எந்தவொரு ஸ்டார்ட்அப்பிற்கும் வெறும் ஐடியா மட்டும் பத்தாது. பணம் வேணும்! ஃபண்டிங் தான் ஒரு ஸ்டார்ட்அப்போட உயிர்நாடி. அதுதான் நம்ம கனவுகளை நனவாக்கும். சின்னதா ஆரம்பிச்ச பிசினஸை பெருசா வளர வைக்கும். வாடகை, சம்பளம், மத்த செலவுன்னு எல்லாத்துக்கும் காசு வேணும் இல்லையா? பணம் இல்லன்னா எப்படி பிஸினசை நடத்துறது? நம்ம ப்ராடக்ட்டை இல்லன்னா சர்வீஸை மக்களுக்கு எப்படி கொண்டு போறது?
யோசிச்சுப் பாருங்க, உங்களது தயாரிப்பு அல்லது சேவையை சந்தையில் நிலைப்படுத்த, வாடிக்கையாளர்களை ஈர்க்க, விளம்பரங்கள் செய்ய … என எல்லாத்துக்கும் பணம் வேணும். சும்மா, அத்தியாவசிய செலவுகளை ஈடுகட்டுகிறதுக்கு மட்டும் இல்ல, நம்ம பிசினஸ் எந்த சூழ்நிலையிலும் தாக்குப்பிடிக்கறளவுக்கு வலுவான நிதி ஆதாரம் வேணும்.
சரி, இப்ப உங்க ஸ்டார்ட்அப்பிற்கு தேவையான நிதியைப் பெறுவது எப்படின்னு பாப்போம். நிறைய வழிகள் இருக்கு, ஆனால் சரியான முதலீட்டு உத்தியைத் தேர்ந்தெடுப்பது கயிற்றின் மேல் நடப்பது போன்றது – சிறு தவறு கூட பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திடும். மேலும், தவறான முதலீட்டு முடிவுகளை எடுத்தால், மிகவும் அவசரமான நேரத்தில் பணத்திற்காக திண்டாட வேண்டியிருக்கும்.
அதனால் இந்தப்பதிவில் பலவிதமான முதலீட்டு வழிகளைப் பற்றி அலசி ஆராய்ந்து, உங்களுடைய ஸ்டார்ட் அப் வளர்ச்சிக்கு எது சிறந்தது என்பதைப் பற்றி முடிவு செய்வோம்.
நம்மில் பல பேருக்கு ஃபிக்ஸட் டெபாசிட் (FD), ரெக்கரிங் டெபாசிட் (RD), பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இதெல்லாம் பற்றி நல்லாத் தெரியும். பாக்குறதுக்கு இதெல்லாம் “நம்ம ஊரு சேமிப்பு” மாதிரி தோணும். ஆனால் இவையெல்லாம் நிலையான முதலீடா தெரிஞ்சாலும், நம்ம பிசினஸ் வேகமா வளரவும், நமக்கு தேவைப்படும்போது பணம் பெறவும் இந்த முதலீட்டு வழிகள்ல அதிக லாபம் கிடைக்காது.
நம்ம பிசினஸ் ராக்கெட் மாதிரி மேல போகணும்னா, இதுல மட்டும் இன்வெஸ்ட் பண்ணா போதுமா? யோசிச்சுப் பாருங்க!
உண்மையைச் சொல்லனும்னா, இந்த பாரம்பரிய முதலீடுகள்ல சில நல்ல விஷயங்கள் இருந்தாலும், உங்கள மாதிரி தொழில்முனைவோருக்கு இது சரியா வருமாங்கிறது ஒரு பெரிய கேள்விக்குறிதான்.
வாங்க, இந்த FD, RD, பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் போன்ற முதலீடுகளெல்லாம் எப்படி நம்ம வியாபார வளர்ச்சிக்கு தேவையான அதிக வருமானத்தை தருவதற்கு தவறுதுன்னு கொஞ்சம் ஆழமாக ஆராய்வோம்.
