப்படியான வழிகாட்டுதலைப் பின்பற்றி உங்கள் சேமிப்பை எளிதாக திட்டமிடுங்கள். 

படி 1: மாதா மாதம் எவ்வளவு சேமிக்கப் போறீங்கன்னு முடிவு பண்ணுங்க

முதல்ல, நீங்க மாதா மாதம் உங்க ரெக்கரிங் டெபாசிட்ல எவ்வளவு பணம் போடணும்னு முடிவு பண்ணிக்கோங்க. இந்தத் தொகை உங்க மாத வருமானத்துல இருந்து சுலபமா எடுக்கக்கூடிய தொகையா இருக்கணும்.  அதாவது, கஷ்டப்படாம சேமிக்க முடியனும். அந்த தொகைய RD கால்குலேட்டர்ல உள்ளிடுங்கள் [என்டர் பண்ணுங்க].

படி 2: வட்டி வீதத்தை (Interest Rate) உள்ளிடவும்

அடுத்தது, நீங்க எந்த வங்கில அல்லது நிதி நிறுவனத்துல RD ஓப்பன் பண்ணப்போறீங்களோ, அவங்க தருகிற வட்டி விகிதம் என்னன்னு பாருங்க. இது ரொம்ப முக்கியம், ஏன்னா இதுதான் உங்க டெபாசிட்லருந்து எவ்வளவு வட்டி கிடைக்கும்னு தீர்மானிக்கும். வட்டி வீதத்தையும் RD கால்குலேட்டரில் உள்ளிடவும். சரியா போடுங்க, பொதுவா வருஷத்துக்கு இவ்வளவுன்னு சொல்வாங்க. அதே மாதிரியே போடுங்க.

படி 3:  எத்தனை வருஷம்னு முடிவு பண்ணுங்க:

உங்க RD டெனூர முடிவு பண்ணுங்க. டெனூர்னா எத்தனை வருஷத்துக்கு பணம் போடப்போறீங்கன்னு அர்த்தம். பொதுவா 6 மாசத்துல இருந்து 10 வருஷம் வரைக்கும் இருக்கும். பேங்க்க பொறுத்து இது மாறும். நீங்கள் எவ்வளவு காலம் பணம் சேர்க்க விரும்புகிறீர்களோ அல்லது உங்கள் நிதி இலக்குக்கோ ஏத்த மாதிரி ஒரு டெனூர (சரியான கால அளவு) தேர்ந்தெடுத்து கால்குலேட்டர்ல உள்ளிடவும்.

படி 4: கால்குலேட் பண்ணுங்க:

இப்போது, கால்குலேட் [Calculate] பட்டனை அழுத்துங்கள்! நீங்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் RD கால்குலேட்டர் மொத்த முதிர்வுத்தொகையை (Maturity Amount) உடனே கணக்கிடும். இதுல நீங்க சேமித்த தொகை + சேரும் வட்டி ரெண்டும் சேரும். உங்களுக்கு மொத்தமா எவ்வளவு மெச்சூரிட்டி அமௌன்ட் வரும்னு உடனே தெரிஞ்சுக்கலாம்.

படி 5: ரிசல்ட்ட பாருங்க:

கணக்கீடு முடிந்ததும், RD கால்குலேட்டர் உங்களுக்கு மொத்தம் கிடைக்கும் மெச்சூரிட்டி தொகையை காட்டும்.  இதுல அசல் (நீங்க போட்ட மொத்த பணம்) மற்றும் கிடைச்ச வட்டி ரெண்டும் இருக்கும். இந்தத் தகவலை பாத்து உங்க சேமிப்பு எவ்வளவு வளரும் அதனால உங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்னு தெரிஞ்சுக்கலாம்.

how to use RD calculator

சிறந்த திட்டத்தைத் தேர்ந்தெடுங்க:

RD கால்குலேட்டரின் சிறப்பு என்னவென்றால், மாச மாசம் நீங்க எவ்வளவு பணம் போடப்போறீங்க, அதுக்கு வட்டி எவ்வளவு, எத்தனை வருஷத்துக்கு போடப்போறீங்கன்னு எல்லாத்தையும் மாத்தி மாத்தி பாத்து ரிட்டர்ன்ஸ் எப்படி மாறுதுன்னு தெரிஞ்சுக்கலாம். உங்க வசதிக்கும், தேவைக்கும் ஏத்த மாதிரி சரியான சேமிப்பு திட்டத்தைத் தேர்ந்தெடுக்க இது உதவும்.

முதலீட்டை திட்டமிடுங்கள்!

