Table of Contents

முதலீட்டில் தவிர்க்க வேண்டிய 14 தவறுகள்: உங்கள் பணத்தை பாதுகாப்பாக வளர்ப்பது எப்படி?

blog banner 14 mistakes to avoid in investments

முதலீடுன்னா என்ன, ஏன் செய்யணும்னு யோசிச்சிருக்கீங்களா? சிம்பிளா சொல்லணும்னா, இன்னைக்கு நம்மகிட்ட இருக்கிற பணத்தை, நாளைக்கு இன்னும் அதிகமாக்கறதுக்கான ஒரு வழிதான் முதலீடு. சாதாரணமா வீட்ல பணத்தை வெச்சிருந்தா, அது அப்படியேதான் இருக்கும். ஆனா, அதை ஏதாவது ஒரு இடத்துல முதலீடு பண்ணுனா, அது வளர்றதுக்கு வாய்ப்புகள் நிறைய இருக்கு. உதாரணமா, ஒரு சின்ன கடை ஆரம்பிக்கலாம், இல்ல நிலம் வாங்கலாம், இல்ல பங்குச் சந்தையில பணத்தைப் போடலாம். இது எல்லாமே முதலீடுதான்.

ஆனா, நிறைய பேருக்கு முதலீடு செய்யறதை நினைத்தாலே ஒரே குழப்பமா இருக்கு. ஏன்னா, பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட்ஸ், ரியல் எஸ்டேட், தங்கம்னு ஏகப்பட்ட முதலீட்டு வாய்ப்புகள் இருக்கு. இதுல எந்த முதலீடு  நமக்குச் சரியா இருக்கும்னு தேர்ந்தெடுக்கிறது ரொம்ப கஷ்டம். அதுமட்டுமில்லாம, மார்க்கெட் எப்பவும் ஒரே மாதிரி இருக்காது. ஏறி இறங்கும். அப்போ, நம்ம போட்ட பணம் குறைய வாய்ப்பு இருக்கு. இதையெல்லாம் யோசிச்சு, கொஞ்சம் பொறுமையா முடிவு எடுக்கணும்.

முதலீடு செய்றதுக்கு முன்னாடி, முதல்ல நம்ம இலக்கு என்னன்னு தெரிஞ்சுக்கணும். எதுக்காக முதலீடு செய்றோம்? வீடு வாங்குறதுக்கா? கார் வாங்குறதுக்கா? பிள்ளைங்க ஸ்கூல் பீஸ் கட்டறதுக்கா? இல்ல வேற ஏதாவது காரணத்துக்காகவானு இலக்க நிர்ணயிச்சுட்டு, அதுக்கு ஏத்த மாதிரி திட்டமிடனும். 

அடுத்து, நம்மளாள எவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியும்னு பார்க்கணும். சில முதலீடுகள்ல ரிஸ்க் அதிகம், சிலதுல குறைவு. ரிஸ்க் அதிகமா இருந்தா, லாபமும் அதிகமா இருக்கும். ஆனா, நஷ்டமும் வரலாம். அதனால, நம்ம இலக்குகளுக்கும், சூழ்நிலைக்கும் ஏத்த மாதிரி ரிஸ்க் எடுக்கணும். முக்கியமா, எந்த முதலீடு செய்றதா இருந்தாலும், அதைப் பத்தி நல்லா தெரிஞ்சுக்கணும். 

முதலீடு செய்து பணக்காரர்களாக மாறியவர்களின் கதைகளை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். எல்லாவற்றையும் இழந்தவர்களும் இருக்கிறார்கள். முதலீடு செய்வதில்  நீங்கள் ஒரு சின்ன தவறைச் செய்தால் கூட  எல்லாவற்றையும் இழக்க நேரிடும். அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்கள் கூட தவறுகளைச் செய்யலாம். அதனால, அவசரப்பட்டு யாரையும் நம்பி முதலீடு பண்ணக்கூடாது. பொறுமையா, நிதானமா யோசிச்சு முடிவு எடுக்கணும். முதலீடு என்பது ஒரு நீண்ட கால பயணம். அதில் உடனடி லாபத்தை எதிர்பார்க்காம, பொறுமையா காத்திருக்கணும். அப்போதான் நம்ம பணம் நல்லா வளரும். 

முதலீடு செய்யும்போது, நீங்கள் கண்டிப்பாக செய்யக்கூடாத 14 முக்கியமான தவறுகளை இப்போது பார்க்கலாம்.