நம்ம ஊர்ல நிறைய பேரு, பணத்தை பாதுகாப்பாக வைக்கணும்னா பிக்சட் டெபாசிட் (Fixed Deposit – FD) தான் சிறந்ததுனு நினைப்பாங்க. அதுல ஒரு நியாயம் இருக்குங்க. ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்துக்கு முதலீடு செய்தால் போதும், மார்க்கெட்ல என்ன நடந்தாலும் நம்ம பணம் பத்திரமா இருக்கும். FD-ல பணத்தை போட்டா நஷ்டத்தை பற்றிய பயமில்லை.
இதுல ஒரு சின்ன விஷயத்தை கவனிக்கனுங்க. எஃப்.டி. பணம் பத்திரமா இருக்க நல்ல வழிதான், ஆனா உங்க பிசினஸ் வேகமா வளரணும்னா, அதுக்கு எஃப்.டி. மட்டும் பத்தாது.
ஏனென்றால் FD-க்கான லாபம் ரொம்ப அதிகமா இருக்காது. பொதுவா 5-7% தான் கிடைக்கும். நீங்க ஒரு புதுசா ஸ்டார்ட் அப் ஆரம்பிச்சு, வியாபாரம் வளர்க்கணும், அதிகம் சம்பாதிக்கணும், வேகமான முன்னேரணும்னு நினைச்சீங்கன்னா, அந்த 5-7% வருமானம் உங்களுக்குப் பெரிய உதவியா இருக்காது.
பணம் பத்திரமா இருக்கணும், ரிஸ்க் எடுக்க வேணாம்னு நினைச்சா எஃப்.டி. சூப்பருங்க. ஆனா அதிக வருமானம், வேகமான வளர்ச்சி, புது வாய்ப்புகளைப் பயன்படுத்தணும்னு நினைச்சீங்கன்னா FD போதாது. கொஞ்சம் வேகமாவும், கொஞ்சம் ஃப்ளெக்ஸிபிளாவும் இருக்கற முதலீடத்தான் தேர்வு செய்யணும்.
ரெக்கரிங் டெபாசிட் (RD) நிறைய பேருக்குப் பிடித்த ஒரு சேமிப்பு திட்டம். மாசா மாசம் கொஞ்சம் கொஞ்சமாப் பணம் போட்டுப் சேமிக்க ஒரு நல்ல வழி. பாதுகாப்பான முதலீடுதான், லாபமும் கிடைக்கும். ஆனால், பிக்சட் டெபாசிட் மாதிரியே, ரெக்கரிங் டெபாசிட்லயும் ரிட்டர்ன்ஸ் சுமார் 5-7% தான் இருக்கும். பணம் பத்திரமா இருக்கும், ஆனா அதிக வருமானம் கிடைக்காது. உங்க ஸ்டார்ட் அப் பிசினஸ் வேகமா வளரணும்னு நீங்க நினைச்சீங்கன்னா, ஆர்.டி.-ல எதிர்பார்த்த வேகத்துல வளர்ச்சி இருக்காது. அதிக வருமானம் வேணும்னு நெனச்சா, வேறு வழிகளைதான் பார்க்கனும்.
பங்கு சந்தைல பணத்தைப்போட்டால் நல்ல லாபம் கிடைக்கும்ங்கிறது உண்மைதான். ஆனால், பிசினஸ் வளர்ச்சிக்கு பங்கு சந்தைய நம்புறதுல சில சிக்கல்கள் இருக்கு. முக்கியமா, ஸ்டாக் மார்க்கெட்ல விலை ஏறும் இறங்கும். எப்ப ஏறும், எப்ப இறங்கும்னு யாராலும் சரியாய் சொல்ல முடியாது. பங்கு சந்தை நிலவரம், நீங்க முதலீடு செய்துள்ள கம்பெனியோட பெர்ஃபார்மன்ஸ்னு பல விஷயங்களைப் பொறுத்து உங்கள் பங்குகளின் விலை மாறும். இந்த ஏற்ற இறக்கம் உங்களை கொஞ்சம் டென்ஷனாக்கும்.
