Table of Contents

சிட் ஃபண்ட்ஸ் vs வங்கி கடன்கள்: சிறுதொழில் வளர்ச்சிக்கு எது சிறந்தது?

chit funds vs bank loans

சிறு தொழில் தொடங்கணும்னு முடிவு பண்ணிட்டீங்க, ஆனா அதுக்கு தேவையான பணத்த எப்படி திரட்டறதுனு தெரியலையா? சிறியதாகத் தொடங்கிய தொழில் பெரிதாக வளர நல்ல ஒரு நிதி ஆதாரம் வேண்டுமா?  கவலைப்படாதீங்க! நிறைய வழிகள் இருக்கு. ஆனால் பொதுவாகப் பார்க்கும்போது சிட் ஃபண்ட்ஸும் வங்கி கடன்களும்தான் பெரும்பாலும் பேசப்படும் தேர்வுகளாக இருக்கின்றன.

இரண்டிலும் நன்மை தீமைகள் உள்ளன. இரண்டும் தொழில் வளர்ச்சிக்கு உதவக்கூடியவைதான். ஆனால் அவற்றில் ஏதேனும் ஒன்று மற்றதை விட சிறந்ததா? அப்படியானால் அது எது? வங்கிகளில் பெரிய தொகை கடனாக கிடைக்கலாம். ஆனால், வட்டி கட்ட வேண்டும். நிறைய ஆவணங்களும் தேவை. சிட் ஃபண்ட்ஸில்  பணம் எளிதாகக் கிடைக்கும். ஆனால், சில விஷயங்கள கவனமா இருக்கணும். அப்போ, சிறுதொழில் வளர்க்க எந்த வழி சிறந்தது? இதை விரிவாகப் பார்ப்போம்!

இலகுவான நிதி: சிறு தொழில்களுக்கு ஒரு வரப்பிரசாதம்

ஒரு தொழில் நடத்துன்னா, லாப நஷ்டம் மாறி மாறி வரும். ஆனால், பணப்புழக்கத்தில் தடங்கல் வந்தா என்ன செய்வது? சிட் ஃபண்ட்ஸ் மாதிரி ஒரு நிதி ஆதாரம் இருந்துச்சுன்னா, தேவைப்படும்போது டக்குனு பணத்தை எடுத்துக்கலாம். இதுல வங்கி கடன் மாதிரி நிறைய கண்டிஷன்ஸ்லாம் இருக்காது.

வங்கி கடன் வாங்கணும்னா நிறைய ஆவணங்கள் கொடுக்கணும் , கடினமான நடைமுறைகள் இருக்கு, அப்புறம் வாரக் கணக்கில் பணத்துக்காக வெயிட் பண்ணனும். ஆனா சிட் ஃபண்ட்ஸ்ல தேவைப்பட்டவுடனே பணம் கிடைக்கும், அதுவும் எந்தவொரு வட்டி சுமையுமில்லாமல். இது உங்க தொழிலை வேகமாக வளர்ச்சிப் பாதையில் கொண்டு போக உதவும்.

சிட் ஃபண்ட்ஸ்ல உங்க பணத்த நீங்களே சேமிச்சு, தேவைப்படும்போது ஈஸியா எடுத்துக்கலாம். அதுவும் வங்கி கடன் மாதிரி கண்டிஷனல்ஸ் இல்லாம! உதாரணத்துக்கு, புதுசா ஒரு ஊர்ல கடை திறக்கணுமா? இல்ல புது மிஷின் வாங்கணுமா? இல்ல திடீர்னு ஒரு சூப்பர் சான்ஸ் வந்துச்சா? எல்லாத்துக்கும் சிட் ஃபண்ட்ஸ்ல ஈஸியா பணம் கிடைக்கும்!

இந்த பதிவுல, சிட் ஃபண்ட்ஸ் ஏன் வங்கி கடனுக்கு ஒரு நல்ல மாற்று வழியா இருக்குன்னும், அது சிறு தொழில்களுக்கு எப்படி உதவும்ன்னும் நாம தெரிஞ்சுக்க போறோம்.