1. “சீக்கிரமா பணக்காரர் ஆகலாம்”னு ஆசை காட்டும் முதலீட்டுப் பொறி

 “இங்கே நூறு ரூபாய் போட்டேன், அங்கே கோடி ஆனது!” அல்லது “கொஞ்ச நாள்ல உங்க பணம் பல மடங்கு அதிகமாகும்”னு விளம்பரங்கள் காட்டுறாங்க இல்லையா? சில பேர் ஒரே நாள்ல நிறைய பணம் சம்பாதிச்சிட்டாங்கன்னு கேள்விப்படுறோம். இதெல்லாம் பாக்கும்போது நமக்கும் ஆசையா இருக்கும். ஆனா, உண்மையிலேயே இது சாத்தியமா? பெரும்பாலும் அவை நம்மை ஏமாற்றும் கண்ணிவலையாக இருக்கலாம். பலர் இப்படி முயற்சி செய்துவிட்டு பணத்தையும் நம்பிக்கையையும் இழக்கிறார்கள்.

பொதுவா, உடனடியா நிறைய பணம் தர்றேன்னு சொல்ற முதலீடுகள் நம்பத்தகுந்தவையா இருக்காது. சீக்கிரமா பணக்காரர் ஆகணும்னு ஆசைப்படறது இயல்புதான். ஆனா, இப்படி ஆசைப்பட்டு ஏமாந்து போறவங்கதான் அதிகம்.

நம்ம பணம் வளரணும்னா, வேகமாக பணம் சம்பாதிக்க நினைப்பதை தவிர்க்க வேண்டும். பொறுமையா, நீண்ட கால முதலீடுகள்ல கவனம் செலுத்தணும். திடீர்னு வர்ற கவர்ச்சியான முதலீடுகளை நம்பாம, நல்லா தெரிஞ்ச முதலீடுகள்ள பணத்தைப் போடுறதுதான் நல்லது. 

ஒரு விதையை நட்டு, அது பெரிய மரமாக வளர எவ்வளவு நாள் ஆகும்? உடனே மரம் வளருமா? வளராது இல்லையா? அதற்கு உரமும், தண்ணீரும் போட்டு, நாளாக நாளாக வளரச் செய்ய வேண்டும். அதே மாதிரிதான் முதலீடும். பொறுமையா, கவனமா முதலீடு செஞ்சா, அது கொஞ்சம் கொஞ்சமா வளரும்.

வாரன் பஃபெட் (Warren Buffett) “மெதுவா பணக்காரர் ஆகுங்க” -னு சொன்ன மாதிரி, பொறுமையை கடைபிடிப்பது முக்கியம். நீண்ட கால முதலீடுகள்ல, நல்லா தெரிஞ்ச இடங்கள்ல பணத்தைப் போடுங்க. உடனடியா நிறைய லாபம் தர்றேன்னு சொல்ற முதலீடுகள்ள ரிஸ்க் அதிகம், சில நேரம் ஏமாத்துறவங்களா கூட இருக்கலாம். முதலீட்டு கால்குலேட்டரைப் (investment calculator) பயன்படுத்தி, எவ்வளவு லாபம் கிடைக்கும்னு தெரிஞ்சுக்கோங்க. இப்படி செஞ்சா ஏமாறாம, உங்க பணத்தை நல்லா வளர்க்கலாம்.

2. முதலீடு செய்யும்போது உங்க ரிஸ்க் சகிப்புத்தன்மையை மறந்துடாதீங்க!

நிறைய பேர் முதலீடு பண்றப்போ, ரிஸ்க் பத்தி கவலைப்படாம, லாபத்தை மட்டும் பாத்து முடிவெடுப்பாங்க. ஆனா, ரிஸ்க் எடுக்கிறதுனால நஷ்டம் வரவும் வாய்ப்பு இருக்கு. அதனால, முதலீடு பண்றதுக்கு முன்னாடி, உங்களால எவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியும்னு தெரிஞ்சுக்கிறது ரொம்ப முக்கியம். இதைத்தான் “ரிஸ்க் சகிப்புத்தன்மை”னு [Risk tolerance] சொல்றோம்.

எல்லாருக்கும் அதிக ரிஸ்க்கான முதலீடுகள் வசதியாக இருக்காது. உங்க வயசு, நிதி நிலைமை, நிதி இலக்குகள் இதையெல்லாம் பொறுத்து ரிஸ்க் எடுக்கும் தன்மை மாறும். உதாரணமா, நீங்க இளம்வயதில் இருக்கீங்க, நிறைய வருஷம் முதலீடு பண்ணப்போறீங்கன்னா, கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம். ஏன்னா, நஷ்டம் வந்தாலும் சரி பண்ணிக்க நேரம் இருக்கு. ஆனா, ரிட்டையர்மெண்ட்காக பணம் சேக்குறவங்க ரிஸ்க் கம்மியா எடுக்கணும்.

ரிஸ்க் எவ்வளவுன்னு கணக்கு போட்டுப் பார்க்க ஆன்லைன் கால்குலேட்டர்ஸ் உதவும். உங்க முதலீட்டுத் தொகை, கால அளவு, எதிர்பார்க்கும் லாபம் இதையெல்லாம் போட்டுப் பாத்தா, உங்களுக்கு எவ்வளவு ரிஸ்க் இருக்கு, எவ்வளவு லாபம் கிடைக்கும்னு தெரிஞ்சுக்கலாம்.

