Table of Contents

RD கால்குலேட்டர்: உங்கள் சேமிப்பை இரட்டிப்பாக்கி முதலீட்டில் வெற்றி பெறுங்கள்!

RD calculator banner

முதலீடு செய்யணும், சேமிக்கணும்னு நினைக்கிறீங்க, ஆனா எப்படி முதலீடு செய்யறதுன்னு குழப்பமா இருக்கா? எவ்வளவு பணம் போட்டா எவ்வளவு கிடைக்கும்னு தெரியலையா? சும்மா கண்ண மூடிட்டு முதலீடு செய்யாம நன்றாக திட்டமிட்டு சேமிக்கிறதுக்கு ஒரு வழி தேடறீங்களா?  

கவலைப்படாதீங்க! உங்களுக்காகவே இருக்கு RD கால்குலேட்டர்!

இது என்ன பண்ணும்னுதானே கேக்கறீங்க? இது உங்க சேமிப்பு எவ்வளவு வளரும்னு துல்லியமா சொல்லும். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மாசமாசம் எவ்வளவு பணம் போட்டா, எவ்வளவு கிடைக்கும்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம். யோசிச்சு பாருங்க! உங்க முதலீடு எவ்வளவு வளரும்னு தெரிஞ்சா, எவ்வளவு தைரியமா பிளான் பண்ணலாம்? குழப்பமே இல்லாம, தெளிவா உங்க முதலீட்ட திட்டமிடலாம்.

வாங்க, RD கால்குலேட்டர யூஸ் பண்ணி எப்படி உங்க முதலீட்டை சூப்பரா பிளான் பண்றதுன்னு தெரிஞ்சுக்கலாம்.

RD கால்குலேட்டர் என்றால் என்ன?

RD கால்குலேட்டர் என்பது ஒரு சேமிப்பு கால்குலேட்டர். இது உங்கள் ரெக்கரிங் டெபாசிட் (Recurring Deposit) மூலம் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதை எளிதாக கணக்கிட உதவுகிறது.

RD (Recurring Deposit) கணக்கு போடும்போது, நிறைய பேர் கணக்குல தப்பு பண்ணிடுவாங்க. கூட்டு வட்டி போடுறதுல குழப்பம் வரும். அதனால, எவ்வளவு பணம் கிடைக்கும்னு சரியா கணிக்க முடியாது. ஆனா, இனிமே அந்த கவலையே வேண்டாம். RD கால்குலேட்டர யூஸ் பண்ணி, நீங்க ஈஸியா கணக்கு போடலாம். உங்க மாதாந்திர பங்களிப்பு, வட்டி விகிதம், டெபாசிட் காலம் போன்ற விவரங்களை உள்ளீடு செய்தா போதும், RD கால்குலேட்டர் உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்னு துல்லியமான முடிவுகளை உடனடியா வழங்கும். இதனால சரியான முடிவு எடுத்து, உங்க பணத்தை அதிகமா சேமிக்கலாம்.

RD கால்குலேட்டர் எப்படி செயல்படுகிறது?

உங்கள் விரல் நுனியில் ஒரு நிதி ஆலோசகர் இருப்பது போல் நினைத்துப் பாருங்கள் – அதுதான் RD கால்குலேட்டர். இது உங்களுக்கு துல்லியமான கணிப்புகளை வழங்கி, உங்கள் சேமிப்பு உத்தியை நம்பிக்கையுடன் திட்டமிட உதவுகிறது. 

நீங்கள் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம்:

1. உள்ளீட்டு விவரங்கள் (Input Details):

முதலில், சில முக்கியமான அடிப்படை தகவல்களை உள்ளிட வேண்டும் — ஒவ்வொரு மாதமும் நீங்கள் டெபாசிட் செய்ய திட்டமிட்டுள்ள தொகை, வங்கி வழங்கும் வட்டி விகிதம் மற்றும் டெபாசிட் காலம் (நீங்கள் தொடர்ந்து சேமிக்க விரும்பும் மொத்த காலம்).

2. கணக்கீடு (Calculation):

நீங்கள் அனைத்து விவரங்களையும் உள்ளிட்டதும், “கால்குலேட்” [“Calculate”] பொத்தானை அழுத்தவும். RD கால்குலேட்டர் ஒரு சூத்திரத்தை (formula) பயன்படுத்தி, டெபாசிட் காலப்பகுதி முடிவில் நீங்கள் பெறும் மொத்த தொகையை கணக்கிடும். இதில் நீங்கள் டெபாசிட் செய்த பணமும், கிடைக்கும் வட்டியும் சேர்ந்து கணக்கிடப்படும்.

