Table of Contents

சிட் நிதி மற்றும் மியூச்சுவல் நிதி: எந்த முதலீடு உங்களுக்கு சிறந்தது?

chit fund vs mutual funds

நம்ம வாழ்க்கைல பணத்த சேமிக்கிறது மட்டும் இல்ல, புத்திசாலித்தனமா முதலீடு செய்றதும் ரொம்ப முக்கியம். முதலீடுனு சொன்னா இன்னைக்கு ஏகப்பட்ட வழிகள் கொட்டி கிடக்கு. ஆனா, எல்லாத்துலயும் நம்ம பணத்தப் போட்டுட முடியுமா என்ன? அதுல சிலதுல ரிஸ்க் அதிகம், சிலதுல ரிட்டர்ன்ஸ் கம்மி. அதனால, நம்ம தேவைக்கும், வசதிக்கும் ஏத்த மாதிரி சரியான முதலீட்டு வழியத் தேர்ந்தெடுக்குறது முக்கியம். பல இன்வெஸ்ட்மென்ட் ஆப்ஷன்ஸ் இருந்தாலும், சிட் ஃபண்ட்ஸ் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ரெண்டும் ரொம்ப பாப்புலரான சாய்ஸ். ஏன் தெரியுமா? ரெண்டுமே பணத்த வளர்க்க சூப்பரான வழிகள்.

ஆனால், உங்களுக்கான சிறந்த முதலீட்டுத் திட்டத்தை எப்படி கண்டுபிடிப்பது? இந்த பதிவில், சிட் ஃபண்ட்ஸ் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஆகிய இரண்டு பிரபலமான முதலீட்டுத் திட்டங்ககளின் சாதக பாதகங்களை விரிவாக ஒப்பிட்டுப் பார்க்கப் போகிறோம். இதன் மூலம் உங்கள் தனிப்பட்ட நிதி இலக்குகளை அடைவதற்கு எது சிறந்த முதலீட்டுத் திட்டம் என்பதைப் பார்க்கப் போகிறோம்.

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் என்றால் என்ன?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் என்பது பல முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைத் திரட்டி பங்குகள் (ஸ்டாக்ஸ்), பத்திரங்கள் (பாண்ட்ஸ்) மற்றும் பிற பத்திரங்களின் கலவையில் முதலீடு செய்யப்படுவது. இந்த மொத்த முதலீடுகளையும் ப்ரொஃபஷனல் மேனேஜர்ஸ் (தொழில்முறை முதலீட்டு மேலாளர்கள்) பாத்துக்குவாங்க. அவங்க என்ன பண்ணுவாங்கன்னா, எதில் சொத்து மதிப்பு ஏறும்னு பார்த்து அதுல முதலீடு பண்ணுவாங்க. இதுல நமக்கு என்ன லாபம்னா, நம்ம பணம் பல வகைல இன்வெஸ்ட் ஆகிருக்கும். அதோட, ப்ரொஃபஷனல்ஸ் வேற அதை மேனேஜ் பண்ணுவாங்க. 

ஆனால், இந்த முதலீட்டுல கொஞ்சம் செலவும் இருக்கு. இந்த முதலீடு பெரும்பாலும் மேலாண்மை கட்டணங்கள் (மேனேஜ்மென்ட் ஃபீஸ்), செலவு விகிதங்கள் (எக்ஸ்பென்ஸ் ரேஷியோ) மற்றும் சந்தை அபாயங்களுடன் (மார்க்கெட் ரிஸ்க்) வருகிறது. அவை உங்கள் முதலீட்டின் மூலம் வரும் வருமானத்தைக் குறைக்கலாம்.

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன்வெஸ்ட்மென்ட் எப்படி வேலை செய்கிறது?

நீங்க மியூச்சுவல் ஃபண்ட்ஸ்ல ₹50,000 ரூபா போடலாம்னு முடிவு பண்ணிட்டீங்கன்னு வச்சுக்குவோம். இப்போ, இந்த ஐம்பதாயிரம் ரூபாயை நாம ஏதாவது ஒரு கம்பெனில முதலீடு பண்ணுனா, அந்த கம்பெனி நல்லா பெர்பார்ம் பண்ணுனா நமக்கு லாபம், இல்லன்னா நஷ்டம். ஆனா மியூச்சுவல் ஃபண்ட்ஸ்ல அப்படி இல்ல.

மியூச்சுவல் ஃபண்ட்ஸ்ல, நாம போடுற பணத்த நிதி ஆலோசகர், அதாவது ப்ரொஃபஷனல்ஸ் பாத்துக்குவாங்க. அவங்களுக்கு மார்க்கெட்ட பத்தி நல்லா தெரியும். அவங்க என்ன பண்ணுவாங்கன்னா, இந்த ஐம்பதாயிரம் ரூபாய ஒரே கம்பெனில போடாம, பல கம்பெனிகள்ல பிரிச்சு போடுவாங்க. எப்படி பிரிச்சு போடுவாங்கன்னா, டெக்னாலஜி கம்பெனி, ஆட்டோமொபைல் கம்பெனி, பார்மா கம்பெனின்னு பல துறைகள்ல இருக்குற நல்ல கம்பெனிகள தேர்ந்தெடுத்து, அதுல கொஞ்சம் கொஞ்சமா பிரிச்சு போடுவாங்க.

இப்படி பல கம்பெனிகள்ல பிரிச்சு போடுறதுனால என்ன லாபம்னா, ஒரு கம்பெனி சரியா போகலைன்னா கூட, மத்த கம்பெனிங்க நல்லா போறதுனால, உங்களுக்கு பெரிய நஷ்டம் வராது. உதாரணத்துக்கு, டெக்னாலஜி கம்பெனி கொஞ்சம் நஷ்டம் ஆனாலும், பார்மா கம்பெனி நல்லா லாபம் கொடுக்கும். அதனால, உங்க மொத்த முதலீடு பெரிய அளவுல பாதிக்காது. இதுக்குத்தான் டைவர்சிஃபிகேஷன்னு (diversification) பேரு. உங்க பணத்தை ஒரே இடத்துல போடாம, பல இடத்துல பிரிச்சு போடுறதுனால, ரிஸ்க் குறையும். மியூச்சுவல் ஃபண்ட்ஸ்ல இதுதான் பெரிய அட்வான்டேஜ்.