மியூச்சுவல் ஃபண்ட்ல போடணும்னு நினைக்கிறவங்க, மியூச்சுவல் ஃபண்ட் கால்குலேட்டரை பயன்படுத்தி ரிஸ்க் எவ்வளவுன்னு தெரிஞ்சுக்கலாம். முதலீடு செய்யறதுக்கு முன்னாடி, உங்க ரிஸ்க் அளவைப் புரிஞ்சுக்கிட்டு, அதுக்கேத்த மாதிரி முதலீடு செய்யுங்க. அப்போதான், நஷ்டப்படாம லாபம் பாக்க முடியும்.

3. முதலீடு செய்யும்போது உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுக்கக்கூடாது

நீங்க ஒரு நண்பரோட சேர்ந்து பங்குச் சந்தையில முதலீடு பண்றீங்கன்னு வைங்க. திடீர்னு மார்க்கெட் இறங்க ஆரம்பிச்சுடுச்சு. உங்களுக்கு பயமா இருக்கும். “அச்சச்சோ! மார்க்கெட் இன்னும் இறங்குறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் வித்துடணும்!” என்று தோன்றும்.

ஆனால் உங்கள் நண்பர், “மார்க்கெட் ஏறி இறங்குறது சகஜம். நாம நீண்ட காலத்துக்கு முதலீடு பண்றோம். பயப்படாதீங்க!” என்கிறார். முதலீடு பண்றதுல இதுதான் முக்கியமான பாடம். முதலீடு பண்ணும்போது உணர்ச்சிவசப்படக் கூடாது. மார்க்கெட் ஏறி இறங்கும்போது, பதட்டப்படாம, பொறுமையா இருக்கணும். முதலீடு பண்றதுக்கு முன்னாடியே ஒரு திட்டம் போட்டுக்கோங்க. அந்த திட்டத்தை விடாம பின்பற்றுங்க. உணர்ச்சிவசப்பட்டு அவசரப்பட்டு முடிவெடுத்தா, நஷ்டம் வர வாய்ப்பு அதிகம்.

முதலீட்டு கால்குலேட்டர்ஸ் [investment calculators] மாதிரி டூல்ஸ் பயன்படுத்தி, உங்க முதலீடுகளைப் பத்தி தெளிவா தெரிஞ்சுக்கோங்க. எவ்வளவு முதலீடு செய்யலாம், எவ்வளவு லாபம் கிடைக்கும்,  ரிஸ்க் எவ்வளவுன்னு பாருங்கள். அப்போதான், லாபகரமான முடிவுகள் எடுக்க முடியும்.

4. ஒரே இன்வெஸ்ட்மெண்ட நம்பி இருக்காதிங்க!

முதலீடு பண்றவங்க பண்ற ஒரு தப்பு என்னன்னா, எல்லா பணத்தையும் ஒரே இடத்துல போடுறது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. “எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே.” அந்த ஒரு கூடை கீழ விழுந்தா, எல்லா முட்டையும் உடைஞ்சிடும் இல்லையா? முதலீடு செய்யறதும் அதே மாதிரிதான், எல்லா பணத்தையும் ஒரே இடத்துல போட்டா, அந்த முதலீடு நஷ்டத்துல முடிஞ்சா, உங்க பணம் எல்லாம் போயிடும்.

அதனால, பணத்தை பல இடங்கள்ல பிரிச்சுப் போடுறது ரொம்ப முக்கியம். இதைத்தான் “டைவர்சிஃபிகேஷன்”னு சொல்றோம். உதாரணத்துக்கு, கொஞ்சம் பணத்தை பங்குச் சந்தையில போடுங்க, கொஞ்சம் பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட்ல போடுங்க, கொஞ்சம் பணத்தை நிலத்துல போடுங்க. இப்படி பல இடங்கள்ல போட்டா, ஒரு இடத்துல நஷ்டம் வந்தாலும், மத்த இடங்கள்ல லாபம் கிடைக்கும்.

டைவர்சிஃபிகேஷன் பத்தி நல்லா தெரிஞ்சுக்க முதலீட்டு கால்குலேட்டர்ஸ் உதவும். அதுல, பலவிதமான முதலீடுகள்ளபணத்தை எப்படி பிரிச்சுப் போடுறது, ரிஸ்க் எவ்வளவு இருக்கும், லாபம் எவ்வளவு கிடைக்கும்னு எல்லாத்தையும் தெளிவா பாத்துக்கலாம்.

5. இலக்கில்லாமல், திட்டமிடாமல், கண்மூடித்தனமா முதலீடு செய்யாதீர்கள்!