RD கால்குலேட்டரில் கிடைத்த தகவல்களை வைத்து சரியான முதலீட்டு முடிவுகளை புத்திசாலித்தனமா எடுக்கலாம். நீங்கள் ஒரு குறிப்பிட்ட இலக்கிற்காக சேமிக்கிறீர்களா? அல்லது அவசர தேவைகளுக்காக சேமிக்கிறீர்களா? எந்த நோக்கமாக இருந்தாலும், நல்லா திட்டமிட்டு சேமிக்க RD உங்களுக்கு உதவும்.

உங்க பணத்த எப்படி புத்திசாலித்தனமா கையாண்டு லாபமடையலாம்

உங்கள் நிதி எதிர்காலத்தை பாதுகாக்க, திட்டமிடுதல் ரொம்ப முக்கியம்.  நம்மளோட எதிர்காலத்தப் பத்தி ஒரு தெளிவான திட்டம் இருந்தா, நம்ம சேமிக்கிற ஒவ்வொரு ரூபாயும் நம்மளோட நீண்ட கால கனவுகளுக்கு உதவியா இருக்கும்.

நம்ம நிதித் திட்டமிடல்ல RD கால்குலேட்டர் எப்படி உதவும்னு பாக்கலாம்:

இலக்கு அடிப்படையிலான சேமிப்பு:

நிதித் திட்டமிடல்ல முக்கியமான விஷயம் நம்மளோட நிதி இலக்குகளை நிர்ணயிக்கறதுதான். நம்மளோட தேவை என்ன, எப்ப நிறைவேத்தணும்னுங்கறதுல தெளிவா இருக்கணும். உதாரணமாக, புதிய வீடு அல்லது கார் வாங்க திட்டமிடுதல், குழந்தைகளின் கல்விக்காக சேமிப்பது, அல்லது உங்கள் மகளின் திருமணச் செலவுகள் போன்ற இலக்குகளைத் திட்டமிடலாம்.

இலக்குகளை நிர்ணயிப்பது:

ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தொகை சேமிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலக்கெடுக்குள் நீங்கள் உங்கள் இலக்கை அடைய விரும்பினீர்களேயானால் RD கால்குலேட்டர் அதை சரியாக கணக்கிட உதவும்.

இலக்கு நோக்கி சேமிப்பு:

உங்களது சேமிப்பு திட்டம் சரியா செயலாக்கப்படுத்தானு கவனிச்சுக்கிட்டே இருக்கணும்.  நீங்கள்  இலக்கை அடைந்துவிடுவீர்களா அல்லது கூடுதலா சேமிக்க வேண்டுமா என்பதை கணக்கிட RD கால்குலேட்டர் உதவும்.

உங்கள் முதலீடுகளைப் பன்முகப்படுத்தி லாபத்தை  பெருக்கிக்கொள்ளுங்கள்

ரெக்கரிங் டெபாசிட் (RD) நம்பகமான முதலீடுதான். ஆனால் ஒரே இடத்துல மட்டும் பணம் போடாம வேற வழிகளையும் ட்ரை பண்ணுங்க. ஏன்னா ஒரே இடத்துல மட்டும் பணம் போட்டா வளர்ச்சி குறைவாக இருக்கலாம், ரிஸ்க்கும் அதிகம். பல வழிகள்ல போட்டா ரிஸ்க்க குறைச்சு லாபத்த அதிகப்படுத்திக்கலாம். அதுக்கு சிட் ஃபண்ட்ஸ் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். 

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் (Mutual Funds), ஸ்டாக்ஸ் (Stocks), மற்றும் பாண்ட்ஸ் (Bonds) மாதிரி வேற வழிகளிலும் முதலீடு பண்ணலாம். ஆனால் இந்த முதலீடுகள் சந்தை அபாயங்களுக்குட்பட்டவை. அதாவது, மார்க்கெட்டின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்றமாதிரிதான் உங்களது லாப நஷ்டம் இருக்கும். ஆனால் சிட் ஃபண்ட்ஸ்ல அந்த பயம் இல்ல. அவை சந்தை ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படாது. மார்க்கெட் எப்படி போனாலும் நம்ம பணம் பாதுகாப்பா இருக்கும். அதுமட்டுமில்லாம நல்ல லாபமும் கிடைக்கும். பிற முதலீடுகளைப் போலல்லாமல், சிட் ஃபண்டுகள் கூடுதல் பாதுகாப்பை வழங்குகின்றன. அதுமட்டுமில்லாம சீட்டு ரொம்ப ஃப்ளெக்ஸிபிளா இருக்கும்.