மியூச்சுவல் ஃபண்டின் வகைகள்

மியூச்சுவல் ஃபண்ட்ஸ்ல நிறைய வகைகள் இருக்கு. ஒவ்வொரு ஃபண்டும் ஒவ்வொரு மாதிரி வேலை செய்யும். சில ஃபண்ட்ஸ்ல பணம் போட்டா வேகமா வளரும், சிலதுல போட்டா கொஞ்சம் பொறுமையா வளரும், சிலதுல போட்டா பாதுகாப்பா இருக்கும். இப்படி ஒவ்வொரு ஃபண்டும் ஒவ்வொரு மாதிரி வேலை செய்யும். உங்க தேவைக்கும், ரிஸ்க் எடுக்கும் திறனுக்கும் ஏத்த மாதிரி, சரியான ஃபண்டைத் தேர்ந்தெடுக்கணும். அதற்காக இப்போ நாம சில முக்கியமான ஃபண்ட் வகைகளை பார்க்கப் போறோம். இதன் மூலம், உங்க பணத்தை எங்க போட்டா நல்லா வளரும்னு நீங்களே முடிவு பண்ணிக்கலாம்.

மியூச்சுவல் ஃபண்ட்ஸ்ல நிறைய வகைகள் இருக்கு. ஒவ்வொரு ஃபண்டும் ஒவ்வொரு மாதிரி வேலை செய்யும். சில ஃபண்ட்ஸ்ல பணம் போட்டா வேகமா வளரும், சிலதுல போட்டா கொஞ்சம் பொறுமையா வளரும், சிலதுல போட்டா பாதுகாப்பா இருக்கும். இப்படி ஒவ்வொரு ஃபண்டும் ஒவ்வொரு மாதிரி வேலை செய்யும். உங்க தேவைக்கும், ரிஸ்க் எடுக்கும் திறனுக்கும் ஏத்த மாதிரி, சரியான ஃபண்டைத் தேர்ந்தெடுக்கணும். அதற்காக இப்போ நாம சில முக்கியமான ஃபண்ட் வகைகளை பார்க்கப் போறோம். இதன் மூலம், உங்க பணத்தை எங்க போட்டா நல்லா வளரும்னு நீங்களே முடிவு பண்ணிக்கலாம்.

1. ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்:

இது ஸ்டாக் மியூச்சுவல் ஃபண்ட் என்றும் அழைக்கப்படும் ஒரு பிரபலமான மியூச்சுவல் ஃபண்ட் ஆகும். இது பங்குச் சந்தையில் முதன்மையாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்கிறது. இந்த முதலீட்டு வகை நீண்ட கால வளர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்படும். அதிக லாபம் வேணும்னு நினைக்கிறவங்க, கொஞ்சம் ரிஸ்க் எடுக்கத் தயாரா இருந்தா, இது உங்களுக்குச் சரியா இருக்கும்.

SEBI-யின் கூற்றுப்படி, ஈக்விட்டி ஃபண்டுகள் பொதுவாக தங்கள் சொத்துக்களில் குறைந்தபட்சம் 65% சொத்துக்களை பங்குகளில் முதலீடு செய்கின்றன. இக்குவிட்டி மியூச்சுவல் நிதியின் முக்கியமான சில பிரிவுகள் பின்வருமாறு:

  • லார்ஜ்-கேப் ஃபண்ட்ஸ்:

பொதுவாக நிலையான வருமானத்தை வழங்கும் பெரிய, நல்லா வளர்ந்த கம்பெனிகள்ல முதலீடு பண்ணுவாங்க. அவை எல்லாம் வருடத்துக்கு 10,000 கோடி முதல் லட்சக் கோடி ரூபாய்க்கும் மேலாக டர்ன்ஓவர் செய்யும் நிறுவனங்கள். உதாரணமாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா கான்சல்டென்சி சர்வீசஸ் (TCS), இன்போசிஸ், எச்.டி.எஃப்.சி. பேங்க் போன்ற நிறுவனங்கள். அதனால வருமானம் நிலையா இருக்கும், ரிஸ்க் குறைவாக இருக்கும்.

  • மிட்-கேப் ஃபண்டுகள்:

மிட்-கேப் ஃபண்ட்ஸ், சந்தையில் நடுத்தர மதிப்பு கொண்ட நிறுவனங்கள்ல முதலீடு செய்யும். இந்நிறுவனங்களின் மார்க்கெட் காபிடல் சுமார் 5,000 கோடி முதல் 20,000 கோடி ரூபாய் வரையிலான அளவில் இருக்கும். உதாரணமாக லூபின் லிமிடெட், ஐ.சி.ஐ.சி.ஐ ப்ரூடென்ஷியல் லைஃப், வோல்டாஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள் வளர்ந்து வரும் நிறுவனங்கள். அதனால, லாபம் அதிகமா கிடைக்க வாய்ப்பு இருக்கு. லார்ஜ்-கேப்பை விட சற்று அதிகமான ரிஸ்க் இருக்கும், ஆனால் ஸ்மால்-கேப்பை விட குறைவான ரிஸ்க் இருக்கும்.

  • ஸ்மால்-கேப் ஃபண்டுகள்:

ஸ்மால்-கேப் ஃபண்டுகள் என்பது மார்க்கெட் காபிடல் குறைவாக உள்ள சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் வகை. இந்நிறுவனங்களின் மார்க்கெட் காபிடல் பொதுவாக 5,000 கோடி ரூபாய்க்கும் குறைவாக இருக்கும். உதாரணமாக எஸ்கார்ட்ஸ் குபோட்டா, இந்தியா ஸிமென்ட்ஸ், ஏஸ்டர்ட் டி.எம்.ஐ போன்ற நிறுவனங்கள். இதுல அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கு. ஆனா ரிஸ்க்கும் கொஞ்சம் அதிகம்.

  • செக்டோரல்/தீமேட்டிக் ஃபண்ட்ஸ்:

உங்களுக்கு புடிச்ச துறையில மட்டும் முதலீடு பண்ணுவாங்க. உதாரணத்துக்கு, டெக்னாலஜி நல்லா வளரும்னு நெனச்சா, டெக்னாலஜி கம்பெனிகள்ல மட்டும் போடுவாங்க. ஒரு குறிப்பிட்ட துறையின் வளர்ச்சியை நம்பும் இது முதலீட்டாளர்களுக்கு உகந்தது.