முதலீடு பண்றதுக்கு முன்னாடி, எதுக்கு பணம் போடுறோம்னு தெரிஞ்சுக்கிறது ரொம்ப முக்கியம். இலக்கு இல்லாம பணம் போடுறது, கண்ணை மூடிக்கிட்டு கார் ஓட்டுற மாதிரி. எப்படி கார் ஓட்ட முடியும்? அதே மாதிரிதான், இலக்கு இல்லாம பணம் போட்டா எதுல முதலீடு செய்யணும், எவ்வளவு நாள் முதலீடு பண்ணனும், எப்போ பணத்தை எடுக்கணும்னு எதுவுமே தெரியாது.

“நிதி திட்டம் இல்லேன்னா, நீங்க தோல்வி அடைய திட்டமிடுறீங்கனு அர்த்தம்” அப்படினு நிதி ஆலோசகர்  சூசி ஆர்மன்  சொன்ன மாதிரி முதலீடு பண்றதுக்கு முன்னாடி, ஒரு திட்டம் போட்டுக்கிறது ரொம்ப முக்கியம். 

முதலீட்டுல இலக்குகளை அடைய, முதலீட்டு கால்குலேட்டர்ஸ் ரொம்ப உதவும். உதாரணமா, 5 வருஷத்துல ஒரு வீடு வாங்கணும்னு இலக்கு வெச்சிருக்கீங்கன்னா, அதுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும், எவ்வளவு பணம் முதலீடு செய்யணும்னு கால்குலேட்டர்ல போட்டு பாக்கலாம்.

மியூச்சுவல் ஃபண்ட்ல முதலீடு பண்றீங்கன்னா, மியூச்சுவல் ஃபண்ட் கால்குலேட்டர் பயன்படுத்தி எதிர்பார்க்கும் லாபம் இதையெல்லாம் கணக்குப் போட்டுப் பாக்கலாம். ஆனா,  அதுக்குன்னு அதிக லாபத்தை எதிர்பார்க்காம ரியலிஸ்டிக்கா யோசிச்சு முடிவெடுங்க.

6. நல்லா ரிசர்ச் பண்ணாம முதலீடு பண்ணாதீங்க

முதலீடு பண்றதுக்கு முன்னாடி, நல்லா ரிசர்ச் பண்ணனும்னு சொன்னேன் இல்லையா? அதைப் பத்தி இப்போ கொஞ்சம் விரிவாப் பேசலாம். எல்லாரும் பண்றாங்ககிறதுக்காக நீங்களும் முதலீடு பண்ணாதீங்க. பிட்காய்ன் முதலீடு இதற்கு ஒரு சிறந்த  உதாரணம். அதன் விலை வானளாவ ஏறுனப்போ பலரும் வாங்க துவங்கினர். கொஞ்ச காலத்துல சந்தை மொத்தமாக சரிந்தது, அதனால பெரும்பாலான பிட்காய்ன்  முதலீட்டாளர்கள் பெரிய இழப்புகளை சந்தித்தார்கள். 

மற்றவர்களைப் பார்ப்பதற்குப் பதிலாக, முதலீட்டின் நன்மை தீமைகளை அலசுங்கள். எல்லோருக்கும் பொருந்தும் முதலீடு, உங்களுக்கு சரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. முதல்ல, நீங்க எதுல முதலீடு பண்ணலாம்னு யோசிக்கிறீங்களோ, அந்த முதலீட்ட பத்தி முழுசா தெரிஞ்சுக்கணும். உதாரணமா, பங்குச் சந்தையில முதலீடு பண்ணலாம்னு நினைச்சா, பங்குச் சந்தை எப்படி வேலை செய்யுது, ரிஸ்க் என்ன, லாபம் என்னனு எல்லாத்தையும் நல்லா தெரிஞ்சுக்கணும். இதுக்கு நிறைய புத்தகங்கள், இணையதள பதிவுகள் இருக்கு. படிச்சுப் பாருங்க.

அப்புறமா மார்க்கெட் நிலவரத்தை தெரிஞ்சுக்கிறது ரொம்ப முக்கியம். எந்தெந்த முதலீடுகள் நல்லா போயிட்டு இருக்கு, எந்தெந்த முதலீடுகள் நஷ்டத்துல இருக்குன்னு தெரிஞ்சா, அதுக்கேத்த மாதிரி முதலீடு பண்ணலாம்.

எல்லா முதலீடுகள்லயும் கொஞ்சம் ரிஸ்க் இருக்கு. ரிஸ்க் எவ்வளவுன்னு தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கு ஏத்த மாதிரி முதலீடு பண்ணனும்.

நீங்க எதுக்காக முதலீடு பண்றீங்க? வீடு வாங்கணுமா? குழந்தைங்க படிப்புக்கா? ஓய்வு காலத்துக்கா? என்கின்ற இலக்குகளைப் பொறுத்து, முதலீடும் மாறுங்கறத தெரிஞ்சுக்கோங்க. 