உங்களுக்கு உடனே பணம் தேவைப்பட்டா, உங்கள் பங்குகளை விக்கிறது சுலபமா இருக்காது. ஏன்னா, பங்கு சந்தை நிலவரம் சரியில்லாம இருந்தா நஷ்டம் தான் ஏற்படும். அதுமட்டுமில்லாம, ஸ்டாக்ஸ்ல எப்பவுமே லாபம் கிடைக்கும்னு சொல்ல முடியாது. சில நேரம் நல்ல லாபம் கிடைக்கும், சில நேரம் நஷ்டமும் ஆகலாம். ஸ்டார்ட் அப் பிசினஸுக்கு நிலையான வருமானம் ரொம்ப முக்கியம். ஒரு ஸ்டார்ட்அப்போட வளர்ச்சிக்கு, நிதி நிலைமை உறுதியாக இருக்கணும். ஸ்டாக் மார்க்கெட்ல ரிஸ்க் இருக்குறதால நெருக்கடியான சூழலில் பிசினஸ வளர்க்க கைகொடுக்காது.
உங்களோட எல்லா பணத்தையும் ஒரே இடத்தில் மட்டும் முதலீடு பண்ணாமல் பல ஷேர்களில் பரவலாக முதலீடு செய்வதற்கான வழியை மியூச்சுவல் ஃபண்டுகள் வழங்குகின்றன. இதனால், ஒரு இடத்தில் நஷ்டம் வந்தாலும், மற்ற இடங்களில் லாபம் வர வாய்ப்பு இருக்கும். இதுதான் மியூச்சுவல் ஃபண்ட்ஸின் பலம்.
மியூச்சுவல் ஃபண்ட்ஸ்ல லாபம் வந்தாலும், அது உடனடியா உங்க ஸ்டார்ட் அப்பை வேகமா வளர வைக்கப் போதுமானதா இருக்காது. மியூச்சுவல் ஃபண்ட்ஸ் கொஞ்சம் கொஞ்சமா, பொறுமையா வளர உதவுமே தவிர, டக்குன்னு பெரிய லாபம் கொடுக்காது.
அதுமட்டுமில்லாம, உங்களுக்குப் பணம் உடனே தேவைப்பட்டா, மியூச்சுவல் ஃபண்ட்ஸ உடனே எடுக்க முடியாது. கொஞ்சம் நாள் ஆகும். அதுவும் மார்க்கெட் எப்படி இருக்குங்கிறத பொறுத்து, நம்மளுக்குக் கிடைக்கிற ரிட்டர்ன்ஸ் மாறும். உடனே பணம் வேணும்னாலோ, இல்ல நிலையான வருமானம் வேணும்னாலோ, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் நம்மளுக்கு வேணுங்கிற ஃப்ளெக்ஸிபிலிட்டியை கொடுக்காது.
பாரம்பரிய முதலீடுகள் நல்லா இருந்தாலும், பிசினஸுக்கு உடனடியா பணம் தேவைப்படும்போது அவை எப்போதும் பொருந்தாது. இங்குதான் சிட் ஃபண்ட் (Chit Fund) முக்கியமானதாகிவிடுகிறது. அதிக லாபமும் வேணும், தேவைப்படும்போது உடனே பணமும் வேணும்னு நினைக்கிறவங்க சிட் ஃபண்ட்ஸ ட்ரை பண்ணலாம்.
பாக்க சாதாரணமான முதலீடா தெரிஞ்சாலும், உங்களோட ஸ்டார்ட்அப் வேகமா வளர்றதுக்கு சிட் ஃபண்ட் ஒரு சிறந்த தேர்வு. உங்களோட ஸ்டார்ட்அப்போட வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் இது எப்படி ஒரு நல்ல முதலீடா இருக்கும்ன்னு பாக்கலாம் வாங்க!
சிட் ஃபண்ட் என்பது சேமிப்புக்கும், தேவைப்படும்பொழுது எளிதில் பணம் பெறுவதற்குமான ஒரு அட்டகாசமான திட்டம்.
ஆனால், இது உங்கள் ஸ்டார்ட்அப்புக்கு எப்படி பயனளிக்கும்?