நீங்கள் அனைத்து விவரங்களையும் உள்ளிட்டதும், “கால்குலேட்” [“Calculate”] பொத்தானை அழுத்தவும். RD கால்குலேட்டர் ஒரு சூத்திரத்தை (formula) பயன்படுத்தி, டெபாசிட் காலப்பகுதி முடிவில் நீங்கள் பெறும் மொத்த தொகையை கணக்கிடும். இதில் நீங்கள் டெபாசிட் செய்த பணமும், கிடைக்கும் வட்டியும் சேர்ந்து கணக்கிடப்படும்.

3. முடிவுகள் (Results):

ஒரு சில விநாடிகளில், RD கால்குலேட்டர் உங்களது முதிர்வு தொகையை (நீங்கள் டெபாசிட் செய்த பணம் மற்றும் வட்டியின் கூட்டுத்தொகையை) காட்டிவிடும். RD கால்குலேட்டர் நீங்கள் பெற்றிருக்கும் மொத்த கூட்டு வட்டியையும் கணக்கிடும், இதனால் உங்கள் பணம் காலப்போக்கில் எவ்வாறு வளரும் என்பதை எளிதாகப் பார்க்கலாம்.

அவ்வளவுதான்! RD கால்குலேட்டரைப் பயன்படுத்துவது அவ்வளவு  ஈசி! 

 

RD கால்குலேட்டர் உங்கள் முதலீட்டு அணுகுமுறையை எப்படி மாற்றும் மற்றும் வெற்றிக்கான பாதையில் உங்களை எப்படி வழிநடத்தும் என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

RD கால்குலேட்டரைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

1. துல்லியமான நிதி திட்டமிடல்

RD கால்குலேட்டர் உங்கள் சேமிப்பின் வளர்ச்சியை கணிக்க உதவும் சிறந்த முதலீட்டு கருவிகளில் ஒன்றாகும். இது நீங்கள் எவ்வளவு சேமிக்கலாம், உங்கள் சேமிப்பு எவ்வளவு வளர்ச்சியடையும் என்பதை துல்லியமாகக் காட்டும். இதன் மூலம், உங்கள் ரெக்கரிங் டெபாசிட் காலப்போக்கில் எவ்வளவு வளரும் என்பதை துல்லியமாக கணக்கிடவும், யதார்த்தமான நிதி இலக்குகளை அமைக்கவும் உங்களால் முடியும்.

2. எளிதாக பயன்படுத்தலாம்

RD கால்குலேட்டரைப் பயன்படுத்த கணித நிபுணராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மாதந்தோறும் சேமிக்கும் தொகை, வட்டி வீதம், மற்றும் கால அளவு ஆகிய விவரங்களை உள்ளிட்டால், பாக்கி கணக்குகளை கால்குலேட்டர் செய்து விடும். அனைவரும் எளிதாகப் பயன்படுத்தலாம்!

3. உடனடி முடிவுகள்

இனி கைமுறையாக கணக்கிட தேவையில்லை. ஏனென்றால், தேவையான விவரங்களை உள்ளிட்டவுடன், RD கால்குலேட்டர் உடனடியாக முடிவுகளை வழங்கும். அது உங்களது முதிர்வு தொகை மற்றும் நீங்கள் சம்பாதித்த மொத்த வட்டியையும் உங்களுக்குக் காட்டும். இது உங்கள் சேமிப்புத் திட்டம் குறித்து நீங்கள் விரைவான முடிவுகளை எடுக்க உதவுவதுடன், உங்கள் சேமிப்பை வளர்ப்பதற்கான சிறந்த முதலீட்டு விருப்பத்தைத் தேர்வுசெய்ய உதவும். இதனால் உங்களது நேரம் மிச்சகும்.

வட்டி வீதங்களை ஒப்பிட உதவும்

RD கால்குலேட்டர் மூலம் வெவ்வேறு முதலீட்டு வங்கி வட்டி வீதங்களை ஒப்பிட்டு, உங்கள் சேமிப்புக்கு அதிக லாபம் தரும் விருப்பத்தை தேர்ந்தெடுக்கலாம்.