இதுக்கெல்லாம் முதலீட்டு கால்குலேட்டர்ஸ் ரொம்ப உதவியா இருக்கும். அதுல, நீங்க எவ்வளவு பணம் போடப்போறீங்க, எவ்வளவு வருஷத்துக்கு போடப்போறீங்க, எவ்வளவு லாபம் வேணும்னு போட்டு பாத்தா, உங்களுக்கு எவ்வளவு ரிஸ்க் இருக்கு, எவ்வளவு லாபம் கிடைக்கும்னு தெரிஞ்சுக்கலாம்.

நல்லா ரிசர்ச் பண்ணி, உங்க இலக்குகளுக்கு ஏத்த மாதிரி முதலீடு பண்ணுங்க. முதலீட்டு கால்குலேட்டர்ஸ பயன்படுத்தி, ரிஸ்க், லாபம் எல்லாம் பாருங்க. அப்போதான், நஷ்டப்படாம லாபம் பாக்க முடியும்.

7.  நிதி ஆலோசகர்கள் ஆலோசனையை கேக்காம பெரிய அளவில் முதலீடு செய்யாதீர்கள்!

முதலீடு செய்யத் தொடங்க உங்களுக்கு நிதி ஆலோசகர் தேவையில்லை என்றாலும், பெரிய அளவில் முதலீடு செய்யும்போது ஒரு நிபுணரை அணுகுவது நல்லது. உங்களுக்கு முதலீடு பத்தி எதுவும் தெரியலைன்னா, தெரிஞ்சவங்ககிட்ட ஆலோசனை கேக்கலாம். நிறைய நிதி ஆலோசகர்கள் இருக்காங்க. அவங்க, உங்க நிதி இலக்குகளுக்கு ஏத்த மாதிரி, எந்தெந்த முதலீடுகள்ள பணம் போடலாம்னு சொல்லுவாங்க.

ஆனா, ஆலோசனை கேக்குறது மட்டும் போதாது. நீங்களும் கொஞ்சம் முயற்சி பண்ணனும். உதாரணமா, மியூச்சுவல் ஃபண்ட்ல முதலீடு பண்ணலாம்னு நினைச்சா, மியூச்சுவல் ஃபண்ட் கால்குலேட்டர பயன்படுத்தி, ரிஸ்க், லாபம் எல்லாம் பாக்கலாம். அதுல, எவ்வளவு பணம், எவ்வளவு காலம், எவ்வளவு லாபம் கிடைக்கும்னு போட்டு பாத்தா, உங்க முதலீடு எப்படி வளரும்னு தோராயமா தெரிஞ்சுக்கலாம்.

8. மார்க்கெட்டை டைம் பண்ணனும்னு நினைக்காதீங்க!

பங்குச் சந்தையில முதலீடு பண்றப்போ, நிறைய பேர் விலை கம்மியா இருக்கும்போது வாங்கி, விலை அதிகமா இருக்கும்போது விக்கணும்னு நினைப்பாங்க. இதுக்குப் பேருதான் “மார்க்கெட் டைமிங்”. 

ஆனா, பங்கு சந்தை ஏற்ற இறக்கங்கள் இயல்பானவை. சில சமயத்துல மார்க்கெட் தொடர்ந்து இறங்கிட்டே இருக்கற மாதிரி இருக்கும். அந்த சமயத்துல அவசரப்பட்டு வித்துட்டிங்கனா நஷ்டம்தான் வரும். உங்களுக்கு உடனடியா பணம் தேவைப்படலைன்னா, விலை கம்மியா இருக்கும்போது விக்கிறது நல்லதில்லை. இப்படித்தான் கொரோனா டைம்ல, நிறைய பேர் பயந்து போய், பங்குகளை வித்துட்டாங்க. ஆனா, கொஞ்ச நாள்லயே மார்க்கெட் திரும்பவும் ஏற ஆரம்பிச்சுடுச்சு. அப்போ விக்காம இருந்தவங்க நல்ல லாபம் பாத்தாங்க.

நாம முதலீடு பண்றது எதுக்கு? லாபம் பாக்கத்தானே? ஆனா, அந்த லாபம் உடனே கிடைக்கும்னு எதிர்பார்க்கக் கூடாது. கொஞ்ச நாள் பொறுமையா இருக்கணும். சில பேர், மார்க்கெட் கொஞ்சம் இறங்கினாலே பயந்து போய், பங்குகளை வித்துடுவாங்க. இது தப்பு. கடந்த காலத்தையெல்லாம் பாத்தா, நீண்ட காலத்துல பங்குச் சந்தை எப்பவும் ஏறுமுகமாத்தான் இருந்துருக்கு. அதனால, நீண்ட கால முதலீடு பண்றவங்க, மார்க்கெட் டைமிங் பத்தி கவலைப்பட வேண்டாம்.

முதலீட்டு கால்குலேட்டர்ஸ் பயன்படுத்தி, நீண்ட காலத்துல உங்க முதலீடு எப்படி வளரும்னு பாருங்க. அதுல, நீங்க எவ்வளவு பணம் போடப்போறீங்க, எவ்வளவு வருஷத்துக்கு போடப்போறீங்க, எதிர்பார்க்கும் லாபம் எவ்வளவு, பணவீக்கம் எவ்வளவுனு எல்லாம் போட்டு பாத்தா, உங்க முதலீடு எப்படி வளரும்னு தெரிஞ்சுக்கலாம்.