வங்கி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது சிறு தொழில்கள் சந்திக்கும் சிரமங்கள்

வங்கி கடன்கள் உதவியா இருந்தாலும்,  கடனுக்கு விண்ணப்பிக்கும்போது சிறு தொழில் உரிமையாளர்கள் பொதுவா சந்திக்க நேரிடுகிற சில சிக்கல்களை பார்க்கலாம்:

கடினமான விண்ணப்ப செயல்முறை:

வங்கிகளிள் கடனுக்கு விண்ணப்பிக்க பல்வேறு ஆவணங்களை கேப்பாங்க—பிஸ்னஸ் பிளான், நிதி அறிக்கைகள் போன்ற விரிவான தகவல்கள் மட்டுமல்ல, சில சமயம் தனிப்பட்ட உத்திரவாதமும் தேவையாக இருக்கலாம். ஏற்கனவே தினசரி பணிகளை சமாளிக்க வேண்டிய ஒரு சிறு தொழில் ஓனருக்கு, இந்த ஆவணங்களை திரட்டுவதும் வங்கிகளிள் சமர்ப்பிப்பதும் ஒரு பெரிய சவாலாக இருக்கும்.

கண்டிஷன்ஸ் அதிகம்:

நீங்க இப்பதான் தொழில் ஆரம்பிச்சிருக்கீங்க, இல்ல உங்ககிட்ட நல்ல பைனான்சியல் ஹிஸ்டரி இல்லன்னா, வங்கிகளிள் லோன் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். கிடைக்கவே கிடைக்காமக்கூட போகலாம்.

நிதி வரலாறு:

உங்கள் தொழில் நல்ல வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டிருந்தாலும், உங்களுக்கு நம்பகமான நிதி வரலாறு இல்லையென்றால், வங்கிகளிள் கடன் பெறுவதில் பிரச்சனை ஏற்படலாம்.

நீண்ட அனுமதி காலம்:

எல்லா டாக்குமெண்ட்ஸும் கொடுத்ததுக்கப்புறமும், லோன் அப்ரூவ் ஆச்சா இல்லையான்னு தெரிஞ்சுக்க வாரக்கணக்கா, இல்லன மாசக்கணக்கா கூட வெயிட் பண்ணனும். ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காகவோ அல்லது ஒரு சிறப்பான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவோ உங்களுக்கு உடனே பணம் தேவைப்படும்போது இப்படி வெயிட் பண்றது ரொம்ப பெரிய பின்னடைவா இருக்கும்.

அதிக வட்டி விகிதம்:

கஷ்டப்பட்டு லோன் கிடைச்சாலும், அதிக வட்டி கட்ட வேண்டிருக்கும்.

திருப்பிச் செலுத்தும் அழுத்தம்:

மாச மாசம் குறிப்பிட்ட தொகையை கட்டணும்ங்கறதுனால, கட்ட வேண்டிய தேதிகளுக்குள்ள உங்க பிசினஸ்ல இருந்து போதுமான பணம் வருதான்னு பாத்துக்கணும். இல்லையெனில் கடனை திருப்பிச் செலுத்துவதில் பிரச்சனைகள் ஏற்படலாம்.

சிட் ஃபண்ட்ஸ்: வங்கி கடனுக்கு ஒரு சிறந்த மாற்று

வங்கில கடன் வாங்கணும்னா அதிக வட்டி, கண்டிப்பான ரூல்ஸ்னு நிறைய தொல்லைகள் இருக்கும். ஆனா சிட் ஃபண்ட்ஸ்ல அதெல்லாம் இல்ல. வங்கிகளோட ஒப்பிடும்போது, சிட் ஃபண்ட்ஸ் ரொம்ப ஃப்ளெக்ஸிபிளா இருக்கும். உங்ககிட்ட பெர்ஃபெக்ட் கிரெடிட் ஸ்கோர் இருக்கணும்னு அவசியம் இல்ல, சொத்து அடமானம் வைக்கணும்னு அவசியம் இல்ல. அதற்கு பதிலாக, ஒரு குழுவில் இணைந்து, ஒவ்வொரு மாதமும் பணம் சேமிக்கலாம். பணம் தேவைப்படும் போது, நீங்கள் ஏலத்தில் கலந்து கொண்டு அந்த தொகையைப் பெறலாம். இதற்காக சிறப்பான கிரெடிட் ஸ்கோர் இருக்க வேண்டிய அவசியமில்லை; உத்திரவாதங்கள் தேவைப்படுவதுமில்லை. பணம் மிகவும் விரைவாக கிடைக்கும். அதனால சிட் ஃபண்ட்ஸ் சிறு தொழில்களுக்கு ரொம்ப பொருத்தமான சாய்ஸா இருக்கு.