ஸ்மார்ட் நிதி திட்டமிடல்

விடுமுறைக்கு டூர் போகணும், புது கார் வாங்கணும், இல்ல அவசரத்துக்கு பணம் வேணும், இப்படி எந்த நிதி இலக்க இருந்தாலும் RD கால்குலேட்டர் இருந்தா ஈஸியா பிளான் பண்ணலாம். உங்க இலக்கு என்னன்னு முதல்ல முடிவு பண்ணுங்க. அப்புறம், RD கால்குலேட்டர்ல மாசமாசம் எவ்வளவு சேமிக்கணும், அதுக்கு எவ்ளோ வட்டினு பாத்து உங்க இலக்கை ஈஸியா அடையலாம். சுருக்கமா சொல்லணும்னா, உங்க சேமிப்பை திட்டமிட்டு, உங்க கனவுகளை RD கால்குலேட்டர் நனவாக்க உதவும்!

ரிஸ்க் இல்லாத உறுதியான வருமானம்

RD கால்குலேட்டர் மூலம், டெபாசிட் கால முடிவில் நீங்கள் எவ்வளவு சம்பாதிப்பீர்கள் என்பதை துல்லியமாகப் பார்க்க முடிவதால் உங்கள் முதலீட்டு திட்டத்தில் பாதுகாப்பான முதலீடுகளை சுலபமாக இணைக்க முடியும்.

சிறந்த பட்ஜெட்டிங் 

RD கால்குலேட்டர் மூலம், உங்கள் மாதாந்திர சேமிப்பு, வட்டி விகித பகுப்பாய்வு மற்றும் எதிர்பார்க்கப்படும் வருமானம் குறித்து தெளிவான தகவல்களை பெறுவதால் பட்ஜெட்டை திட்டமிடுவது மிகவும் எளிதாகிறது. இதனால் உங்கள் எதிர்காலத்திற்காக எவ்வளவு பணம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதை அறிந்து கொண்டு உங்கள் மாதாந்திர செலவுகளை நீங்கள் சிறப்பாக திட்டமிடலாம்.

RD கால்குலேட்டரைப் பயன்படுத்தி உங்கள் சேமிப்பை தெளிவாகக் கணக்கிட தயாரா? அடுத்து RD கால்குலேட்டரை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்!

RD கால்குலேட்டரைப் பயன்படுத்துவதற்கான படிப்படியான வழிகாட்டி

படி 1: உங்கள் மாதாந்திர சேமிப்பு தொகையை உள்ளிடவும்

முதலில், நீங்கள் மாதமாதம் RD கணக்கில் எவ்வளவு டெபாசிட் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். இந்தத் தொகை உங்கள் மாதாந்திர வருமானத்திலிருந்து வசதியாக ஒதுக்கி வைக்கக்கூடிய தொகையாக இருக்க வேண்டும். அதை முதலில் RD கால்குலேட்டரில் உள்ளிடவும்.

படி 2: வட்டி விகிதத்தை உள்ளிடவும்

அடுத்து, நீங்கள் RD தொடங்க உள்ள வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் வட்டி விகிதத்தைப் பாருங்கள். இந்த விகிதம் முக்கியமானது, ஏனெனில் இந்த விகிதமே உங்கள் சேமிப்புக்கு கிடைக்கும் வட்டியை தீர்மானிக்கும். பொதுவாக இது வருடாந்தர வட்டி வீதமாக (per annum) இருக்கும். இந்த வட்டி விகிதத்தை கால்குலேட்டரில் சரியாக உள்ளிடவும்.

படி 3: டெபாசிட் காலத்தை தேர்ந்தெடுக்கவும்

நீங்கள் பணம் டெபாசிட் செய்ய விரும்பும் மொத்த காலத்தை முடிவு செய்யுங்கள். இது வங்கிகளைப் பொறுத்து, 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை இருக்கலாம். உங்கள் நிதி இலக்குகளுடன் ஒத்துப்போகும் கால அளவைத் தேர்ந்தெடுத்து அதை கால்குலேட்டரில் உள்ளிடவும்.