RD comparison table

அடுத்து, சிட் ஃபண்டுகள் உங்கள் நிதி மேலாண்மையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

சிட் ஃபண்ட்ஸின் சிறப்புகள்

சிட் ஃபண்ட் சேமிக்கவும், தேவையானபோது பணம் பெறவும் ஒரு சிறந்த வழி. குழுவில் உள்ள அனைவரும் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்க வேண்டும். ஒவ்வொரு உறுப்பினரும் இந்த தொகுக்கப்பட்ட நிதியிலிருந்து ஏலம் மூலம் அல்லது குலுக்கல் மூலம் கடன் வாங்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். இந்த அமைப்பு உறுப்பினர்கள் தொடர்ந்து சேமிக்கவும், தேவைப்படும்போது ஒரு மொத்த தொகையை பெறவும் அனுமதிக்கிறது.

இரட்டை பயன்:

சிட் ஃபண்டுகள் ஒரு சேமிப்பு முறையாகவும் கடன் வாங்கும் வழியாகவும் செயல்படுகின்றன. உறுப்பினர்கள் மாதந்தோறும் சேமிக்கலாம் மற்றும் தேவையான போது ஒரு மொத்த தொகையையும் பெறலாம்.

எளிதான சேமிப்பு:

நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் நிதி தேவைக்கேற்ப பணத்தை பெறலாம். வழக்கமான சேமிப்பு முறைகளிலோ அல்லது வங்கிகளிலோ இந்த வசதி பொதுவா கிடையாது.

ஈடுமானம் தேவையில்லை:

கடன் வாங்க பொதுவா சொத்து ஈடாக வைக்கணும். ஆனா, சிட் ஃபண்ட்ஸ்ல அது தேவையில்லை. அதனால, பல பேருக்கு இது வசதியா இருக்கும்.

அதிக லாபம்:

வங்கி சேமிப்புக் கணக்கை விட, சிட் ஃபண்ட்ஸ்ல லாபம் அதிகமா கிடைக்க வாய்ப்பு இருக்கு. உங்க முதலீட்டுக்கு இது ஒரு நல்ல தேர்வா இருக்கும்.

பாதுகாப்பானது:

சந்தை ஏற்ற இறக்கத்தால் பாதிக்கப்படாது.

அவசரதிற்க்கு நிதி:

எப்போது வேண்டுமானாலும் பணம் தேவைப்பட்டால் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சிறிய முதலீடு:

சிறிய தொகையாகக்கூட முதலீடு செய்யலாம், ஆனால் அதிக லாபம் கிடைக்கும்.

உங்கள் சேமிப்பை சரியாக திட்டமிட RD கால்குலேட்டர் அவசியம்

RD கால்குலேட்டரின் சிறப்பு அம்சங்கள்

  • சரியான கணக்கீடுகள் உடனடியாக கிடைக்கும்.

  • முதலீட்டு தேர்வுகளை ஒப்பிடலாம். 

  • எந்த முதலீட்டு தேர்வு சிறந்தது என்பதை அறியலாம்.

  • நிதி இலக்குகளை திட்டமிட உதவும்.

  • சேமிப்பு எப்படி வளரும் என்பதைக் கண்காணிக்கலாம்.

நீங்கள் உங்கள் சேமிப்பை சரியாக திட்டமிட RD கால்குலேட்டர் மிகவும் பயன்படும். RD கால்குலேட்டர் உங்க சேமிப்பு எவ்வளவு வளரும்னு சரியா சொல்லும். அதனால, நீங்க நல்லா யோசிச்சு முடிவு எடுக்கலாம். RD கால்குலேட்டர் மூலமா நீங்க சிட் ஃபண்ட்ஸ் போன்ற வெவ்வேறு முதலீட்டு வழிகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம். சிட் ஃபண்ட்ஸ் மாதிரி அதிக லாபம் கொடுக்கிற முதலீடுகளோட RD எவ்வளவு லாபம் கொடுக்கும்னு தெரிஞ்சுக்கலாம். எவ்வளவு லாபம் கிடைக்கும்னு சரியாத் தெரிஞ்சுக்கறதுனால, நீங்க தைரியமா திட்டமிடலாம். இந்த RD கால்குலேட்டர் கஷ்டமான கணக்கீடுகளை எளிதாக்கி உறுதியான முடிவுகளை எடுக்கப்பயன்படும்.

RD கால்குலேட்டரை நீங்க பயன்படுத்தி இருக்கீங்களா? உங்க நிதிப் பயணத்தை மேம்படுத்த அது எப்படி உதவுச்சுன்னு கமெண்ட்ல சொல்லுங்க!

Share your views in the comments section!

Your email address will not be published. Required fields are marked *

Fill the Form

We are happy to assist you!

Powered by Kopuram Chits Private Limited