இப்போது வங்கிக் கடன்களுக்கு மாற்றாக சிட் ஃபண்ட் ஏன் சிறந்த தீர்வாக இருக்கும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

பணப்புழக்கத்துக்கு சிட் ஃபண்ட் எப்படி உதவுகிறது?

சிட் ஃபண்டின் முக்கியமான பலம் என்னவென்றால், பணத்தை விரைவாகவும் எளிதாகவும் பெறமுடியும். வங்கிகளில் உள்ளது போல  நிறைய ஆவணங்கள், கடன் மதிப்பீடு (credit check), அல்லது நீண்ட அனுமதி செயல்முறை எனக் கவலைப்பட தேவையில்லை. சிட் ஃபண்டின் செயல்முறையெல்லாம் மிக எளிமையாக இருக்கும். இதனால்தான் 

சிட் ஃபண்ட் உங்கள் பணத்தேவையை வேகமாகவும் சிரமமில்லாமலும் பூர்த்தி செய்யும் நம்பத்தகுந்த தேர்வாக இருக்கும்.

சிட் ஃபண்ட்ஸ்: உங்க பணம், உங்க கண்ட்ரோல்ல!

வங்கிகளில் ஒரு குறிப்பிட்ட தொகையை கடன் பெற்றுக்கொண்டு, அதனை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள்ள கட்டணும். ஆனா சிட் ஃபண்ட்ஸ்ல அப்படி இல்ல. இங்க கண்டிஷன்ஸ் கொஞ்சம் ஃப்ளெக்ஸிபிளா இருக்கும். சிட் ஃபண்ட்ஸ்ல நீங்க கடன் மட்டும் வாங்குறதில்ல, அதே நேரத்துல சேமிக்கவும் செய்றீங்க. மாசம் மாசம் ஒரு நிரந்தர தொகையை செலுத்துறது உங்க சேமிப்பை நிலையானதா வைத்துக்கொள்ள உதவும். உங்களுக்குத் தேவையான தருணத்தில், பணத்தை எடுத்துக்கொள்ளும் சுதந்திரமும் கிடைக்கும். அதனால சிட் ஃபண்ட்ஸ் ஒரு சேமிப்பு மற்றும் கடன் வசதியையும் ஒரே நேரத்தில் தரும் ஒரு சிறந்த வழி.

சிட் ஃபண்ட்ஸ்: கஷ்டம் இல்லாம கடன்!

சிட் ஃபண்ட்ல சேர்றது வங்கி கடன் வாங்குறத விட ரொம்ப ஈஸி. நிறைய டாக்குமெண்ட்ஸ் கொடுக்க தேவையில்ல. கேரண்டி, அடமானம் தேவைப்படாது. வங்கிங்க மாதிரி கடுமையான பைனான்ஸ் செக் செய்ய மாட்டாங்க. உங்க கிரெடிட் ஸ்கோர் பெர்ஃபெக்ட்டா இருக்கணும்னும் இல்ல. ஒரு சிட் குரூப்பில் சேர்ந்து மாசம் மாசம் பணம் கட்ட ஆரம்பிச்சா போதும். எந்த தொந்தரவும் இல்லாம உங்க தொழிலுக்கு தேவையான பணத்தை எடுக்கலாம்.