சிட் ஃபண்ட் மூலம் சேமிக்கவும் முடியும், அவசரத் தேவைக்கு பணம் பெறுவதற்கும் முடியும். FD போல நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை, ஷேர்மார்க்கெட் மாதிரி பெரிய பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வுகளும் இருக்காது.
சிறிய முதலீட்டில், நிறைய லாபம் பெற சிட் ஃபண்ட்ஸ எப்படி பயன்படுத்தலாம்? அடுத்தடுத்த பகுதிகளில் பார்ப்போம்!
ஸ்டார்ட்அப்-களுக்கு பணப்புழக்கத்தைக் கையாளுவது ஒரு மிகப் பெரிய சவாலாகும். இங்குதான் சிட் ஃபண்ட் ஒரு சிறந்த தீர்வாக மாறுகிறது. RD, FD போல பணத்தை நீண்ட காலம் முடக்கி வைக்க வேண்டியதில்லை, ரியல் எஸ்டேட் போல விற்று பணம் பெற நீண்ட காலம் பிடிக்காது. உடனே பணம் தேவைப்பட்டால் சீக்கிரமா சீட்டு எடுத்தீங்கன்னா, உடனே ஒரு பெரிய தொகை கிடைக்கும். அதை உங்கள் தொழிலில் மீண்டும் முதலீடு செய்யலாம். இன்வென்டரி வாங்கலாம், மார்க்கெட்டிங் பண்ணலாம், இல்ல டீமைக்கூட எக்ஸ்பாண்ட் பண்ணலாம். அதுமட்டுமில்ல, இது ஒரு கடன் மாதிரி இருந்தாலும், வங்கிக் கடன்கள் போல அதிக வட்டி கட்ட வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் உங்களுடைய சேமிப்பிலிருந்துதான் பணம் எடுக்குறீங்க. அதனால வட்டி கட்டணும்னு டென்ஷன் வேணாம்.
புத்திசாலித்தனமாக நிர்வகிக்கப்பட்டால் சிட் ஃபண்டுகள் அதிக வருமானத்தை அளிக்கும். குறிப்பாக நீங்கள் எப்படி சீட்டு எடுக்குறீங்கங்கிறத பொறுத்து, ஃபிக்சட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட்ல கிடைக்கிறதவிட ரொம்ப அதிகமா லாபம் பாக்கலாம். உதாரணத்திற்கு நீங்கள் சீக்கிரமா சீட்டு எடுக்காம கொஞ்சம் லேட்டா எடுத்தீங்கன்னா, 12% வரை சூப்பரா லாபம் பாக்கலாம்.
பாரம்பரிய முதலீடுகளை விட சிட் ஃபண்ட் அதிக லாபம் தரும்.
சிட் ஃபண்டில் எப்போது ஏலம் எடுக்கிறீர்கள் என்பதை பொருத்தே லாபம் உள்ளது.
சரியான திட்டமிடல் இருந்தால், நீங்கள் அதிக லாபம் பெற்று, உங்கள் தொழிலை வேகமாக வளர்க்கலாம்.
அதிக லாபம், உடனே பணம்… இது மட்டும்தானா? சிட் ஃபண்ட்ஸ்ல வேற சலுகைகளும் இருக்கு. ஒவ்வொவன்றாய் பார்க்கலாம்:
சிட் ஃபண்ட்ஸ்ல நீங்க மாசா மாசம் பணம் சேமிக்கலாம். அதே சமயம், பணம் தேவைப்படும்போது ஏலம எடுக்கவும் முடியும். இந்த வசதியினால், இது மற்ற முதலீட்டு வழிகளுடன் ஒப்பிடும்போது அதிக பயனுள்ளதாய் இருக்கும்.
சீட்டு எடுத்தீங்கன்னா, உடனே ஒரு பெரிய தொகை கிடைக்கும். அவசர தேவைக்காகவோ இல்ல பிசினஸ் தேவைக்காகவோ இது ரொம்ப உதவியா இருக்கும். டக்குன்னு பணம் வேணும்னா இது ஒரு நல்ல சாய்ஸ்.
சிட் ஃபண்ட்ஸ்ல நீங்கள் உங்களது சேமிப்புல இருந்து தான் பணம் எடுக்குறீங்க. அதனால வட்டி கட்ட வேண்டியது இல்லை.