2. டெப்ட் மியூச்சுவல் ஃபண்ட்ஸ்:

பணம் பத்திரமா இருக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு சிறந்த முதலீட்டு வழி. இந்த ஃபண்ட்ஸ்ல, பாதுகாப்பான முதலீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க. பாண்ட்ஸ், அரசு பத்திரங்கள், ட்ரெஷரி பில்ஸ் போன்ற நிலையான வருமானம் தரும் விஷயங்கள்ல முதலீடு பண்ணி, தொடர்ந்து வருமானம் கொடுக்கிறது தான் இவங்க நோக்கம். ரிஸ்க் எடுக்க விரும்பாத, நிலையான வருமானம் வேணும்னு நினைக்கிறவங்க இதுல முதலீடு செய்யலாம். சராசரியா வருஷத்துக்கு 6-8% வரை வருமானம் கிடைக்கும். சில பிரபலமான வகைகள் இதோ:

  • லிக்விட் ஃபண்ட்ஸ்:

இது குறுகிய கால முதலீடுகளுக்கு ஏற்றது. இதில் ரிஸ்க் கம்மி, பணப்புழக்கம் அதிகம். ஏனென்றால், லிக்விட் ஃபண்டுகள் குறுகிய கால கடன் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. இது மற்ற ஃபண்ட்ஸ்களோடு ஒப்பிடும்போது பாதுகாப்பானது. மேலும், இதன் மூலம் எளிதாக பணத்தை எடுக்கலாம். உங்களுக்கு சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு பணத்தை முதலீடு செய்ய வேண்டிய தேவை இருந்தால், லிக்விட் நிதிகள் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

  • குறுகிய மற்றும் நீண்ட கால டெப்ட் ஃபண்டுகள்:

இந்த ஃபண்ட்ஸ் முதலீட்டு கால அளவை பொறுத்து வடிவமைக்கப்பட்டவை. நீங்க கொஞ்ச நாள்ல பணம் எடுக்கணும்னு நெனச்சா, ஷார்ட்-டெர்ம் டெப்ட் ஃபண்ட்ஸ் யூஸ் பண்ணலாம். உதாரணத்துக்கு, அடுத்த வருஷம் கார் வாங்கணும்னா, இந்த ஃபண்ட்ஸ்ல போடலாம். அதே மாதிரி, ரொம்ப வருஷம் கழிச்சு பணம் எடுக்கணும்னா, லாங்-டெர்ம் டெப்ட் ஃபண்ட்ஸ் யூஸ் பண்ணலாம். உதாரணத்துக்கு, ஒரு அஞ்சு வருஷம் கழிச்சு வெளிநாட்டுக்கு டூர் போகணும்னா, இந்த ஃபண்ட்ஸ்ல போடலாம்.

  • கிரெடிட் ரிஸ்க் ஃபண்ட்ஸ்:

இதுல கொஞ்சம் ரிஸ்க் இருக்கு, ஆனா மத்த டெப்ட் ஃபண்ட்ஸ விட கொஞ்சம் அதிகமா லாபம் கிடைக்கும். கொஞ்சம் ரிஸ்க் எடுத்தா பரவாயில்ல, நல்ல லாபம் வேணும்னு நெனக்கிறவங்க இதுல முதலீடு பண்ணலாம். ஆனா, இதுல முதலீடு பண்றதுக்கு முன்னாடி, நல்லா தெரிஞ்சுக்கிட்டு முடிவு பண்ணுங்க.

3. ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்ட்ஸ்:

இந்த ஃபண்ட்ஸ்ல ஈக்விட்டி மற்றும் டெப்ட் ரெண்டுலயும் முதலீடு செய்வாங்க. இதுனால வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை ரெண்டுமே கிடைக்கும். ரிஸ்க்கும் ரிட்டர்னும் பேலன்ஸ்டா இருக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு இது சரியான சாய்ஸ். சில பொதுவான வகைகள் இதோ:

  • அக்ரசிவ் ஹைப்ரிட் ஃபண்ட்ஸ்:

இதுல ஈக்விட்டிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்க. 65-80% வரைக்கும் ஸ்டாக்ஸ்ல முதலீடு செய்வாங்க, மீதி பணத்தை டெப்ட் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ்ல போடுவாங்க. அதிக லாபம் வேணும்னு நெனக்கிறவங்க, கொஞ்சம் ரிஸ்க் எடுக்க தயாரா இருந்தா, இந்த ஃபண்ட்ஸ் பொருத்தமா இருக்கும்.

  • பேலன்ஸ்டு ஹைப்ரிட் ஃபண்ட்ஸ்:

இதுல ஸ்டாக்ஸ்லயும் பாண்ட்ஸ்லயும் சரிசமமா போடுவாங்க. அதனால ரொம்ப அதிக லாபமும் இருக்காது, ரொம்ப அதிக ரிஸ்க்கும் இருக்காது. ரிஸ்க்கும் ரிட்டர்னும் பேலன்ஸ்டா இருக்கணும்னு நெனக்கிறவங்க இதுல முதலீடு பண்ணலாம்.

  • ஹைப்ரிட் ஃபண்ட்ஸ்:

ரொம்ப கவனமா முதலீடு செய்யுறவங்களுக்கு இது ஏற்றது. ஏன்னா இதுல ரிஸ்க் ரொம்ப ரொம்ப கம்மி. பாண்ட்ஸ்லயும் ஸ்டாக்ஸ்லயும் முதலீடு செய்வாங்க. ரொம்ப ரிஸ்க் எடுக்க பயப்படுறவங்க, பணம் பாதுகாப்பாகவும்  இருக்கணும், அதே சமயம் கொஞ்சம் லாபமும் வேணும்னு நெனக்கிறவங்க இதுல முதலீடு செய்யலாம்.