படி 4: “கால்குலேட்” பட்டனை அழுத்தவும்

எல்லா விவரங்களும் சரியாக உள்ளிடப்பட்டதும், “கால்குலேட்” [“Calculate”] பட்டனை அழுத்துங்கள். RD கால்குலேட்டர் உங்கள் சேமிப்பின் மொத்த முதிர்வுத் தொகையை உடனே கணக்கிடும். இதில் உங்கள் டெபாசிட் தொகை (நீங்கள் சேமித்த தொகை) மற்றும் சம்பாதித்த வட்டி இரண்டும் உள்ளடங்கும்.

படி 5: முடிவுகளை மதிப்பாய்வு செய்யவும்

கணக்கீடு முடிந்ததும், RD கால்குலேட்டர் மொத்த முதிர்வுத் தொகையைக் காண்பிக்கும். இதில் நீங்கள் சேமித்த தொகையும், சேரும் வட்டியும் அடங்கும். டெபாசிட் கால முடிவில் உங்கள் சேமிப்பு எவ்வளவு வளரும் என்பதைப் புரிந்துகொள்ள இந்த முடிவுகளை மதிப்பாய்வு செய்யவும்.

படி 6: RD கால்குலேட்டர்: கணக்கை மாத்திப் பாருங்க!

RD கால்குலேட்டர்ல ஒரு சூப்பர் வசதி இருக்கு. என்னன்னா, வெவ்வேறு உள்ளீடுகளை மாத்தி மாத்தி போட்டுப்பார்க்கலாம். மாசமாசம் 500 ரூபாயா? இல்ல 1000 ரூபாயா? 5 வருஷத்துக்கா? இல்ல 10 வருஷத்துக்கா?  வட்டி விகிதம் மாறினா எவ்வளவு கிடைக்கும்? இப்படி மாத்தி மாத்தி போட்டுப்பார்க்கலாம். மாதாந்திர டெபாசிட் தொகை, வட்டி விகிதம் அல்லது டெபாசிட் காலம் ஆகியவற்றை மாற்றி, இந்த மாறுபாடுகள் உங்கள் மொத்த வருமானத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பார்த்து உங்கள் நிதி நிலைமை மற்றும் இலக்குகளுக்கு ஏற்ற சேமிப்புத் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.

படி 7: உங்கள் முதலீடுகளைத் திறம்பட திட்டமிடுங்கள்

RD கால்குலேட்டரிலிருந்து கிடைக்கும் தகவல்களைப் பயன்படுத்தி உங்கள் முதலீட்டு முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுக்க முடியும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட இலக்கிற்காக சேமிக்கிறீர்களோ அல்லது அவசரகாலத்துக்காக பணத்தை சேமிக்கிறீங்களோ, எதுவா இருந்தாலும் RD கால்குலேட்டர் திறம்பட திட்டமிட உதவுகிறது.

திட்டமிட்ட நிதி நிர்வாகம்

நம்ம எதிர்காலத்துக்கு பணம் சேமிக்கிறதுல, திட்டமிட்டு செயல்படுவது ரொம்ப முக்கியம். சரியான திட்டம் இருந்தா, நம்ம நீண்ட கால இலக்குகளுக்கு ஏத்த மாதிரி பணத்தை சேமிக்கலாம். அப்போதான் நம்ம பணம் முழுசா பயன் தரும். RD கால்குலேட்டர் இதில் ஒரு முக்கியப் பயனளிக்கும் கருவியாக அமைகிறது.

1. இலக்கு அடிப்படையிலான சேமிப்பு:

நிதி திட்டமிடலில் முதல் படி உங்கள் இலக்குகளைத் தேர்வு செய்வதே. அது கல்விக்கான சேமிப்பு, வீட்டுக்கான முதலீடு, அல்லது ஓய்வு கால திட்டம் இப்பட்டி ஏதாவது ஆக இருக்கலாம்.

2. இலக்கை நிர்ணயித்தல்:

நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் உங்கள் இலக்கை அடைய, ஒவ்வொரு மாதமும் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதை கணக்கிடலாம்.

3. முன்னேற்றத்தை கண்காணித்தல்:

உங்கள் சேமிப்பு திட்டம் எப்படி செயல்படுகிறது என்பதை கண்காணித்து தேவையான மாற்றங்களை செய்யலாம்.