மியூச்சுவல் ஃபண்ட்ல முதலீடு பண்றீங்கன்னா, மியூச்சுவல் ஃபண்ட் கால்குலேட்டர் பயன்படுத்தி, நீண்ட காலத்துல உங்க முதலீடு எப்படி வளரும்னு பாக்கலாம்.

9. அவசரத் தேவைக்குனு இருக்கிற பணத்தை முதலீடு பண்ணாதீங்க!

நம்ம வாழ்க்கையில எப்போ என்ன நடக்கும்னு சொல்ல முடியாது. திடீர்னு செலவு இல்ல அவசரத் தேவை ஏதாவது வரலாம். அதுக்காக, நம்மகிட்ட கொஞ்சம் பணம் கையில இருக்கணும். முதலீடு பண்றப்போ, இந்த அவசரத் தேவைக்குனு வைத்திருக்கிற மட்டும் தொடக் கூடாது. ஏன்னா, முதலீட்டுல நஷ்டம் வரவும் வாய்ப்பு இருக்கு. நஷ்டம் வந்தா, அவசரத் தேவைக்கு பணம் இல்லாம கஷ்டப்பட வேண்டி வரும்.

அதனால, முதலீடு பண்றதுக்கு முன்னாடி, எவ்வளவு பணம் அவசரத் தேவைக்கு வெச்சுக்கணும்னு முடிவு பண்ணிடுங்க. அந்தப் பணத்தை மட்டும் முதலீடு பண்ணாதீங்க. மத்த பணத்தை வெச்சு முதலீடு பண்ணுங்க. முதலீட்டு கால்குலேட்டர்ஸ் பயன்படுத்தி, எவ்வளவு பணம் முதலீடு பண்ணலாம், எவ்வளவு ரிஸ்க் எடுக்கலாம்னு எல்லாம் பாத்துக்கோங்க.

10. முதலீட்டு கட்டணங்களை கவனிக்காம விட்டுடாதீங்க!

முதலீட்டு கட்டணங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் அவை காலப்போக்கில் உங்கள் வருமானத்தைக் குறைக்கலாம். எதிலும் முதலீடு செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட முதலீட்டு கட்டணங்களைப் புரிந்து கொள்ளுங்கள். சில முதலீடுகள்ள கட்டணம் கம்மியா இருக்கும், சிலதுல அதிகமா இருக்கும். கட்டணம் கம்மியா இருக்கிற முதலீடுகளைத் தேர்ந்தெடுக்கிறது நல்லது. ஆனா, முதலீட்டு கட்டணங்கள் சிறியதாகத் தோன்றினாலும் அவற்றைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

நிர்வாகக் கட்டணங்கள், வர்த்தக கமிஷன்கள் மற்றும் கணக்குக் கட்டணங்கலும் இருக்கலாம். நாம முதலீடு பண்றப்போ, லாபத்தை மட்டும் பாத்து, கட்டணத்தை கவனிக்காம விட்டுடுவோம். ஆனா, இந்த கட்டணம் கொஞ்சம் கொஞ்சமா நம்ம லாபத்தைக் குறைச்சிடும். உதாரணமா, நீங்க ஒரு மியூச்சுவல் ஃபண்ட்ல முதலீடு பண்றீங்கன்னா, அதுக்கு வருஷா வருஷம் நிர்வாகக் கட்டணம் கட்டணும். இந்த கட்டணம் அதிகமா இருந்தா, உங்க லாபம் கம்மியாயிடும்.

அதனால, முதலீடு பண்றதுக்கு முன்னாடி, கட்டணம் எவ்வளவுன்னு தெரிஞ்சு வச்சுக்கோங்க. முதலீட்டு கால்குலேட்டர்ஸ் பயன்படுத்தியும்  கட்டணம் எவ்வளவுன்னு துல்லியமாக கணக்குப் போட்டுப் பாக்கலாம்.

11. முதலீடு பண்ணும்போது நிதானம் மிகவும் முக்கியம்!

முதலீடு செய்யும் போது உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக முடிவெடுக்க வேண்டும். சில சமயங்கள்ல, நம்ம நண்பர்கள், சொந்தக்காரங்க எல்லாரும் ஒரு முதலீடு பத்தி நல்லா பேசுவாங்க. “அதுல நிறைய லாபம் கிடைக்குதாம், நீயும் பணம் போடு”ன்னு சொல்லுவாங்க. இதைத்தான் “ஹைப்”னு சொல்வாங்க.