4. சொல்யூஷன்-ஓரியண்டட் ஃபண்ட்ஸ்:

இது குறிப்பிட்ட நிதி இலக்குகளை அடைய வடிவமைக்கப்பட்ட ஃபண்ட்ஸ். உதாரணத்துக்கு, ஓய்வு கால சேமிப்புக்காக பிளான் பண்ணனும்னா, இதுல போடலாம். இதுல போட்டா அஞ்சு வருஷத்துக்கு பணம் எடுக்க முடியாது. அதனால, ரொம்ப வருஷத்துக்கு பணம் சேமிக்கணும்னு நெனக்கிறவங்களுக்கு இது ஒத்துவரும்.

  • இன்டெக்ஸ் ஃபண்ட்ஸ்:

இது ஒரு குறிப்பிட்ட மார்க்கெட் இன்டெக்ஸை அப்படியே பின்பற்றும். அதாவது, NIFTY 50 அல்லது SENSEX மாதிரி இன்டெக்ஸில் இருக்கிற அதே பங்குகளில் முதலீடு செய்யும். இது பாஸிவ் மேனேஜ்மென்ட் ஃபண்ட் (passive management fund). அதாவது, மேனேஜர்கள் ஆக்டிவா பங்குகளைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். இன்டெக்ஸ்ல என்ன பங்குகள் இருக்கோ, அதையே அப்படியே பின்பற்றுவாங்க. இதுனால செலவு ரொம்ப கம்மியா இருக்கும். மார்க்கெட் எப்படி போகுதோ, அதே மாதிரி உங்க முதலீடும் போகும். மார்க்கெட் ஒட்டுமொத்தமா வளரும்போது, உங்க முதலீடும் வளரும்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நிபுணத்துவ மேலாண்மை

நீங்க மியூச்சுவல் ஃபண்ட்ல முதலீடு செய்யும்போது, உங்க பணத்த ஆயிரக்கணக்கான பேர் போடுற பணத்தோட சேர்த்து, நிதி நிபுணர்கள் பாத்துக்குவாங்க. அவங்க வேலை என்னன்னா, ரிஸ்க்க பேலன்ஸ் பண்ணி, லாபத்தை அதிகப்படுத்துறது. மார்க்கெட்ல என்ன நடக்குது, எப்போ என்ன பண்ணனும்னு அவங்களுக்கு நல்லா தெரியும். சந்தை போக்குகள், பொருளாதார தரவு மற்றும் துறை சார்ந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த மேலாளர்கள் தினமும் முடிவுகளை எடுக்குறாங்க. நமக்கு அதெல்லாம் பாத்துக்கிட்டு இருக்க நேரம் இருக்காது. அவங்க அதெல்லாம் பாத்து, நமக்கு லாபம் வர மாதிரி முடிவு எடுப்பாங்க.

டைவர்சிஃபிகேஷன்: மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் முக்கிய நன்மை

மியூச்சுவல் ஃபண்ட்ஸ்ல நிறைய வகை இருக்கு. ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு மாதிரி லாபம் கிடைக்கும், ரிஸ்க்கும் இருக்கும். அதனால, ஒரே ஃபண்ட்ல எல்லா பணத்தையும் போடாம, பல வகை ஃபண்ட்ஸ்ல பிரிச்சு போடுறது நல்லது.

உதாரணமாக, நீங்கள் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் நிதிப் பங்குகளை உள்ளடக்கிய ஒரு பங்கு நிதியில் முதலீடு செய்யறீங்கன்னு வச்சுக்குவோம், ஒருவேளை டெக் கம்பெனிங்க சரியா போகலைன்னா, அதனால ஏற்படும் சரிவை சுகாதாரப் பராமரிப்புத் துறையில் ஏற்படும் லாபங்களால் சமப்படுத்த முடியும். இது போல ஒரு துறை சிறப்பாக செயல்படவில்லை என்றால் மற்ற துறைகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தால் நமக்கு ஏற்படற இழப்பை சமன் செய்து விடலாம். அதனால, காலப்போக்குல உங்களுக்கு நிலையான வருமானமும் கிடைக்கும், பெரிய நஷ்டமும் வராம பாத்துக்கலாம். இதுக்கு பேருதான் டைவர்சிஃபிகேஷன் (diversification).

நிபுணத்துவ மேலாண்மை மற்றும் டைவர்சிஃபிகேஷன் ஏன் முக்கியம்?

உங்கள் பணத்தை புத்திசாலித்தனமாக, எளிதாக, பாதுகாப்பாக வளர்க்க மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஒரு சிறந்த வழியாகும். இந்த நிதி நிர்வாகத்தில் நிபுணர்கள் உங்களுக்காக பணத்தை சிறப்பாக முதலீடு செய்கிறார்கள். மார்க்கெட்டின் போக்கு, வளர்ச்சி வாய்ப்புகள் ஆகியவற்றைப் பார்த்து, சரியான நிறுவனங்களில் தகுந்த முதலீடு செய்வார்கள். மேலும், உங்கள் பணத்தை ஒரே இடத்தில் முதலீடு செய்யாமல் பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதால், மார்க்கெட்ல பிரச்சனை வந்தாலும் உங்க பணம் பாதுகாப்பா இருக்கும். அதனால நீங்கள் தினந்தோறும் மார்க்கெட்டை கவனிக்க வேண்டியதில்லை.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளின் நன்மைகள்

1. நிபுணத்துவ மேலாண்மை:

உங்கள் முதலீடுகள் நிபுணர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. அதனால, நீங்க எந்த கம்பெனி ஷேர் வாங்கணும்னு யோசிச்சு உங்க மண்டைய ஒடச்சுக்க வேண்டியதில்லை. உங்க முதலீடுகள் திறமையானவங்க கைகளில் இருக்குன்னு தைரியமா இருக்கலாம். மார்க்கெட்ட பாத்து அவங்களே முடிவு பண்ணி வாங்கிடுவாங்க.

2. டைவர்சிஃபிகேஷன்:

இந்த மாதிரியான முதலீடுகள் முதலீட்டாளர்களை எளிதாக டைவர்சிஃபை (பல இடத்துல பிரிச்சு முதலீடு) செய்ய அனுமதிக்கின்றன. அதனால நஷ்டம் வந்தாலும் பெருசா தெரியாது.