முதலீடுகளைப் பன்முகப்படுத்துதல்

ரெக்கரிங் டெபாசிட்கள் நம்பகமானவை என்றாலும், மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குகள், பத்திரங்கள் மற்றும் சிட்ஃபண்ட்ஸ் என்று உங்கள் முதலீடுகளைப் பன்முகப்படுத்துவது வருமானத்தை சமநிலைப்படுத்த உதவும். சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்ட முதலீடுகளை மட்டும் நம்பி இருப்பது ஆபத்தானது. அதனால, பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானம் தரும் முதலீட்டு வழிகளைத் தேர்வு செய்வது முக்கியம். சிட் ஃபண்ட்ஸ் அந்த மாதிரியான ஒரு நல்ல வாய்ப்பு. மார்க்கெட்ல என்ன நடந்தாலும் அது சிட் ஃபண்ட்ஸ பாதிக்காது. நம்ம பணத்துக்கு பாதுகாப்பும் கிடைக்கும், நல்ல வருமானமும் கிடைக்கும்.

இப்போது, சிட்ஃபண்ட்கள் எப்படி உங்கள் நிதி திட்டத்தை மேலும் மேம்படுத்தும் என்பதை பார்ப்போம்!

சிட் ஃபண்ட் முதலீடு

சிட் ஃபண்ட் முதலீட்டில் ஒரு குழுவில் உள்ள அனைவரும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு குறிப்பிட்ட தொகையை பங்களிப்பர்கள். ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஏலம் எடுப்பதன் மூலமாகவோ அல்லது குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலமாகவோ இந்த குழு நிதியிலிருந்து பணம் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். சிட் ஃபண்ட் முதலீடு உறுப்பினர்கள் தொடர்ந்து சேமிக்கவும், தேவைப்படும்போது ஒரு மொத்த தொகையை பெறுவதற்கும் வாய்ப்பை வழங்குகிறது.

1. இரட்டை பயன்:

சிட் ஃபண்டுகள் முக்கிய நிதி தேவைகளுக்கு நிதி திரட்ட உதவும் சேமிப்பு முறையாகவும் செயல்படும், தேவைப்படும் பொழுது உங்களுக்கு வேண்டிய பணத்தை வழங்கும்  கருவியாகவும் செயல்படும்.

2. ஃபிளெக்ஸிபிலிட்டி:

உறுப்பினர்கள் தங்கள் நிதித் தேவைகளின் அடிப்படையில் பணத்தை எப்போது எடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கலாம்.

3. பிணையம் தேவையில்லை:

வங்கி கடன்களைப் போலல்லாமல், சிட் ஃபண்டுகளுக்கு பொதுவாக பிணையம் தேவையில்லை.

4. அதிக வருமானம்:

பாரம்பரிய சேமிப்பு கணக்குகளை விட வருமானம் அதிகமாக இருக்கும்.

RD கால்குலேட்டர்: ஸ்மார்ட் நிதி திட்டம்

RD கால்குலேட்டரைப் பயன்படுத்துவது உங்கள் நிதி இலக்குகளை அமைத்து அதை அடைவதற்கான திறனை கணிசமாக மேம்படுத்தும். இது உங்கள் முதலீட்டுப் பயணத்தை மேலும் உறுதியாக்க உதவுகிறது. உங்கள் முதலீடுகளைப் பன்முகப்படுத்தி, ரிஸ்குகளை திறம்பட நிர்வகிக்கலாம். தெளிவான, துல்லியமான சேமிப்பு வளர்ச்சி மதிப்பீட்டை வழங்குவதன் மூலம், RD கால்குலேட்டர் சிறந்த முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவுகிறது. 

இதன் மூலம், உங்கள் எதிர்காலத் தேவைகளுக்கு எவ்வளவு பணம் தேவை, எவ்வளவு மாதங்கள் சேமித்தால் இலக்கை அடையலாம், எவ்வளவு வட்டி கிடைக்கும், பல்வேறு முதலீட்டுத் திட்டங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது, மற்றும் பட்ஜெட் திட்டமிடுவது போன்றவற்றை எளிதாக கணக்கிடலாம். 

சுருக்கமாக சொல்லப்போனால், RD கால்குலேட்டர் உங்கள் பணத்தை புத்திசாலித்தனமாக திட்டமிட்டு, உங்கள் கனவுகளை நனவாக்க உதவும்.

Your email address will not be published. Required fields are marked *

Fill the Form

We are happy to assist you!

Powered by Kopuram Chits Private Limited