அடமானம் தேவையில்லை

வங்கி கடன் வாங்கும்போது நீங்கள் எதையாவது ஈடாக வைக்கணும். நிறைய சிறு தொழில் முனைவோரிடம் ஈடாக வைக்க சொத்து இருக்காது. ஆனா சிட் ஃபண்ட்ஸ்ல எதையுமே அடமானம் வைக்கணும்னு அவசியம் இல்ல. அதனால, வங்கி கடன் வாங்க சொத்து இல்லாத சின்ன தொழில் ஓனர்களுக்கு சிட் ஃபண்ட்ஸ் ரொம்ப ஈஸியான சாய்சா இருக்கும்.

வட்டி கட்ட தேவையில்லை

வங்கிகளில் கடன் வாங்குறதுல இருக்கற ஒரு பெரிய பிரச்சனை என்னன்னா, அதிக வட்டி கட்டணும். லோன் கிடைச்சாலும், வட்டியே உங்க லாபத்தையெல்லாம் உறிஞ்சிடும். ஆனால் சிட் ஃபண்ட்ஸ்ல வட்டி கட்ட தேவையில்ல. இதுல நீங்க உங்க சொந்த பணத்த சேமிக்கறீங்க. கொஞ்ச நாள்ல, நீங்க போட்ட பணத்தையே திரும்ப எடுக்குறீங்க. அதனால நீங்கள் கூடுதலா எந்த பணமும் செலுத்த வேண்டியதில்லை. கூடவே இன்னும் கொஞ்சம் பணம் டிவிடென்ட்ஸ் மூலமா கிடைக்கும். அதனால உங்ககிட்ட அதிக பணம் இருக்கும். வழக்கமா கடன் வாங்குறதுல இருக்கற நிதிச்சுமை இல்லாம, பணம் எடுக்க சிட் ஃபண்ட்ஸ் ஒரு சூப்பர் வழி. உங்களுக்கு தேவையான பணமும் கிடைக்கும், வட்டி செலவும் மிச்சமாகும், கூடுதல் லாபமும் கிடைக்கும். 

கூடுதல் செலவு இல்லா நிதியுதவி

வங்கி கடன்களை விட, சிட் ஃபண்ட்கள் மூலமாக சிறு தொழில்களுக்காக பணம் பெறுவது ஒரு சிக்கனமான வழி. வங்கி கடன்கள்ல வட்டி மட்டும் இல்லாம அபராதம், எதிர்பார்க்காத அல்லது மறைமுக கட்டணங்கள், லேட் ஃபீஸ் — அதாவது நீங்கள் சரியான நேரத்தில் பணத்தை திருப்பி செலுத்த தவறும்போது விதிக்கப்படும் கட்டணம்னு —- நிறைய பிரச்சனைகள் இருக்கும். ஆனா சிட் ஃபண்ட்ஸ்ல வட்டியே இல்ல. நீங்க மாச மாசம் பணம் போடுறீங்க, தேவைப்படும்போது எடுக்குறீங்க. எந்த எக்ஸ்ட்ரா செலவும் இல்ல. திடீர்னு வேற எந்த கட்டணங்களாவது செலுத்த வேண்டியிருக்குமோங்கிற பயமும் இல்லை. 

மறைமுக கட்டணங்கள் இல்லை

சிட் ஃபண்ட்ஸ்ல இன்னொரு பெரிய நன்மை என்னன்னா, செயல்முறைகள் எல்லாமே வெளிப்படையா இருக்கும். வங்கி கடன்கள்ல நிறைய மறைமுக கட்டணங்கள் இருக்கும். பக்கம் பக்கமா சின்ன எழுத்துல நிறைய கண்டிஷன்ஸ் போட்டு வச்சிருப்பாங்க. சிக்கலான விதிமுறைகள்  நிறைய இருக்கும். அதையெல்லாம் படித்து பார்த்து புரிந்துகொள்வது சில சமயம் மிகவும் கஷ்டமா இருக்கும். ஆனால் சிட் ஃபண்ட்ஸ்ல இந்த தொல்லையெல்லாம் இல்ல. மாச மாசம் எவ்வளவு பணம் கட்டணும், எப்ப பணம் எடுக்கலாம்னு எல்லாமே உங்களுக்கு நல்லாவே தெரியும். திடீர்னு எந்த மறைமுக கட்டணமும் வந்து உங்கள பயமுறுத்தாது. அதனால சிட் ஃபண்ட்ஸ்ல சேமிக்க பணம் போடும்போது வேறு எந்த பிரச்சனைகள் பத்தியும் கவலைப்பட தேவை இல்லை. இது சிறு தொழில் முனைவோர்க்கு ரொம்ப உதவியா இருக்கும். 