3. லிக்விடிட்டி:

ரியல் எஸ்டேட் மாதிரி இல்லாம எப்ப வேணாலும் உங்க பணத்தை எடுத்துக்கலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் உள்ள ஆபத்துகள்

எந்த முதலீடா இருந்தாலும் ரிஸ்க் இல்லாம இருக்காது. ஆனா, என்ன ரிஸ்க் இருக்குன்னு தெரிஞ்சுகிட்டா, நாம புத்திசாலித்தனமா முடிவு எடுக்கலாம். வாங்க, மியூச்சுவல் ஃபண்ட்ஸ்ல என்னென்ன ரிஸ்க் இருக்குன்னு பாக்கலாம்.

1. சந்தை அபாயம்:

எல்லா முதலீடுகளிலும் ஆபத்து இருக்கு. மியூச்சுவல் ஃபண்ட்ஸும் அதுக்கு விதிவிலக்கு இல்லை. ஸ்டாக் அல்லது பாண்ட் மார்க்கெட் இறங்கும் போது, உங்க மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மதிப்பும் குறையும். இந்த சந்தை ஆபத்து வருமானத்தை பாதிக்கலாம். உதாரணத்துக்கு, கொரோனா லாக்டவுனின் போது, பல இந்திய ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்ஸ் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன. நிஃப்டி 50 குறியீடு ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட 23% இழந்தது. இந்த வீழ்ச்சி இந்தியாவில் உள்ள அனைத்து முதலீடுகளிலும் பிரதிபலித்தது. பொருளாதார நிச்சயமற்ற காலங்களில் சந்தைகள் எந்தளவுக்கு கணிக்க முடியாததாக இருக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

2. கட்டணம் மற்றும் இதர செலவுகள்:

மியூச்சுவல் ஃபண்ட்ஸ்ல பணம் போட்டா, நிர்வகிக்கிறதுக்கு (மேனேஜ்மென்ட் ஃபீஸ்), செலவு கணக்குன்னு (எக்ஸ்பென்ஸ் ரேஷியோ) சில கட்டணங்கள் இருக்கும். இந்த கட்டணங்கள், ஃபண்ட் எப்படி வேலை செய்யுதுன்னு பொறுத்து மாறும். பொதுவா, மியூச்சுவல் ஃபண்ட்ஸ்ல 0.5% லிருந்து 2% வரை செலவு கணக்கு இருக்கும். அதாவது, நீங்க 100 ரூபாய் போட்டா, 0.5 ரூபாயிலிருந்து 2 ரூபாய் வரை செலவுக்கு போகும். ஒரு ஃபண்ட்ல இந்த செலவு கணக்கு அதிகமா இருந்தா, அந்த ஃபண்ட் நல்லா லாபம் கொடுத்தாதான், உங்க கைக்கு லாபம் வரும். இல்லன்னா, உங்க லாபம் குறைஞ்சிடும். அதனால, எந்தவொரு ஃபண்ட்லயும் முதலீடு செய்வதற்கு முன், அந்த ஃபண்டோட நிர்வாகக் கட்டணத்தைக் கருத்தில் கொள்வது அவசியம்.

3. நீங்கள் தேர்வு செய்ய முடியாது:

ஷேர்ஸ் வாங்கும்போது எந்த கம்பெனி ஷேர் வாங்கணும்னு நீங்களே முடிவு பண்ணலாம். ஆனா, மியூச்சுவல் ஃபண்ட்ஸ்ல அப்படி இல்ல. உங்க முதலீடுகள நிபுணர்கள் பாத்துக்குவாங்க. அதாவது, எந்த கம்பெனி ஷேர் வாங்கணும்னு அவங்கதான் முடிவு பண்ணுவாங்க. அதனால, நீங்க நினைச்ச கம்பெனி ஷேர நீங்க வாங்க முடியாது.

உங்கள் நிதி இலக்குகளுக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சரியானதா?

சிட் ஃபண்ட்ஸ் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இரண்டுமே வெவ்வேறு வகையான முதலீட்டு வழிகள். அவை ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான நன்மைகள் மற்றும் அபாயங்களைக் கொண்டுள்ளன. உங்கள் நிதி இலக்குகளை அடைவதற்கு மியூச்சுவல் ஃபண்டுகளை விட சிட் ஃபண்ட்ஸ் எப்படி சிறந்த முதலீடாக இருக்க முடியும் என்பதை இரண்டு முதலீடுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து கண்டறியலாம்.

சிட் ஃபண்டுகள் என்றால் என்ன?

சிட் ஃபண்ட்ஸ் என்பது சேமிப்பு மற்றும் முதலீடு ஆகிய இரண்டிற்கும் சிறப்பான ஒரு வழியாகும். இதில், ஒரு குழுவாக இணைந்து ஒவ்வொரு உறுப்பினரும் குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் செலுத்துவார்கள். பின்னர், தேவைப்படும்போது ஒவ்வொரு உறுப்பினரும் அந்தத் தொகையை எடுத்துக்கொள்ளலாம். இது ஒரு சேமிப்புத் திட்டமாக மட்டுமல்லாமல், மியூச்சுவல் ஃபண்ட்ஸ் போன்ற ஒரு முதலீட்டுத் திட்டமாகவும் செயல்படுகிறது. உங்களுக்கு உடனடியாகப் பணம் தேவைப்பட்டாலோ, உங்கள் தேவைக்கு ஏற்றவாறு பணத்தை எடுக்க விரும்பினாலோ, அல்லது முதலீடு செய்ய நினைத்தாலோ, சிட் ஃபண்ட்ஸ் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த வகை முதலீட்டில் ரிஸ்க் மிகவும் குறைவு.

சிட் ஃபண்ட் வகைகள்

சிட் ஃபண்ட்ஸ்ல நிறைய வகைகள் இருக்கு. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விதமான தேவைகளை பூர்த்தி செய்யுது. மியூச்சுவல் ஃபண்ட்ஸ்ல இருக்குற மாதிரி மார்க்கெட் ரிஸ்க் இல்லாம, நிம்மதியா முதலீடு செய்யணும்னு நினைக்கிறவங்களுக்கு சிட் ஃபண்ட்ஸ் ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும். வாங்க, முக்கியமான சீட்டு வகைகள் மற்றும் அவற்றின் பயன்களை பத்தி கொஞ்சம் டீடைலா பார்க்கலாம்.