மாசா மாசம் சிட் ஃபண்ட்ஸ்ல பணம் போடுறதுனால சேமிக்கிற பழக்கம் வரும். ஒவ்வொரு மாசமும் கண்டிப்பா பணம் சேமிக்கணும்னு நினைப்பீங்க.
சீட்டு கொஞ்சம் லேட்டா எடுத்தீங்கன்னா, உங்க சேமிப்புக்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கு. பொறுமையா இருந்தா நல்ல ரிட்டர்ன்ஸ் பாக்கலாம்.
சிட் ஃபண்ட்ஸ்ல பணம் எடுக்குறதுனால யாருக்கும் உங்க கம்பெனியோட பங்கு கொடுக்க தேவையில்ல.
சிட் ஃபண்ட்ஸ்ல சேர்றது ரொம்ப சுலபம். நிதி மேலாண்மை பற்றிய அறிவோ அல்லது வேற நிபுணத்துவமோ தேவைப்படாது.
நம்ம ஊர்ல நிறைய பேரு சிட் ஃபண்ட்ஸ பல வருஷமா நம்பி சேமிச்சிட்டு இருக்காங்க. குறிப்பா பேங்கிங் வசதி கம்மியா இருக்கிற இடங்கள்ல இது ரொம்ப உதவியா இருக்கு.
சிட் ஃபண்ட்ஸ்ல அதிக வருமானத்தை ஈட்ட முடியும் என்றாலும், நம்பகமான சீட்டு நிதி நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். சிட் ஃபண்ட்ல சேர்றதுக்கு முன்னாடி, அத பத்தி நல்லா விசாரிச்சு தெரிஞ்சுக்கோங்க. முன்னாடியே சீட்டு சேர்ந்தவங்க என்ன சொல்றாங்கன்னு கேளுங்க. அப்புறம் எல்லா கண்டிஷன்ஸ்களயும் நல்லா புரிஞ்சுக்கோங்க.
உங்கள் வணிக இலக்குகள், பணத் தேவைகள் மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவற்றுடன் ஒத்துப்போவது தான் உங்கள் ஸ்டார்ட்அப்க்கான சிறந்த முதலீட்டு உத்தி. ஃபிக்சட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்ட்ஸ் எல்லாம் நல்ல சாய்ஸ்தான். ஆனால், சிட் ஃபண்ட்ஸ்ல அதிக லாபம் கிடைக்கும். உங்களுக்கு பணம் தேவைப்படும் போது ஏலம் எடுக்கலாம். அதனால, நீங்க இன்வெஸ்ட்மென்ட் பத்தி யோசிக்கும்போது சிட் ஃபண்ட்ஸ மறந்துடாதீங்க. உங்க ஸ்டார்ட் அப்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக இது ஒரு சூப்பர் சாய்ஸா இருக்கும்.
Corporate Office: RR Tower-IV, Thiru Vi Ka Industrial Estate, Guindy,
Chennai – 600032
Head Office: 91-Pon Complex, Palakkad Main Road, Kuniyamuthur, Coimbatore – 641008
Call us: +91 844-844-9027
©2025. Kopuram Chits Private Limited, All Rights Reserved.
We happy to assist you!
Experience: 2+ Years
Qualification: Any Degree
Roles and Responsibilities
Desired Candidate Profile
Note: This job description is gender-specific as requested. However, it is important to ensure equal opportunity and non-discrimination in the hiring process.
We always welcome talented minds as a part of our Family!!
Experience: 2+ Years
Qualification: Any Degree
Roles and Responsibilities
Desired Candidate Profile
We always welcome talented minds as a part of our Family!!
Experience: 1+ Years
Qualification: Any Degree
Roles and Responsibilities+
Desired Candidate Profile
We always welcome talented minds as a part of our Family!!
Powered by Kopuram Chits Private Limited
Experience: 5 – 10+yrs
Qualification: Any Degree
Roles and Responsibilities+
Desired Candidate Profile
We always welcome talented minds as a part of our Family!!