எந்த தொழிலுக்கும் ஏற்ற நிதிவழி

வங்கிக் கடன்களைப்போல கடினமான விதிமுறைகள் இல்லாமல், சிட் ஃபண்ட் உங்களோட சிறு தொழிலுக்கு ஏற்ற நிதி உதவியாக செயல்படும். நீங்கள் புதிதாக ஒரு தொழில் தொடங்கினாலும் சரி, அல்லது ஏற்கனவே ஒரு தொழில தொடங்கி நல்லா நடத்திட்டுருந்தாலும் சரி, உங்க பணப்புழக்கத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு கட்டணும்னு நீங்களே முடிவு பண்ணிக்கலாம். பிசினஸ் கொஞ்சம் கஷ்டமா போகுதுன்னா, கம்மியான பணம் கட்டுற மாதிரி ஒரு சீட்டு திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். பிசினஸ் நல்லா போகுதுன்னா, நிறைய சீட்டு திட்டங்கள்ள சேர்ந்து தேவைப்படும்போது அதிகமா பணம் எடுக்கலாம்.

தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப விரிவாக்கம்

உங்க தொழில் வளர வளர, நீங்க வேணும்னா சிட் ஃபண்ட்ஸ்ல நிறைய திட்டங்கள்ல சேர்ந்துக்கலாம், இல்லனா நல்ல ஒரு பெரிய பிளான்ல சேர்த்துக்கலாம். நீங்க தொழில விரிவாக்கம் செய்யணும்னு நினைக்கும்போதோ அல்லது உங்க தொழிலின் வளர்ச்சிக்காக அதிகத் தொகை தேவைப்பட்டாலோ இது அதிகமான பணத்தை எடுக்க உதவும். வங்கிக் கடன்களைப் போல ஒரு நிலையான நிபந்தனைகளில் (fixed terms) சிக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. வங்கியில் கடன் வாங்கினா, ஒரு நிலையான தொகை, ஒரு நிரந்தர காலக் கட்டுப்பாடு என்று இருக்கும். ஆனா சிட் ஃபண்ட்ஸ்ல உங்க வளர்ச்சிக்கு ஏத்த மாதிரி பிளான்ஸ மாத்திக்கலாம். அதனால உங்க தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக சிட் ஃபண்ட்ஸ் உங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்.

அவசர காலங்களில் உடனே உதவி

உங்க பிசினஸ்ல திடீர்னு ஏதாவது பிரச்சனை வந்துடுச்சு, இல்ல ஒரு நல்ல டீல் கிடைக்குதுன்னு வைங்க சிட் ஃபண்ட்ஸ் உங்களுக்கு  கண்டிப்பா கைக்கொடுக்கும். வங்கி கடன் மாதிரி பணத்துக்காக வெயிட் பண்ணாம நீங்க உடனே உங்க சீட்டை ஏலம் கேட்டு பணத்தை எடுத்துக்கலாம். வங்கி கடன்ல அப்ரூவல் கிடைக்க வாரக்கணக்கா இல்ல மாசக்கணக்கா கூட ஆகும். ஆனா சிட் ஃபண்ட்ஸ்ல எப்போ தேவையோ அப்போ உடனே பணம் கிடைக்கும். அதனால் தான், அவசர காலச் சிக்கல்களை சமாளிக்கவும், திடீர் வளர்ச்சி வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளவும், சிட் ஃபண்ட்ஸ் ஒரு சிறந்த செயல்திறன் கொண்ட தீர்வாக இருக்கும்.