1. சேமிப்பு சிட் ஃபண்டுகள்:

இந்த வகை முதலீடு நிலையான மற்றும் நம்பகமான சேமிப்பை விரும்புகிறவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மியூச்சுவல் ஃபண்ட்ஸ்ல மார்க்கெட் நிலவரத்தை பொறுத்து லாபத்துல ஏத்த இறக்கம் இருக்கும். ஆனா, இதுல அப்படி இல்ல. எவ்வளவு பணம் போடணும், எவ்வளவு லாபம் கிடைக்கும்னு எல்லாமே முன்னாடியே தெரிஞ்சிடும். இது நீண்ட கால வளர்ச்சியை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஒரு “சேமிப்பு பூஸ்டர்” மாதிரி. மார்க்கெட் எப்படி போகுதுன்னு கவலைப்படாம, நிம்மதியா பணத்தை சீராக வளர்க்கலாம்.

2. பரிசு சிட் ஃபண்டுகள்:

இதுல ஒவ்வொரு மாதமும், ஒரு உறுப்பினர் ஒரு ‘பரிசு’ வெல்வார். அதாவது, மொத்தமா ஒரு தொகை கிடைக்கும். இது விரைவான வருமானத்தை வழங்குகிறது. மியூச்சுவல் ஃபண்ட்ஸ்ல மார்க்கெட் வளர்ச்சியை பொறுத்துதான் லாபம் கிடைக்கும். ஆனால், இந்த ஃபண்ட்ஸ்ல குலுக்கல் முறையில பரிசு கிடைக்குறதுனால, உங்களுக்கு பணம் சீக்கிரமா கிடைக்க வாய்ப்பு அதிகம்.

3. வணிக சிட் ஃபண்டுகள்:

சின்ன பிசினஸ் பண்றவங்களுக்கு மற்றும் புதுசா பிசினஸ் ஆரம்பிக்கிறவங்களுக்கு தேவையான  நிதி ஆதாரத்தை பெற இந்த முதலீட்டு வாய்ப்பு பயனளிக்கிறது.  மியூச்சுவல் ஃபண்ட்ஸ்ல எப்ப லாபம் கிடைக்கும்னு சொல்ல முடியாது. ஆனா, சிட் ஃபண்ட்ஸ்ல உங்களுக்கு பணம் தேவைப்படும் போது ஏலம் எடுத்துக்கலாம். பிசினஸ் வளர்ச்சிக்கு தேவையான பணப்புழக்கத்தை சமாளிக்க, இது ஒரு சிறந்த முதலீட்டு வழி.

4. ஆன்லைன் சிட் ஃபண்டுகள்:

இப்போ எல்லாமே ஆன்லைன்ல வந்துடுச்சு – சிட் ஃபண்ட்ஸும்தான். இந்த வகை முதலீடுகள் ஒரு டிஜிட்டல் தளத்தை வழங்குகின்றன. இது பயனர்கள் தங்கள் பங்களிப்புகள் மற்றும் ஏலங்களை ஆன்லைனில் கண்காணிக்க உதவுகிறது. அதாவது ஆன்லைன் மூலமா உங்க பணபரிவர்த்தனைகள் எல்லாத்தையும் கண்காணிக்கலாம். எவ்வளவு பணம் போட்டீங்க, ஏலம் எவ்வளவுக்கு போச்சு, உங்களுக்கு எவ்வளவு லாபம் வந்துச்சுன்னு எல்லாத்தையும் நீங்களே பாத்துக்கலாம். மார்க்கெட்டப் பத்தி தெரிஞ்சிக்கணும்னு கவலைப்பட தேவையில்லை. இது ரொம்ப ஈஸியான முதலீட்டு வழி. உங்க பணமும் பாதுகாப்பா இருக்கும் செயல்முறைகளும் வெளிப்படையாகவும் இருக்கும்.

5. சிறப்பு நோக்க சிட் ஃபண்டுகள்:

இதுவொரு தனிப்பயன் முதலீட்டு திட்டமாகும். குறிப்பாக கல்யாணம், படிப்பு, வீடு வாங்குறது மாதிரி விஷயத்துக்காக பணம் சேர்க்கணும்னா, இந்த திட்டம் உதவும். மியூச்சுவல் ஃபண்ட்ஸ்ல மார்க்கெட் எப்படி போகுதோ அதுக்கு ஏத்த மாதிரி லாபம் வரும். ஆனா, இந்த சிட் ஃபண்ட்ஸ்ல குறிப்பிட்ட காலத்துக்குள்ள உங்க இலக்கை அடையற மாதிரி பிளான் பண்ணிக்கலாம்.

6. பிளெக்சிபில் சிட் ஃபண்டுகள்:

மியூச்சுவல் ஃபண்ட்ஸ்ல பணம் போட்டா, சில ரூல்ஸ் இருக்கும், அதை மாத்த முடியாது. ஆனா இந்த சிட் ஃபண்ட்ஸ்ல நீங்க மாசம் மாசம் போடுற பணத்தை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம் இல்ல உங்களுக்கு தேவைப்பட்டா பணத்தை எடுக்த்துகலாம். பணம் சேமிக்கணும், அதே சமயம் தேவைப்பட்டா எடுக்கணும்னு நினைச்சா, இந்த சிட் ஃபண்ட்ஸ் உங்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்.

சிட் ஃபண்ட்ஸ் எப்படி செயல்படுகிறது?

சிட் ஃபண்ட்ஸின் செயல்முறை மிகவும் எளிதானது. இதை இப்போது கொஞ்சம் டீடைலா பார்க்கலாம்:

1. குழு உருவாக்கம்:

முதல்ல, சில பேர் சேர்ந்து ஒரு குழுவை உருவாக்குவாங்க. அப்புறம் குழுவில் உள்ள அனைவரும் மாசம் மாசம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு நிரந்தர தொகையை செலுத்த ஒப்புக்கொள்வார்கள்.

2. பணம் செலுத்துதல்:

ஒவ்வொரு மாதமும் அல்லது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில குழுவில் உள்ள அனைவரும் முன்கூட்டியே ஒப்புக் கொண்ட தொகையை செலுத்துவாங்க.