ஆனா, ஹைப் இருக்கிறதால மட்டும் அதுல பணம் போடக் கூடாது. முதலீடு பத்தி நல்லா ரிசர்ச் பண்ணிட்டு, முதலீட்டின் அடிப்படை அம்சங்கள், சந்தை நிலவரம், ரிஸ்க் என்ன, லாபம் என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு அப்புறம்தான் முடிவெடுக்கணும்.

12. முதலீட்டை பேலன்ஸ் பண்றது முக்கியம்!

நாம எல்லாரும் பணத்தை பல இடங்கள்ல முதலீடு பண்ணுவோம் இல்லையா? ஷேர் மார்க்கெட், ஃபிக்ஸட் டெபாசிட், தங்கம்னு. ஆனா, இந்த முதலீடுகள் எல்லாம் ஒரே மாதிரி லாபம் கொடுக்காது. சில சமயங்கள்ல, ஷேர் மார்க்கெட் நல்லா லாபம் கொடுக்கும். சில சமயங்கள்ல, ஃபிக்ஸட் டெபாசிட் நல்லா லாபம் கொடுக்கும். இப்படி, நம்ம முதலீடுகள் எல்லாம் ஒரே மாதிரி லாபம் கொடுக்காதுன்னா, நம்ம என்ன பண்ணனும்? 

வருடத்திற்கு ஒரு முறை உங்கள் முதலீட்டை பரிசீலிக்கவும். எந்த முதலீடு அதிகமாக வளர்ந்திருக்கிறது, எது குறைந்து இருக்கிறது என பாருங்கள்.

உதாரணத்துக்கு, நீங்கள் முதலீடு செய்யும் போது, 50% பங்கு சந்தை (Stocks) + 50% நிலையான முதலீடு (Fixed Deposits) வைச்சிருக்கலாம். சில ஆண்டுகளுக்குப் பிறகு, பங்கு சந்தை அதிகம் வளர்ந்து 70% ஆகலாம். இதனால், உங்கள் முதலீட்டு திட்டம் மாற்றம் அடையும். 

ஒரு முதலீடு அதிகமாக வளர்ந்தால், அதிலிருக்கும் ரிஸ்க்கும் அதிகமாகும். இதைப் பாக்காம இருந்தா, ஒரு நாள் சந்தை சரியும்போது பெரிய நஷ்டம் வந்துவிடும். அதனால தான், ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு தடவை உங்கள் முதலீட்டைப் பரிசீலித்து, சமநிலையாக்க வேண்டும்.

முதலீட்டின் உண்மையான நோக்கம் உங்கள் நீண்ட கால இலக்குகளை அடைய உதவுவதுதான். ஆனால் சமநிலை தவறினால், இலக்குகளுக்கு பாதிப்பு ஏற்படும். சரியான நேரத்தில் ரிபாலன்ஸிங் செய்யவில்லை என்றால், சந்தை சரிந்தால் பெரிய நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.

13. உங்கள் முதலீட்டு வளர்ச்சியை கண்காணிக்க மறந்துவிடாதீர்கள்!

நாம பணத்தைப் போட்டுட்டு, அது அப்படியே வளர்ந்துட்டே இருக்கும்னு நினைச்சுக்கிட்டு இருக்கக் கூடாது. இது தப்பு. அவ்வப்போது நம்ம முதலீடுகள் எப்படி இருக்குன்னு பாக்கணும். மார்க்கெட் நிலவரம் மாறும்போது, நம்ம முதலீடுகளும் மாறும். அதனால, அவ்வப்போது நம்ம முதலீடுகளைப் பாத்துக்கிறது ரொம்ப முக்கியம். எவ்வளவு லாபம் கிடைச்சிருக்கு, எவ்வளவு நஷ்டம் வந்துருக்குன்னு தெரிஞ்சுக்கணும்.

முதலீட்டு கால்குலேட்டர்ஸ் பயன்படுத்தி, நம்ம முதலீடுகள் எப்படி இருக்குன்னு பாக்கலாம். அதுல, நம்ம இலக்குகள் என்ன, நம்ம முதலீடுகள் எவ்வளவு லாபம் கொடுக்குதுன்னு எல்லாம் பாக்கலாம்.

14. முதலீடு பண்றதுக்கு முன்னாடி கொஞ்சம் ஹெல்ப் கேளுங்க!

முதலீடு பத்தி உங்களுக்கு எதுவும் தெரியலைன்னா, தனியா முதலீடு பண்றது கொஞ்சம் கஷ்டம்தான். அதுக்காக, முதலீடு பண்ணாமயே இருக்கக் கூடாது. உங்களுக்கு உதவி பண்ண நிறைய பேர் இருக்காங்க.

நிதி ஆலோசகர்கள் (Financial Advisors) உங்க இலக்குகளுக்கு ஏத்த மாதிரி, எந்தெந்த முதலீடுகள்ல பணம் போடலாம்னு சொல்லுவாங்க. ரிஸ்க் எடுக்க தைரியம் இல்லாதவங்களுக்கு, ரிஸ்க் கம்மியா இருக்கற முதலீடுகள் பத்தி சொல்லுவாங்க. ரிஸ்க் எடுக்க தைரியம் உள்ளவங்களுக்கு, ரிஸ்க் அதிகமா இருக்கற முதலீடுகள் பத்தி சொல்லுவாங்க.