சேமிப்பு மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கிறது

சிட் ஃபண்ட்ஸ்ல ஒரு நல்ல விஷயம் என்னன்னா, அவை நிதி ஒழுக்கத்தை ஊக்குவிக்கின்றன. ஒரு சிட் ஃபண்ட் பிளான்ல சேரும்போது, மாச மாசம் பணம் கட்டணும். இது சேமிக்கிற பழக்கத்தை வளர்க்க உதவுகிறது. சிறு தொழில் செய்பவர்கள் சில நேரங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டால், சேமிப்புக்கோ இன்வெஸ்ட்மென்டுக்கோ முக்கியத்துவம் அளிக்க முடியாமல் போகலாம். ஆனால், சிட் ஃபண்ட்ஸில் மாதம் தோறும் தவணை  செலுத்தும் பழக்கம் தானாகவே ஒரு நிதி ஒழுங்கை உருவாக்கும். இதனால், தேவையான நேரத்தில் எளிதாக பணத்தை பெறலாம். அது மட்டுமல்லாமல், நீண்ட கால நிதிநிலை மேம்பாட்டுக்கு புத்திசாலித்தனமான வழிகளை அமைக்கவும் இது உதவும். மேலும், பணப்புழக்கம் குறைந்த காலத்திலும், உங்கள் சேமிப்பை நிலையாக வளர்த்துக்கொள்ள சிட் ஃபண்ட் ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

கூடுதல் லாபம் பெறும் வாய்ப்பு

சிட் ஃபண்ட் குழுவில் உள்ள ஒருவர் அவருக்கு பணத்தேவை ஏற்படும்பொழுது ஏலம் கோரினால், அந்த ஏலத்தில் கொடுக்கப்பட்ட தள்ளுபடி தொகை குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கு ஈவுத்தொகையாக (டிவிடெண்ட்) பகிர்ந்தளிக்கப்படும். இதன் மூலம் நீங்கள் உங்களது சேமிப்பிலிருந்து கூடுதல் வருவாய் பெறலாம்.

chit funds vs bank loans tamil

சீசனல் தொழில்களுக்கு ஒரு நம்பகமான தேர்வு

உங்க தொழில சீசனுக்கு ஏத்த மாதிரி வருமானத்திலே ஏற்ற இறக்கம் இருக்கும்னா, சிட் ஃபண்ட்ஸ் உங்களுக்கு ஒரு சிறந்த நிதி தீர்வு. மாச மாசம் சிட் ஃபண்ட்ல பணம் கட்டுறதுனால, சீசன் இல்லாத நேரத்துல வியாபாரம் சரியாய் போகலானாலும் தொடர்ந்து சமாளிக்க முடியும். உங்களுடைய சேமிப்பை எடுக்கும் நேரம் வரும்போது மொத்த பணத்தையும் உங்க பிஸினஸ் நல்லா நடக்கும் சீசன்ல ரீ-இன்வெஸ்ட் பண்ணலாம். சான்ஸ் கிடைக்கும்போது உங்க பிசினஸ் சூப்பரா வளர இது உதவும்.

சிட் ஃபண்ட்ஸ்: வேற லெவல் சாய்ஸ்

சிறு தொழில் முனைவோர்க்கு சிட் ஃபண்ட்ஸ் நிச்சயமாக வங்கி கடன்களுக்கு சிறந்த மாற்றாக இருக்கும். ரொம்ப ஈஸியா பணம் கிடைக்கும், ஃப்ளெக்ஸிபிளா இருக்கும். அதிகமான டாக்குமெண்டஷன் வேலை இல்ல, வட்டி கட்ட தேவையில்ல, அடமானம் வைக்கணும்னும் இல்ல. வங்கி தொல்லையே இல்லாம உங்க பிசினஸுக்கு தேவையான பணம் ஈஸியா கிடைக்கும். பிசினஸ் நடத்த பணம் வேணும்னாலும்  இல்ல திடீர் செலவுக்கு பணம் வேணும்னாலும் சிட் ஃபண்ட்ஸ் உங்க சின்ன பிசினஸுக்கு ஒரு  உகந்த தேர்வு.

Share your views in the comments section!

Your email address will not be published. Required fields are marked *

Fill the Form

We are happy to assist you!

Powered by Kopuram Chits Private Limited