3. ஏல முறை:

ஒவ்வொரு மாசமும் இல்ல ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில, மொத்தமா சேர்த்திருக்கும் பணத்தைக் கொண்டு ஏலம் நடத்தப்படும். யார் குறைவான தொகைக்கு ஏலம் கேக்குறாங்களோ, அவங்களுக்கு மொத்த பணமும் கிடைக்கும். அவங்க கேட்ட ஏலத் தொகையை மொத்த பணத்துல இருந்து கழிச்சுடுவாங்க. மீதி பணம் தொடர்ந்து வளரும். மேலும் மீதமான தொகை மற்ற உறுப்பினர்களுக்கு நிகரளவில் விநியோகிக்கப்படும். இது மியூச்சுவல் ஃபண்ட்ஸ்ல பணம் வளர்ற மாதிரிதான்.

4. வருமானம் மற்றும் டிவிடெண்ட்:

உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்புகளுக்கு ஏற்ப லாபங்களைப் பெறலாம். உங்க பங்களிப்பு மற்றும் சிட் ஃபண்ட் எப்படி செயல்படுதுன்னு பொறுத்து, உங்களுக்கு டிவிடெண்ட் கிடைக்கும். பொதுவாக, சேவிங்ஸ் அக்கவுண்ட்டை விட  அதிக லாபம் கிடைக்கும். அதனால, இது ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பு.

சிட் ஃபண்ட்ஸின் நன்மைகள்

இந்தியாவின் கிராமப்புறங்களில் 20%க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிட் ஃபண்ட்ஸில் தீவிரமாக பங்கேற்கின்றன.

— தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் (NCAER)

சிட் ஃபண்ட்ஸ் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அவற்றை விரிவாகப் பார்ப்போம்:

1. பிளெக்சிபில் சேமிப்பு முறை:

இந்த முதலீடு தனிப்பட்ட நிதி திட்டமிடலை அனுமதிக்கிறது. அதாவது உங்க தேவைக்கு ஏத்த மாதிரி எவ்வளவு பணம் போடணும், எவ்வளவு நாள் போடணும்னு நீங்களே முடிவு பண்ணலாம்.

2. உடனடி பணப்புழக்கம்:

சிட் ஃபண்ட்ஸ்ல உறுப்பினர்கள் ஏல முறையின் மூலம் ஒரு பெரிய தொகையை விரைவாக பெறலாம். இது நெருக்கடியான நிதி தேவைகளின் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவசர தேவைகளுக்கும் இது ரொம்ப உதவியா இருக்கும்.

3. அதிக லாபம்:

சாதாரண சேமிப்பு திட்டங்களை விட சிட் ஃபண்ட்ஸ்ல அதிக லாபம் கிடைக்கும். நீங்க போடுற பணம் மற்றும் நீங்க சேர்ந்திருக்கிற சிட் ஃபண்ட் எப்படி வேலை செய்யுதுங்கறத பொறுத்து டிவிடெண்ட்கள் கிடைக்கும். அதுமட்டுமில்லாம, கிடைக்கிற லாபத்துக்கு வரி கட்ட தேவையில்லை. இது ஒரு கூடுதல் நன்மை.

4. சமூக ஆதரவு:

ஒரு குழுவா சேர்ந்து பணம் போடுறதுனால, நம்பிக்கையும் ஆதரவும் கிடைக்கும்.

5. வட்டி இல்லை:

பணம் தேவைப்படும் போது உறுப்பினர்கள் தங்கள் பங்கு பணத்தை எடுத்துக்கலாம். நெருக்கடியான காலங்களில் இது பெரிய நிவாரணமாக இருக்கும். வங்கிக் கடன்களைப் போல வட்டி செலுத்த வேண்டிய அவசியமில்லை.

6. சேமிக்கும் பழக்கம்:

மாசம் மாசம் பணம் போடுறதுனால, சேமிக்கிற பழக்கம் வரும்.

7. முதலீட்டு பல்வகைப்படுத்தல்:

பல்வேறு வழிகளை பயன்படுத்த ஒரு நல்ல வாய்ப்பாகும். பெறப்படும் தொகையை தொழில் முதலீடு, சொத்து வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம்.

8. அரசு கட்டுப்பாட்டில் செயல்படும்:

சிட் ஃபண்ட்ஸ்கள் அரசு விதிமுறைகளின் கீழ் செயல்படும் என்பதால், அதன் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால, நம்பி பணம் போடலாம்.

9. நிதி வளர்ச்சிக்கு வாய்ப்பு:

ஒரு நல்ல சீட்டு நிதி திட்டம் அதன் உறுப்பினர்களுக்கு நல்ல வருமானத்தை வழங்கும். இதன் மூலம் நிதி நிலையை மேம்படுத்திக் கொள்ளலாம்.

10. நிபுணத்துவம் தேவையில்லை:

இது ரொம்ப சிம்பிளான முதலீடு. இதில் பங்கேற்க மார்க்கெட் நிலவரம், ஸ்ட்ராடஜின்னு எதுவும் தெரிஞ்சுக்க தேவையில்லை.

11. எளிய முதலீடு:

இதுல மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மாதிரி சிக்கலான விதிமுறைகள் எதுவும் கிடையாது. நீங்க எவ்வளவு பணம் போடணும், உங்களுக்கு எப்போ பணம் கிடைக்கும்னு முன்னாடியே தெரிஞ்சிடும்.

சிட் ஃபண்ட்ஸிகளின் குறைகள்

சிட் ஃபண்ட்ஸ்ல ரிஸ்க் கம்மிதான். ஆனால், இதுலயும் சில குறைகளும் இருக்கு. முதலீடு செய்றதுக்கு முன்னாடி, இத பத்தி தெரிஞ்சுக்கிறது ரொம்ப முக்கியம். மியூச்சுவல் ஃபண்ட்ஸ் கூட ஒப்பிடும்போது சிட் ஃபண்ட்ஸ்ல என்னென்ன குறைபாடுகள் இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம். 

  • ஏல முறையில் நிலையான வருவாய் கிடைப்பதில்லை

சிட் ஃபண்ட்ஸ்ல எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது ஏல முறையின் அடிப்படையில் முடிவாகிறது. ஒவ்வொரு மாதமும் அல்லது குறிப்பிட்ட காலத்திற்கொருமுறை ஏலம் நடைபெறும். இதில் குறைந்தபட்ச தொகையை கூறும் நபருக்கே அந்த தொகை கிடைக்கும். இதனால், உங்களுக்குக் கிடைக்கும் லாபம் மாறுபடலாம், இது எதிர்பார்ப்புகளுக்கேற்ப இருக்காது.