முதலீட்டு கால்குலேட்டர்ஸ் (Investment Calculators) பயன்படுத்தி, நீங்க எவ்வளவு பணம் போடணும், எவ்வளவு லாபம் கிடைக்கும்னு எல்லாம் பாக்கலாம். இதுல, மியூச்சுவல் ஃபண்ட் கால்குலேட்டர், ஆர்டி கால்குலேட்டர், எஸ்ஐபி கால்குலேட்டர்னு  நிறைய வகைகள் இருக்கு.

பாதுகாப்பான முதலீடுகள் இருக்கா?

நம்ம இதுவரைக்கும் பேசிக்கிட்டிருந்தது, முதலீடு பண்றப்போ தவிர்க்க வேண்டிய தப்புகள் பத்தி. இப்போ, பாதுகாப்பான முதலீடுகள் பத்தி கொஞ்சம் பேசலாம்.

முழுசா பாதுகாப்பான, மார்க்கெட் ஏற்ற இறக்கங்களால பாதிக்கப்படாத, பணவீக்கத்தால பாதிக்கப்படாத, கட்டணம் எதுவும் இல்லாத, சேமிக்கவும் கடன் வாங்கவும் உதவியா இருக்கிற, நல்ல லாபம் கொடுக்கிற, டிவிடெண்ட், போனஸ் எல்லாம் கொடுக்கிற ஒரு முதலீடு இருந்தா எப்படி இருக்கும்? சூப்பரா இருக்கும் இல்லையா? அப்படி ஒரு முதலீடு இருக்கு.

அதுதான் சிட் ஃபண்ட்!

சிட் ஃபண்ட்: ஒரு பாதுகாப்பான முதலீடு

சிட் ஃபண்ட் என்பது சேமிப்பு மற்றும் கடன் வாய்ப்பை ஒரே இடத்தில் தரும் ஒரு நம்பகமான முதலீட்டு முறை. இது பங்குச் சந்தை சார்ந்த முதலீடு அல்ல. அதனால சந்தையின் ஏற்ற இறக்கங்கள் உங்கள் பணத்தை பாதிக்காது. சிட் ஃபண்ட்ல நீங்க ரெகுலரா பணம் கட்டுவீங்க. 

ஃபிக்ஸட் டெபாசிட் மாதிரி இல்லாம, உங்களுக்கு உடனே பணம் தேவைப்பட்டா, சிட் ஃபண்ட்ல ஏலத்துல கலந்துக்கிட்டு பணத்தை வாங்கிக்கலாம். வங்கில கடன் வாங்குற மாதிரி நிறைய ஃபார்மாலிட்டிஸ்லாம் இருக்காது. ரெகுலரா சிட் ஃபண்ட்ல பணம் கட்டுறனால சேமிக்கிற பழக்கம் வரும். தேவைப்பட்டா, பெரிய தொகையை வாங்கிக்கலாம். அவசர செலவுகளுக்கு இது ரொம்ப உதவியா இருக்கும். டிவிடெண்ட் மற்றும் போனஸ் கிடைக்கும். மாதந்தோறும் தவணையை செலுத்துவதால், ஒழுங்கான சேமிப்பு பழக்கம் உருவாகும்.

முதலீட்டுத் தவறுகளைத் தவிர்த்து லாபம் பெறுங்கள்!

முதலீடு என்பது ஒரு நீண்ட பயணம். இந்த பயணத்தில நிறைய ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஒவ்வொரு முதலீட்டுலயும் பெரிய லாபம் கிடைக்கணும்னு எதிர்பார்க்கக் கூடாது. பொறுமையா இருந்தா, இந்த பயணத்தில வெற்றி பெறலாம். நாம இன்னைக்கு முதலீடுபண்றப்போ செய்யக்கூடாத  தப்புகள் பத்தி பேசினோம். இந்த தப்புகளைத் தவிர்த்து, புத்திசாலித்தனமா முதலீடு பண்ணுனா, நீண்ட காலத்துல நல்ல லாபம் பாக்கலாம். பணத்தைப் பாதுகாப்பா வெச்சுக்கிட்டு, லாபம் பாருங்க.

சிட் ஃபண்ட் முதலீடு பத்தி தெரிஞ்சுக்கணும்னா, எங்க நிபுணர்களைத் தொடர்பு கொள்ளுங்க.

இந்த தப்புகள்ல ஏதாவது நீங்க பண்ணிருக்கீங்களா? உங்க அனுபவங்களை கமெண்ட்ல சொல்லுங்க.

Share your views in the comments section!

Your email address will not be published. Required fields are marked *

Fill the Form

We are happy to assist you!

Powered by Kopuram Chits Private Limited