  • தொடர்ச்சியான முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம்

சிட் ஃபண்ட்ஸ்ல பணம் போட்டா, முழுசா கட்டி முடிக்கணும். நடுவுல எடுக்கணும்னா அபராதம் கட்ட வேண்டி இருக்கும்.

  • மோசடி ஆபத்து:

சிட் ஃபண்ட்ஸ்ல இருக்கிற மிகப்பெரிய பிரச்சனையே மோசடிதான். முக்கியமா, பதிவு செய்யாத சிட் ஃபண்ட்ஸ்ல மோசடி நடக்குற வாய்ப்பு அதிகம். அதனால, நம்பகமான, பதிவு செய்யப்பட்ட சிட் ஃபண்ட்ஸ் நிறுவனங்களை தேர்வு செய்வது அவசியம்.

சரியான முதலீட்டு வழியை தேர்வு செய்வது எப்படி?

உங்களுக்கு எது சரியான முதலீடுங்கறது உங்க நிதி இலக்குகள், ரிஸ்க் எடுக்கும் திறன், எவ்வளவு காலம் முதலீடு செய்ய போறீங்கங்கறத பொறுத்து மாறும்.

1. ரிஸ்க் எடுக்கும் திறன்:

நீங்கள் அதிக ரிஸ்க் விரும்பாதவராக இருந்தால், சிட் ஃபண்ட்ஸ் திட்டங்கள் உங்களுக்கேற்றதாக இருக்கும். ஏன்னா, இதுல லாபம் உறுதியா கிடைக்கும். ஆனால், அதிக வருவாய் பெறவும், சந்தையின் ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்கவும் தயார் என்றால், மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சிறந்த தேர்வாக இருக்கும்.

2. முதலீட்டு காலம்:

சிட் ஃபண்ட்ஸ்ல குறிப்பிட்ட காலத்துக்கு பணம் போடணும். ஆனா, மியூச்சுவல் ஃபண்ட்ஸ்ல நீண்ட காலதுக்கு வேணும்னாலும் பணம் போடலாம். அதனால பணம் சீக்கிரமா வேணும்னா, சிட் ஃபண்ட்ஸ்ல முதலீடு செய்வது நல்லது.

3. முதலீட்டு நோக்கம்:

வீடு, படிப்பு மாதிரி குறிப்பிட்ட தேவைக்கு பணம் சேர்க்கணும்னா, சிட் ஃபண்ட்ஸ் நல்லது. நீண்ட காலத்துல நிறைய பணம் சேர்க்கணும்னா, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் நல்லது.

மியூச்சுவல் ஃபண்ட்ஸை விட சிட் ஃபண்ட்ஸ் முதலீடு ஏன் சிறந்தது?

1. அதிக லாபம்:

சிட் ஃபண்ட்ஸ் முதலீட்டில் பெரும்பாலும் சிறந்த வருவாய் கிடைக்கும். ஏல முறையில் கிடைக்கும் தொகை மாறுபட்டாலும்  லாபம் அதிகமாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

2. விரைவாக பணம் பெரும் வசதி:

மியூச்சுவல் ஃபண்ட்ஸ்ல பல சமயங்களில் பணத்தை திரும்பப் பெற லாக்-இன் பீரியட் இருக்கும். ஆனா, சிட் ஃபண்ட்ஸ்ல ஏலத்தில் வெற்றி பெற்றால், உடனடியாக தேவையான பணம் கிடைக்கும்.

3. குறைந்த கட்டணச் செலவு:

மியூச்சுவல் ஃபண்ட்ஸ்ல மேனேஜ்மென்ட் ஃபீஸ், எக்ஸ்பென்ஸ் ரேஷியோன்னு செலவு இருக்கும். ஆனா, சிட் ஃபண்ட்ஸ்ல இவை இல்லாததால், அதிக சேமிப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

4. சந்தை ஏற்ற இறக்கத்தை சார்ந்தது இல்லை:

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மார்க்கெட்டை பொறுத்து மாறும். மார்க்கெட் சரியா இல்லன்னா நஷ்டம் வரும். ஆனா, சிட் ஃபண்ட்ஸ் மார்க்கெட்டை சார்ந்தது இல்லை. அதனால, இது பாதுகாப்பான முதலீடு.

5. எளிய செயல்பாடு:

மியூச்சுவல் ஃபண்ட்ஸ்ல மார்க்கெட் பத்தி நிறைய தெரிஞ்சிக்கணும். ஆனா, சிட் ஃபண்ட்ஸ்ல  நீங்கள் எவ்வளவு செலுத்த வேண்டும், எப்போது செலுத்த வேண்டும் என்பது தெளிவாக இருக்கும். இது முதலீட்டு அனுபவமில்லாதவர்களுக்கும் எளிதாக புரியக்கூடியதாக இருக்கும்.

உங்களுக்கு ஏற்ற முதலீட்டை தேர்வு செய்யுங்கள்

அதிக லாபம் வேணும், பணம் சீக்கிரமா வேணும், ஒரு குழுவா சேர்ந்து பணம் சேர்க்கணும்னா, சிட் ஃபண்ட்ஸ் நல்லது. நிபுணர்கள் உங்க பணத்தை பாத்துக்கணும், மார்க்கெட் ஏற்ற இறக்கத்தை சமாளிக்க முடியும்னா மியூச்சுவல் ஃபண்ட்ஸ் நல்லது. உங்க நிதி இலக்குகள், ரிஸ்க் எடுக்கும் திறன், எவ்வளவு காலம் முதலீடு செய்ய போறீங்கன்னு பொறுத்து முடிவு பண்ணலாம். முதலீடு என்பது பணத்தை மட்டும் பற்றியதல்ல, உங்கள் எதிர்காலத்தையும் கட்டமைப்பது பற்றியது. எனவே, புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள், உங்கள் நிதி நிலையை மேம்படுத்துங்கள்!

Share your views in the comments section!

Your email address will not be published. Required fields are marked *

Fill the Form

We are happy to assist you!

Powered by Kopuram Chits Private Limited